Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு

Print PDF

தினமலர்    21.05.2010

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற குழு அமைப்பு

தேனி:தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற செயற்பொறியாளர் ஒருவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேனியில் 38.66 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப் பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் மூலம் பணிகள் நிறைவேற்றப் பட உள்ள இதற்கான டெண்டர் விடப்பட்டு மே 25 ல் சென்னையில் திறக்கப்பட உள்ளன.

இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. திட்டத்தை நிறைவேற்ற கோட்ட அளவில் குடிநீர் வடிகால்வாரிய செயற் பொறியாளர் ரத்தினவேல் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், இரண்டு உதவி பொறியாளர்கள் உட்பட 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை செயல்படுத்துவர்.

 

தேனி பாதாளச் சாக்கடை திட்டம்: தனி அதிகாரிகள் நியமனம்

Print PDF

தினமணி     20.05.2010

தேனி பாதாளச் சாக்கடை திட்டம்: தனி அதிகாரிகள் நியமனம்

தேனி, மே 19: தேனியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்த குடிநீர் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் தலைமையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

தேனியில் ரூ. 38.66 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு மே 25-ம் தேதி சென்னையில் டெண்டர் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தில், பங்களாமேடு பகுதியில் கழிவு நீரேற்றும் நிலையமும், கே.ஆர்.ஆர். நகர் பகுதியில் கழிவுநீருந்து நிலையமும்,கருவேல்நாயக்கன்பட்டியில் கழிவு நீருந்து நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்காக, குடிநீர் வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரத்தினவேலு தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், 2 உதவி பொறியாளர்கள் மற்றும் 15 அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது. இக்குழுவினர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

 

பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

Print PDF

தினமலர்      20.05.2010

பாதாள சாக்கடை திட்ட பணி ஆய்வு

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த செட்டிக்கரை பகுதியில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தர்மபுரி நகராட்சியில் முதல் கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டது. இன்னும் சில இடங்களில் இப்பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்துக்கு தர்மபுரியை அடுத்த செட்டிக்கரை பஞ்சாயத்து பகுதியில் நீர்உந்து நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை கலெக்டர் அமுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கட்டுமான பொருட்கள், குழாய்களின் தரம் குறித்து கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டு கொண்டார். நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா, கமிஷனர் அண்ணாதுரை, இன்ஜினியர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜ்மோகன் உட்பட பலர் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

 


Page 423 of 506