Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

முதல்வர் அலுவலக மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

Print PDF

தினமணி      25.05.2010

முதல்வர் அலுவலக மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம், மே 24: தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து வரும் புகார் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை ஆட்சியர் த..ஹரிஹரன் கேட்டுக்கொண்டார்.

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 162 மனுக்கள் பெறப்பட்டன.

குடும்ப அட்டைக்கு பொருள் வழங்கக் கோருதல், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கோருதல், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், வங்கிக் கடன் உள்பட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு மனுதாரர்களுக்கு 15 நாள்களுக்குள் பதிலளிக்குமாறும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

பின்னர் ஆட்சியர் பேசுகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட மனுக்கள் 17 நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நிலுவையாக இருந்து வருகின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முதல்வர் அலுவலக தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்கள் மூலமாக பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் பெறப்படும் மனுக்கள் ஆகியன மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராமேசுவரம் நகராட்சி கழிவுநீர்ப் பிரச்சினை தொடர்பாக வந்த புகார் மனு மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். ஒரு சில துறைகள் மனுக்களை குறைவாக வைத்திருந்தாலும் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக பார்க்கும்போது அவை அதிகமானதாக இருப்பதால் சம்பந்தப்பட்ட துறைகள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் வரப்பெறும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். உடனுக்குடன் பதில் அளித்து எவ்வித மனுக்களும் நிலுவையில் இல்லாத துறையினரை ஆட்சியர் பாராட்டினார்.

மாவட்ட அளவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடத்தை பிடித்த அ.அபிராமி, அருண்பாண்டியன், ராஜ்குமார் (2-வது இடம்), ஷாமிலிதேவி (3-வது இடம்), சௌந்தர்யா (4-வது இடம்), விஜயசுப்பிரமணியம் (5-வது இடம்) ஆகியோருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய பரிசையும் மேல்படிப்பு படிப்பதற்கான கடன் பெறுவதற்கான உத்தரவையும் ஆட்சியர் வழங்கினார்.

 

பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணி : மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

Print PDF

தினமலர்   25.05.2010

பெரம்பலூரில் பாதாள சாக்கடை திட்டப்பணி : மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட எளம்பலூர் சாலை மற்றும் வெங்கடேசபுரம் காலனி ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கலெக்டர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.

கழிவுநீர் சேகரிப்பு, குழாய்களின் தரம் குறித்தும் அதன் நீளம், அகலம் ஆகியவற்றை அளந்து பார்த்தும் தரத்தையும், குழாய்கள் பதிக்கும் பணிகள், ஆள் நுழைவு தொட்டிகளையும் கலெக்டர் விஜயகுமார் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் கலெக்டர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் நகரில் 23.38 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கிறது. 30 சதவீத 6.73 கோடி பாய் அரசு மானியமாகவும், 46 சதவீதமாகிய 10.32 கோடி ரூபாயை அரசு கடனாகவும் வழங்கப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்பாகிய 24 சதவீதம் 5.37 கோடி ரூபாயில் இதுவரையில் 1.25 கோடி ரூபாய் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. வீட்டின் அளவிற்கேற்றவாறு பொதுமக்களிடமிருந்து பங்களிப்புத் தொகை பெறப்படுகிறது. இத்திட்டம் இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் பங்களிப்பில் மீதமுள்ள 4.12 கோடி ரூபாய் நகராட்சி மூலமாக கூடிய விரைவில் பெறப்படவுள்ளது. பெரம்பலூர் நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் இதுவரை 82 சதவீதம் குழாய்கள் பதிக்கும் பணிகளும், ஆள் நுழைவு தொட்டிகள் கட்டும் பணிகளும் 50 சதவீதம் வீட்டு இணைப்பு குழாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அரணாரை, விளாமுத்தூர் சாலை அதன் பகுதிகளில் கழிவுநீர் மேலேற்று நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது. துறைமங்கலத்தில் பிரதான கழிவுநீர் மேலேற்று நிலையத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படும். இச்சுத்திகரிப்பு நிலையம் தவிர அரசு அட்டவணைப்படி ஜனவரி 2011 முடிய வேண்டிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும். டிசம்பர் 2011க்குள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப்பணிகளும் முடிவுற்று இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

