Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன் 31.05.2010

வரி செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், மே 31: திருப்பூர் அடுத்துள்ள நல்லு£ர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது.

இதில் பெரும்பாலா னோர் நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர்வரி, சொத்துவரி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்தாமல் இருந்து வருகின்றனர்.

இதனால் நகராட்சி நிர்வாகத்திற்கு பல லட்சம் வரி வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும், ஆட்டோக்கள் மூலம் விளம்பரம் செய்தும், சிலர் வரி செலுத்தாமல் நகராட்சி நிர்வாகத்தை ஏமாற்றி வருகின்றனர். இதையடுத்து வரியினங்களை செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட் டது.

இதுகுறித்து செயல் அலுவலர் ராமசாமி (பொ றுப்பு) கூறுகையில், குடிநீர்வரி, வீட்டுவரி உள்ளிட்ட வரியினங்களை செலுத்தாதவர்கள், விரைவில் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்றார். நல்லூர் செயல் அலுவலர் எச்சரிக்கை

 

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய இடம்: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி 31.05.2010

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய இடம்: அமைச்சர் ஆய்வு

சிவகங்கை, மே 30: இளையான்குடி பேரூராட்சிக்கான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் பார்வையிட்டார். பேரூராட்சிக்குள்பட்ட மாணிக்கவாசகர் நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு கருவி நிறுவப்பட உள்ளது.

இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இளையான்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன் ஆகியோர் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். இதையடுத்து, சுத்திகரிப்பு கருவியை நிறுவ சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதன்பேரில், இளையான்குடிக்கு வருகை தந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.என். மைதீன்கான், சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர், இதற்கான அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது, அமைச்சருடன் சுப. மதியரசன் எம்.எல்.ஏ., பேரூராட்சித் தலைவர் பி.ஏ. நஜிமுதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு. முருகானந்தம், கவுன்சிலர் டி.எம்.ஏ. யாசின், கிராம நிர்வாக அலுவலர் அங்குசாமி மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

 

அனுமதி இல்லாத மனைகளை வாங்காதீர் பண்ருட்டி நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்    31.05.2010

அனுமதி இல்லாத மனைகளை வாங்காதீர் பண்ருட்டி நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி நகர பகுதியின் நகராட்சி அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பு :-பண்ருட்டி நகர பகுதியில் விற்கப்படும் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளில் மனைகளை எவரும் வாங்க வேண்டாம். இந்த மனை பிரிவுகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தி தரப்படமாட்டாது. மேலும், அனுமதி பெறாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட நகராட்சி நிர்வாகத்தால் கட்டட அனுமதியும் வழங்கப்படமாட்டாது.இந்த அறிவிப்பையும் மீறி, அனுமதி பெறாத மனைகளை வாங்கி வீடு கட்டினால் அதனை நகராட்சி நிர்வாகத்தால் தடை செய்வதோடு, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். எனவே பொதுமக்கள் மனைகள் வாங்கும் போது அவை அனுமதி பெற்றவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 


Page 417 of 506