Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைகள் கோரிய 250 போலி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Print PDF

தினகரன்    21.05.2010

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடைகள் கோரிய 250 போலி விண்ணப்பங்கள் நிராகரிப்பு

மதுரை, மே 21: மதுரை மாட்டுத்தாவணியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட் கடை ஒதுக்கீட்டில் முறைகேடு தடுக்க குலுக்கல் மற்றும் ஏல முறை பின்பற்றப்படுகிறது. தற்போது சென்ட்ரலில் கடை வைத்திருப்பதாக கூறி புதிய மார்க்கெட்டில் கடை கோரிய 250 போலி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகிலுள்ள சென்ட்ரல் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு இடம் மாறுகிறது. இங்கு 12 ஏக்கர் பரப்பளவில் ரூ.12கோடி மதிப்பில் புதிய மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரதான வாயில் மாட்டுத்தாவணி மெயின் ரோட்டில் இருந்து வண்டியூர் கண்மாய் பூங்கா சாலையில் இரு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. லாரி, வேன், டிரை சைக்கிள் போன்ற வாகனங்கள் இங்குள்ள ஒரு வாயிலில் நுழைந்து மற்றொரு வாயிலில் வெளியேற வேண்டும். விறகு மண்டி லாரிகளுக்கும் இது தான் வழியாகும். டூவீலர் மாட்டுத்தாவணி ரோட்டில் கே.கே.நகர் வழியாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 12ஏக்கரில் 4ஏக்கரில் 524 நிரந்தர கடைகளும், 2 ஏக்கரில் 1000 தரைக்கடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால், 2 இடங்களில் நவீன கழிப்பிடம், 4 இடங்களில் குடிநீர் வசதி, 3 உயர் கோபுர மின்விளக்கு என வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது உள்ள மார்க்கெட்டில் மாநகராட்சி லைசென்சுடன் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு புதிய மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்படுகின்றன. தரையில் கடை வைத்திருப்பதாக கூறி 1,246 பேர் புதிய மார்க்கெட்டில் தரைக்கடை ஒதுக்கும்படி கோரினர். இதனை அதிகாரிகள் குழு நேரில் ஆய்வு செய்ததில் 250 பேர் போலியாக விண்ணப்பித்தது தெரியவந்தது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மற்றவர்களுக்கு சில நாட்களில் நோட்டீஸ் அளித்து டெபாசிட் வசூலிக்கப்படுகிறது.

முறைகேடு தவிர்க்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்படுகிறது. வாகன நிறுத்துமிடம், கேண்டீன் ஆகியவற்றை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 5ம் தேதி காலை புதிய மார்க்கெட்டை மத்திய அமைச்சர் மு..அழகிரி திறந்து வைக்கிறார்.

 

குறிஞ்சிப்பாடியில் குடோனுக்கு சீல்

Print PDF

தினகரன்    21.05.2010

குறிஞ்சிப்பாடியில் குடோனுக்கு சீல்

நெய்வேலி, மே 21 : குறிஞ்சிப்பாடியில் கலப்பட உணவுபொருட்கள் தயாரித்த ரைஸ்மில் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் கலப்பட உணவு பொருட்கள் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கடலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா தலைமையில் வடலூர் மருத்துவ அலுவலர் லட்சுமி சீனிவாசன், கடலூர் துணை இயக்குனரின் தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் ஜனகராஜன், வட் டார மருத்துவ மேற்பார்வை அலுவலர் சுப்ரமணியன், உணவு ஆய்வாளர் தயாநிதி, சுகாதார ஆய்வாளர் சுப்பு ராமலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் குறிஞ்சிப்பாடியில் உள்ள ரைஸ்மில்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் பாட்டை வீதியில் அருள் என்பவருக்கு சொந்தமான மாவுமில் , குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு மிளகாய்த்தூள் மல்லித்தூள் ஆகியவற்றை சோதனை செய்ததில் அதில் அரிசி மாவு கலந்தது தெரியவந்தது. தூளின் மாதிரியை எடுத்து பகுப்பாய்வுக்காக சென்னைக்கு அனுப்பினர். ரைஸ்மில் மற்றும் குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் ரைஸ்மில் உரிமையாளர் அருள் மீது உணவு கலப்பட தடுப்பு சட்டம், பொது சுகாதார திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யபட்டது. குடோனில் இருந்த ரூ.1 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வின்போது குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சேவியர், துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதிகாரிகள் அதிரடி

 

குறிஞ்சிப்பாடியில் மிளகாய்த்தூளில் கலப்படம் செய்த மில்லுக்கு "சீல்'

Print PDF

தினமலர்    21.05.2010

குறிஞ்சிப்பாடியில் மிளகாய்த்தூளில் கலப்படம் செய்த மில்லுக்கு "சீல்'

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில் தரம் குறைந்த பொருட் களை பயன்படுத்தி மிள காய் தூளில் கலப்படம் செய்த மில்லை துணை இயக்குனர் சீல் வைத்தார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பாட்டை வீதியில் அருள் என்பவர் மாவு மில் நடத்தி வருகிறார். இவர் மாவு மில்லில் மிளகாய்த் தூள் அரைத்து கடைகள், சந்தைகளில் விற்பனை செய்து வந்தார். அந்த மிளகாய் தூளில் அதிக அளவு கலப்படம் செய்தும், தரம் குறைவான பொருட்களை பயன்படுத்தி மிளகாய் தூள் அரைத்து விற்பதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீராவுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் துணை இயக்குனர் மீரா தலைமையில் வடலூர் வட்டார மருத்துவ அலுவலர் லட் சுமி சீனுவாசன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் ஜனகராஜன், வட் டார சுகாதார மேற் பார் வையாளர் சுப்ரமணியன், உணவு ஆய்வாளர் தயாநிதி, சுகாதார ஆய் வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு மாவு மில்லை ஆய்வு செய்தனர். ஆய்வில் தரம் குறைவான மிளகாய் வற்றல், மல்லி ஆகியவை பயன்படுத்தி மிளகாய் தூள் அரைத்தும், தூளின் எடையை அதிகப்படுத்த ரேஷன் அரிசியை அரைத்து மிளகாய் தூளில் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மிள காய் தூள் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு கோயம்புத்தூருக்கு அனுப் பப்பட்டது. கலப்பட மிளகாய் தூள் அரைத்த மாவு மில்லை துணை இயக்குனர் மீரா, குறிஞ் சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சேவியர் ஆகியோர் சீல் வைத்தனர்.

மாவு மில்லில் இருப்பு வைக்கப்பட்டிருந்த கலப்பட மிளகாய் தூள் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 422 of 506