பெரம்பலூர் நகர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை பெரம்பலூர் எம்.எல்.., நகராட்சி கமிஷனர், இன்ஜினியர்களுடன் ஆய்வு செய்த போது குழாய்களின் தரம், அளவு, நீளம் ஆகியவைகளை அளந்து பார்த்து ஆய்வு செய்ததில் அவை தரமானதாக இருப்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, எம்.எல்.., ராஜ்குமார், நகராட்சி கமிஷனர் அசோக்குமார், கழிவுநீர் அகற்றும் கோட்ட நிர்வாக இன்ஜினியர் ஸ்ரீனிவாசன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மேகலிங்கம், செல்வதுரை, உதவி பொறியாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

 

நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடமிருந்து இரண்டு வார்டுகள் பறிப்பு

Print PDF

தினமலர்       25.05.2010

நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடமிருந்து இரண்டு வார்டுகள் பறிப்பு

சென்னை : ""சரிவர துப்புரவு பணி செய்யாததால், நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக இரண்டு வார்டுகளை திரும்ப பெற்று மாநகராட்சியே துப்புரவு பணி செய்ய திட்டமிட் டுள்ளது,'' என மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் நேற்று மேயர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. கூட்டத் தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்றக் கூட்டம் முடிந்த பின் மேயர் சுப்ரமணியன், நிருபர் களிடம் கூறியதாவது:தங்க சாலை சந்திப்பு பகுதியில் 19 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பில் மேம் பாலம் கட்ட ஒப்பந்தம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 15 நாட்களில் மேம் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்படும்.நகரில் புளியந்தோப்பு, திருவல்லிக்கேணி, கோடம் பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய நான்கு மண்டலங்களில் நீல் மெட்டல் பனால்கா நிறுவனம் துப்புரவு பணி செய்கிறது.கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் பணியை மேற்கொண்ட இந்த நிறுவனம், துப்புரவு பணியை சரிவர செய்யவில்லை.பொது மக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, பலமுறை வலியுறுத்தியும் அந்த நிறுவனம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.மண்டல அளவில் பலமுறை எச்சரிக்கை நோட் டீசும் கொடுக்கப்பட்டது.அதனால், அந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தும் வகையில் முதற்கட்டமாக கோடம்பாக்கம் மண்டலம் 128 (விருகம்பாக்கம் தெற்கு) மற்றும் 129 (சாலிகிராமம்) ஆகிய இரண்டு வார்டுகளில் துப்புரவு பணியை திரும்ப பெற்று மாநகராட்சியே பணியை மேற்கொள்ள திட்டமிட் டுள்ளது.அதன் பிறகும் அந்த நிறுவனம் துப்புரவு பணியின் தரத்தை மேம்படுத்தாவிட் டால், நான்கு மண்டலங் களிலும் இருக்கும் பிரதான சாலைகளில் துப்புரவு பணியை மாநகராட்சி மேற் கொள்ளும்.

தொடர்ந்து, புகார்கள் வந்தால் நான்கு மண்டலங்களின் துப்புரவு பணி திரும்ப பெற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொள்ளும்.இரண்டு கோடியே 17 லட்ச ரூபாய் மதிப்பில் 1,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டாயிரம் எண்ணிக்கையிலான குப்பைத் தொட்டிகள் வாங்கவும், ராயபுரம் கிழக்கு நீர்ப்பிடிப்பு பகுதியில் 25 கோடி 11 லட்சம் மதிப்பில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது.இவ்வாறு மேயர் கூறினார்.

 


Page 421 of 506