Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கரூரில் பிளாஸ்டிக் "கப்' பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்ஷன்'

Print PDF

தினமலர் 02.06.2010

கரூரில் பிளாஸ்டிக் "கப்' பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்ஷன்'

கரூர்: கரூர் நகராட்சி பகுதியில் நேற்று முதல் பிளாஸ்டிக் "கப்' பயன்படுத்த தடை அமலாக்கப்பட்டதால், நகராட்சி காதாரத்துறை ஊழியர்கள், கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் "கப்' பறிமுதல் செய்தனர். நகராட்சி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் "கப்' பயன்பாட்டை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கரூர் நகராட்சி கமிஷனராக உமாபதி பொறுப்பேற்றதும், முதற்கட்டமாக நகரில் பிளாஸ்டிக் "கப்' பயன்பாட்டை கட்டுப்படுத்த அறிவித்தார்.

ஏற்கனவே கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் "கப்'களை அப்புறப்படுத்த ஜூன் முதல் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது. அனைத்து பலசரக்கு கடை, திருமண மண்டபம், சினிமா தியேட்டர், குளிர்பானம் மற்றும் டீக்கடைகளில் நகராட்சியின் தீர்மானம் குறித்து அறிவிக்கப்பட்டு, கடை உரிமையாளர்களிடம் எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்கப்பட்டது. பிளாஸ்டிக் "கப்' களை அப்புறப்படுத்த கடைகளுக்கு அளிக்கப்பட்ட காலஅவகாசம் நேற்று முன்தினம் முடிந்ததால், நேற்று காலை நகராட்சியின் சுகாதார அலுவலர் மற்றும் ஏழு துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் தலா ஐந்து பேர் கொண்ட குழு பல பகுதியிலும் கடைகளில் ஆய்வு நடத்தியது.

முருகநாதபுரம் கடைவீதியில் மட்டும் சில கடைக்காரர்கள் பிரச்னை எழுப்பியபோதும், ஊழியர்கள் தடை அறிவிப்பை அமலாக்குவதில் தீவிரமாக இருந்தனர். சுமார் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் "கப்' பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இத்தகைய ஆய்வு கடைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட அனைத்து பொது இடங்களிலும் அவ்வப்போது நடத்தப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

3ம் நிலை நகராட்சிகளில் இருந்து பேரூராட்சி பணிக்கு செல்ல 206 ஊழியர்களுக்கு அனுமதி

Print PDF

தினகரன் 01.06.2010

3ம் நிலை நகராட்சிகளில் இருந்து பேரூராட்சி பணிக்கு செல்ல 206 ஊழியர்களுக்கு அனுமதி

சிவகங்கை, ஜூன் 1: மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்களில் இருந்து பேரூராட்சி அலுவலகங்களுக்கு பணிக்கு செல்ல 206 பணியாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படக்கூடிய 49 மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் (மூன்றாம்நிலை நகராட்சிகள் அலகு) 217 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் செயல் அலுவலர்கள்&30, தலைமை எழுத்தர் அல்லது உதவியாளர்&19, இளநிலை உதவியாளர்&84, வரித்தண்டலர்&54, சுகாதார ஆய்வா ளர்&13, சுருக்கெழுத்து தட்டச்சர்&1, தட்டச்சர்&2, பதிவறை எழுத்தர்&1, அலுவலக உதவியாளர்&1, இளநிலை பொறியாளர்&1 என 206 பணியாளர்கள் பேரூராட்சி அலுவலக பணிகளுக்கு செல்ல அரசிடம் விருப்பம் தெரிவித்திருந்தனர். இவர்களில் 11 பணியாளர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

விருப்பம் தெரிவித்த 206 பணியாளர்களையும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அனைத்து பணியாளர்களையும் ஒரே நேரத்தில் பேரூராட்சி அலுவலகங்களுக்கு செல்ல அனுமதித்தால் மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாத நிலை ஏற்படும். நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சி நிர்வாக இயக்குநர் கலந்து ஆலோசித்து கீழ்க்கண்ட காலத்திற்குள் பணியாளர்களை இடமாற்றம் செய்யலாம்.

செயல் அலுவலர்களை ஒரு வருடத்திற்குள்ளும், தலைமை எழுத்தர் அல்லது உதவியாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர்களை 4 மாதத்திற்குள் பேரூராட்சி அலுவலங்களுக்கு மாற்றலாம். இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் மற்றும் தட்டச்சர்களை 8 மாதத்திற்குள்ளும், சுகாதார ஆய்வாளரை 2 மாதத்திற்குள்ளும் பேரூராட்சி அலுவலகங்களுக்கு மாற்றலாம். சுருக்கெழுத்து தட்டசருக்கு காலக்கெடு இல்லை. பணியாளர்களை மாற்றுவதால் மூன்றாம்நிலை நகராட்சிகளில் ஏற்படும் பணியிடங்களை படிப்படியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால்த்துறை செயலர் நிரஞ்சன்மார்டி உத்தரவிட்டுள்ளார்.

 

மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டமைப்பு கெடு தேதியை நீட்டிக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 01.06.2010

மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டமைப்பு கெடு தேதியை நீட்டிக்க மாநகராட்சி முடிவு

பெங்களூர், ஜூன் 1: மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதற்கான கெடுதேதியை நீட்டிக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40க்கு 60 சதுரஅடி பரப்பில் கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ மாநில அரசு கட்டாய சட்டம் கொண்டுவந்தது. அச்சட்டத்தின்படி, 2010 மே 27ம் தேதியுடன் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். இதனை செய்ய தவறும்பட்சத்தில் குடிநீர் மற்றும் வடிகால் இணைப்புகளை துண்டிக்க பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மே 27ம் தேதிக்குள் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ இயலாததால், கெடுதேதியை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, கெடுதேதியை நீட்டிக்க, பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு வாரியதலைவர் பி.பி.ராமமூர்த்தி மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சட்டத்திருத்தம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் நிறைவேற்றப்படும் என்பதால், கெடுதேதியை செயல்படுத்துவதை வாரியம் தளத்தியுள்ளது.

இது குறித்து வாரிய தலைமை பொறியாளர் கெம்பராமையா கூறியதாவது: பெங்களூரில் இதுவரை 25 ஆயிரம் வீடுகளில் மழைநீர்சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. கடந்த இருமாதங்களில் மட்டும் 12 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேமிப்பு நிறுவப்பட் டுள்ளது.

ஆளுநரின் ஒப்புதலோடு கெடுதேதியை நீட்டிக்க, மாநில அரசு அவசர சட்டம் கொண்டுவரலாம். மழைநீர் சேமிப்புவிவகாரத்தில் இதனையும் பின்பற்ற முடியவில்லை. எனவே, கெடுதேதியை அலுவலகரீதியாக அல்லாமல் நீட்டிக்கிறோம். இதனால் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை நிறுவாத வீடுகளுக்கு அபராதம் விதிக்கமாட்டோம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 414 of 506