Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆலந்தூர் நகராட்சி எச்சரிக்கை சாக்கடை இணைப்பு பெறாத வீடுகளுக்கு குடிநீர் துண்டிப்பு

Print PDF

தினகரன் 01.06.2010

ஆலந்தூர் நகராட்சி எச்சரிக்கை சாக்கடை இணைப்பு பெறாத வீடுகளுக்கு குடிநீர் துண்டிப்பு

ஆலந்தூர், ஜூன் 1: ஆலந்தூர் பகுதியில் பாதாள சாக்கடைக்கு இணைப்பு பெறாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று, நகராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலந்தூர் நகரமன்ற கூட்டம், மன்றக்கூடத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஆ.துரைவேலு தலைமை வகித்தார். துணைத்தலைவர் என்.சந்திரன், ஆணையர் என்.மனோகரன், நகரமைப்பு அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நடந்த விவாதம் வருமாறு:

வெங்கட்ராமன் (எதிர்க்கட்சி தலைவர்):

எனது வார்டில் 11 நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

நாஞ்சில் பிரசாத்(காங்கிரஸ்):

ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விட்டும், பணி நடக்க வில்லை.

டார்வின்(அதிமுக): பழவந்தாங்கல் பி.வி.நகர் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.5 லட்சம் செலவில் வாங்கப்பட்ட ஜெனரேட்டர் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதை பயன்படுத்தினால் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் குடிநீர் விநியோகிக்க ஏதுவாக இருக்கும்.

ஷீலா (அதிமுக);

மக்கள் தொகை எண்ணிக்கைப்படி எனது வார்டில் ரேஷன் கடைஅமைத்து தரவேண்டும்.

எம்.ஆர்.சீனிவாசன் (திமுக):

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அதிகம் அவதியுறுகின்றனர். சீரான மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

(இதே கருத்தை சச்சீஸ்வரி (திமுக), ஷீலா (அதிமுக), டார்வின் (அதிமுக) வலியுறுத்தினர்).

தலைவர் ஆ.துரைவேலு:

அனைத்து வார்டுகளிலும் மின்சாரம் தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட மின் துறை அதிகாரிகளை அழைத்து பேசப்படும். குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் வரும் 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.

அவ்வாறு வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 

மாநகராட்சி மண்டல சேவை மையத்தில் கமிஷனர் ஆய்வு

Print PDF

தினகரன் 01.06.2010

மாநகராட்சி மண்டல சேவை மையத்தில் கமிஷனர் ஆய்வு

நெல்லை, ஜூன் 1: நெல்லை மாநகராட்சி மண்டல சேவை மையத்தில் நேற்று கமிஷனர் சுப்பையன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் கடந்த 2 நாட்களாக மண்டலம் வாரியாக அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார். நேற்று நெல்லை மண்டல சேவை மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வரி செலுத்த வரும் நபர்களுக்கு உரிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் வரி பாக்கியை முழுவதுமாக செலுத்துமாறு கேட்டு கொண்டார். பாளை மண்டலத்தில் ஆய்வு செய்த கமிஷனர், அங்கு அடிக்கடி தீப்பற்றி எரியும் ஆவண காப்பக அறையை சுத்தப்படுத்த உத்தரவிட்டார். அதன் பேரில் ஆவண அறை சரி செய்யப்பட்டது.

 

சீல் வைத்த உணவு விடுதியை மீண்டும் நடத்த நகராட்சி, சுகாதாரத்துறை உரிமம் சான்று அவசியம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

Print PDF

தினகரன் 01.06.2010

சீல் வைத்த உணவு விடுதியை மீண்டும் நடத்த நகராட்சி, சுகாதாரத்துறை உரிமம் சான்று அவசியம் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

அரியலூர், ஜூன் 1: அரியலூர் நகரில் சீல் வைக்கப்பட்ட 11 உணவு விடுதியை திறக்க நகராட்சி, சுகாதாரத்துறை அலுவலக உரிமம் சான்று அவசியம் என்று உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச் சரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் நகரில் உள்ள சில உணவு விடுதிகளில் தர மற்ற வகையில் உணவு தயாரிப்பதாக கலெக்டர் ஆபிரகாமுக்கு தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து கடந்த 25ம் தேதி கலெக்டர் ஆபி ரகாம் உத்தரவின் பேரில் அதிகாரிகள், அரியலூர் நகரில் 25 உணவு விடுதிகளை சோதனையிட்டனர்.

சுகாதாரமற்ற முறையில், பாதுகாப்பு இல்லாமல் உணவு வகைகளை தயாரித்தது, சமையலறை, உணவு உண்ணும் இடங்களை அசுத்தமாக வைத்திருந்தது, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட 11 உணவு விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

சீல் வைக்கப்பட்ட கடைகளுக்கு 22 விதிமுறை அடங்கிய எச்சரிக்கை கடித் வழங்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது. இதன் பின் னர் சீல் வைக்கப்பட்ட கடைகளை திறந்து விடப்பட்டன. அரசு விதிகளின் படி உணவு விடுதிகளை அமைத்த பின்னர் நகராட்சி, சுகாதாரத்துறைக்கு மனு செய்ய வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று உரிமம் வழங்கிய பின்னரே உணவு விடுதிகளை நடத்தவேண்டுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அரியலூரில் உள்ள உணவு விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நகரில் பெரும்பாலான உணவுவிடுதிகளில் சுண்ணாம்பு அடிப்பது, தனி சமையலறை அமைப் பது, நல்ல குடிநீர் வழங்குவதற்கான புனரமைப்பு பணி களை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.

 


Page 415 of 506