Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புழல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் பற்றி அதிகாரிகள் நேரில் ஆய்வு

Print PDF

தினகரன் 27.05.2010

புழல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் பற்றி அதிகாரிகள் நேரில் ஆய்வு

புழல், மே 27: புழல் மாரியம்மன் நகர், சக்திவேல் நகர், பாலகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தனியார் கம்பெனி, ஆலைகளிலிருந்து வரும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார் கூறினர்.

குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது பற்றி தினகரன்நாளிதழில் நேற்று படம் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சந்திரசேகரன், உதவி செயற்பொறியாளர் தென்னரசு, உதவி பொறியாளர் தனபாண்டியன் ஆகியோர் புழல் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

செயல் அலுவலர் நவநீத குமார், பேரூராட்சி தலைவர் மகாதேவி அன்பழகன் ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் அவர்களுடன் சம்மந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு மழைநீர் கால்வாய் கட்டுவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவரிடம் கூறினர். பிறகு, புழல் மத்திய சிறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரையும் அவர்கள் ஆய்வு செய்தனர். கழிவுநீர் வெளியேறாமல் நடவடிக்கை எடுக்க சிறை துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டனர்.

Last Updated on Thursday, 27 May 2010 11:36
 

அரியலூரில் தரமற்ற உணவு தயாரித்த 11 ஓட்டல்களுக்கு சீல்

Print PDF

தினகரன்      26.05.2010

அரியலூரில் தரமற்ற உணவு தயாரித்த 11 ஓட்டல்களுக்கு சீல்

அரியலூர், மே 26: அரியலூர் நகரில் தரமற்ற உணவு தயாரித்த 11 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அரியலூர் நகரில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற, பாதுகாப்பற்ற வகையில் உணவுபொருள் தயாரிக்கப்படுவதாக கலெக்டர் ஆபிரகாமுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் ஆர்.டி.. ஜீவரத்தினம், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவராசு, பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை மாவட்ட அலுவலர் வேலுசாமி, ஊராட்சி நிர்வாக உதவி இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி தலைமையில் 4 குழுவினர் அரியலூர் நகரில் உள்ள ஓட்டல்களில் நேற்று சோதனையிட்டனர்.

பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, செந்துறை சாலை, மாதாகோவில் சாலை, ரயில்வேகேட், கைலாசநாதர் கோயில் தெருவில் உள்ள 25 ஓட்டல்களில் சோதனை செய்யப்பட்டது. சுகாதாரமற்ற, பாதுகாப்பு இல்லாமல் உணவு வகைகளை தயாரித்தது மற்றும் சமையல் அறை, உணவு உண்ணும் இடத்தை அசுத்தமாக வைத்திருந்தது, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறாமல் நடத்தியது ஆகியவற்றுக்காக 11 ஓட்டல்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அபராத தொகையை செலுத்திய பின்னர் கடைகளை சீர்செய்து சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் அனுமதி பெற்ற பின் திறக்க வேண்டுமென ஓட்டல் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வில் தாசில்தார்கள் பாலாஜி, மகேஷ்வரன், மாவட்ட தலைமை மருத்துவர் சிவக்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சண்முகம், நகராட்சி செயல் அலுவலர் சமயச்சந்திரன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடவடிக்கை

 

மாநகராட்சி இடத்தில் டாஸ்மாக் பார்: அதிகாரி உத்தரவின் பேரில் இடிப்பு

Print PDF

தினமணி      26.05.2010

மாநகராட்சி இடத்தில் டாஸ்மாக் பார்: அதிகாரி உத்தரவின் பேரில் இடிப்பு

மதுரை, மே 25: மதுரை மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த டாஸ்மாக் பார் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை புல்டோசர் உதவியுடன் இடிக்கப்பட்டது. அண்ணா நகர் குருவிக்காரன் சாலை பாலம் அருகே உள்ளது அரசு டாஸ்மாக் பார். இதன் அருகிலேயே தனியாருக்குச் சொந்தமான பார் உள்ளது.

பார் உள்ள இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் என்றும், அதை ஆக்கிரமித்து பார் நடத்தப்பட்டு வருவதாகவும் அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் உத்தரவின்பேரில் நகரமைப்பு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது அந்த பார் செயல்பட்டு வந்த 28 சென்ட் நிலம் மாநகராட்சிக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்த இடித்துவிட்டு ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி நகரமைப்பு அதிகாரி முருகேசன் முன்னிலையில் அந்த இடத்தை தொழிலாளர்கள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர்.

 


Page 419 of 506