Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குத்தகை காலம் முடிந்தநிலத்திற்கு 'சீல்'

Print PDF

தினமலர்       14.05.2010

குத்தகை காலம் முடிந்தநிலத்திற்கு 'சீல்'

சென்னை : குத்தகை காலம் முடிந்ததால், கோர்ட் உத்தரவுபடி நிலத்தை கையகப்படுத்த, கட்டடத்திற்கு மாநகராட்சி 'சீல்' வைத்தது.சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஒத்தவாடை தெருவில் 1,210 சதுர அடி நிலத்தை தியாகராஜ செட்டியார் என்பவருக்கு, மாநகராட்சி குத்தகைக்கு கொடுத்திருந்தது. குத்தகை காலம் முடிந்த பின் இடத்தை காலி செய்யாமல் அங்கு கட்டப்பட் டிருந்த கட்டடத்தில் ஆறு குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதனால் மாநகராட்சி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.கோர்ட் கடந்த ஏப்ரல், மாதம் 30ம் தேதி வரை கெடு கொடுத்தது. அதன் பிறகும், வீட்டை காலி செய்யாததால் மாநகராட்சி நோட்டீஸ் கொடுத்தது. புளியந்தோப்பு மண்டல அதிகாரி சார்லஸ் உத்தரவு படி மாநகராட்சியினர் நேற்று அந்த கட்டடத்திற்கு சீல் வைத்தனர். இடத்தை கையகப்படுத்தும் வகை யில் இன்று அந்த கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப் படும் என்று மாநகராட்சியினர் தெரிவித்தனர

 

ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

Print PDF

தினமணி    11.05.2010

ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

காரைக்கால், மே 10: காரைக்காலில் குப்பைகளைச் சரியாக அகற்றாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட 12 வார்டுகளில் குப்பைகள் அகற்றும் பணி 12 தனியார் ஒப்பந்ததாரர்களிடம் விடப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசு மாதம் ரூ. 9 லட்சத்தை காரைக்கால் நகராட்சிக்கு ஒதுக்குகிறது.

இந்நிலையில், குப்பைகளை அகற்றுவதில் அதிக அலட்சியம் காட்டப்படுவதாகவும், பல்வேறு இடங்களில் குப்பைகள் மேடாக இருப்பதாகவும் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

÷குப்பைகளை அள்ளும் பணி ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்ததால், மே மாதம் முதல் புதிய ஒப்பந்ததாரர்களை நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது.

புகார்களின் அடிப்படையில் ஒப்பந்த காலம் முடிந்த 12 ஒப்பந்ததாரர்களுக்கும் ரூ.10 லட்சம் வரை அபராதமாக விதித்து அதனை நகராட்சி செலுத்த வேண்டிய தொகையில் பிடித்தம் செய்து வழங்கியுள்ளதாக நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

÷புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர்கள் மீதும் புகார்கள் வந்தால், உடனடியாக அந்த ஒப்பந்ததாரரை நீக்கிவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க நகராட்சி நிர்வாகம் தயாராகவுள்ளதாக நகராட்சி கவுன்சிலர் ஒருவர் தெரிவித்தார்.

ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி ஆணையர் அலட்சியமாக உள்ளார் எனப் புகார் கூறப்பட்ட நிலையில், ஆணையர் எடுத்த இந்த நடவடிக்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

ஆழ்குழாய் கிணறு அமைக்க தடை

Print PDF

தினமலர்   12.05.2010

ஆழ்குழாய் கிணறு அமைக்க தடை

பெ.நா.பாளையம் : கூடலூர் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூடலூர் பேரூராட்சியில், 41 ஆழ்குழாய் கிணறு இருக்கிறது. 19 கைபம்புகள் பொதுமக்களின் பயன் பாட்டில் உள்ளது. இரண்டு திறந்தவெளிக் கிணறுகளிலிருந்தும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. இவை அனைத்தும் பொதுமக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை. இதனால் கடந்த ஆண்டு பராமரிப்பு இல்லாமல் இருந்த கிணறுகளை பேரூராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தி, தூர்வாரும் பணியில் ஈடுபட்டது.இதில், இரண்டு திறந்தவெளிக் கிணறுகளில் இருந்து தண்ணீர் கிடைத்தது. தற்போது, கோடை வெயில் கொளுத்துவதால் நிலத்தடி ர்மட்டம் குறைந்து விட்டது. கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாணசுந்திரம், தலைவர் ரங்கசாமி, ஆகியோர் கூறுகையில், 'பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு ஏதும் அமைக்கக் கூடாது. ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டால், தமிழ்நாடு நகராட்சிகள் சட்டம் 1920ன் படி நடவடிக்கை தொடரப்பட்டு, காவல்துறை நடவடிக்கையும் எடுக்கப்படும்' என்றனர்.

Last Updated on Wednesday, 12 May 2010 10:21
 


Page 426 of 506