Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் மேல்நிலைதொட்டி பராமரிப்பு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்

Print PDF

தினமலர்   20.05.2010

குடிநீர் மேல்நிலைதொட்டி பராமரிப்பு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்

பழநி:குடிநீர் மேல்நிலைதொட்டிகளை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மாதந்தோறும் 1, 15 தேதிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறிப்பிட்டபடி தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை என சுகாதாரத்துறை நடத் திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.தனி மாவட்டத்தில் காலரா ஏற்பட்டுள்ளதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு கட்டமாக மேல்நிலை தொட்டிகளை உள்ளாட்சி நிர்வாகம் சுத்தம் செய்வதில் சுணக் கம் காட்டக்கூடாது. குறிப் பிட்ட தேதிகளில் அவசியம் சுத்தம் செய்ய வேண் டும். குளோரினேசன் முறையாக செய்ய வேண்டும். இதற்கான அறிக்கையை சுகாதாரத்துறைக்கு அனுப்ப வேண்டும் என செயல் அதிகாரிகள், கமிஷனர்களுக்கு சுகாதாரத்துறையால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

பேரூராட்சியிடம் ஒப்படைக்க கோரி அருமனையில் கடையடைப்பு

Print PDF

தினமணி      18.05.2010

பேரூராட்சியிடம் ஒப்படைக்க கோரி அருமனையில் கடையடைப்பு

குலசேகரம், மே 18: திற்பரப்பு அருவி அருகே பேரூராட்சி எல்கைக்குள்பட்ட பகுதியை அருமனை பேரூராட்சியிடமே ஒப்படைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கடையடைப்பு நடத்தப்பட்டது.

திற்பரப்பு அருவி அருகே அருமனை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் கடையல் பேரூராட்சி சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இப் பகுதியை பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அருமனை பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில் இக் கோரிக்கையை வலியுறுத்தி அருமனை பேரூராட்சித் தலைவர் சி.பி. சுஜி தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதம் அருமனையில் திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இதற்கு ஆதரவாக அருமனை பகுதி வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர்.

பத்மநாபபுரம் ஆர்டிஓ முருகவேல், விளவங்கோடு வட்டாட்சியர் பொன்னுசாமி ஆகியோர் பேரூராட்சித் தலைவர் சுஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மூடப்பட்டிருந்த கடைகள் பிற்பகலில் திறக்கப்பட்டன.

 

வளர்ச்சி திட்டப் பணிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

Print PDF
தினமணி     18.05.2010

வளர்ச்சி திட்டப் பணிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

நாகர்கோவில், மே 18: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாநில சுற்றுலா மற்றும் பதிவுத் துறை அமைச்சர் என். சுரேஷ்ராஜன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

முக்கியமாக இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ, வருவாய் அலுவலர் கலைச்செல்வன், கோட்டாட்சியர்கள் நடராஜன், முருகவேல், வட்டாட்சியர்கள் நாகராஜன், பொன்னுசாமி, கிருஷ்ணன், ஊராட்சி உதவி இயக்குநர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 19 May 2010 09:24
 


Page 424 of 506