Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 06.05.2010

பன்றி வளர்ப்போருக்கு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

கடலூர் : கடலூர் நகரில் பன்றி வளர்ப்போர்கள் வரும் 9ம் தேதிக்குள் தாங்களாகவே பன்றிகளை நகரை விட்டு அப்புறப்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி கமிஷனர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகராட்சி பகுதியில் பொது சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை, அதனை வளர்ப்பவர்களே நகரை விட்டு அகற்றிக் கொள்ள வேண்டும் என நகராட்சி சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நகரில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. இதனை வரும் 9ம் தேதிக் குள் அவர்களாகவே அப்புறப்படுத்த வேண் டும். இல்லையெனில் வரும் 10ம் தேதி நகராட்சி சார்பில் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அதனை வளர்ப் போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

கொல்லிமலை தாவரவியல் பூங்கா படகு இல்லம் மேம்பாட்டு பணி: நாமக்கல் கலெக்டர் நேரடி ஆய்வு

Print PDF

தினமலர் 05.05.2010

கொல்லிமலை தாவரவியல் பூங்கா படகு இல்லம் மேம்பாட்டு பணி: நாமக்கல் கலெக்டர் நேரடி ஆய்வு

நாமக்கல்: கொல்லிலையில் படகு இல்லம், தாவரவியல் பூங்காவில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பணிகளை கலெக்டர் சகாயம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கொல்லிமலை படகு இல்லத்தை மேம்படுத்துவது, விரிவுபடுத்துவது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, படகு இல்லத்தின் எல்லை நிர்ணயம் செய்தல் மற்றும் படகுகள் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். படகு இல்ல பூங்காவை அழகு படுத்த மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது. இதுகுறித்து கலெக்டர் சகாயம் கூறியதாவது:படகு இல்லத்தில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. பூங்காவில் புல்தரை அமைத்தல், அலங்காரச்செடி நடுதல், நடைபாதை, பூங்காவை சுற்றி வேலி அமைத்தல், மரக்குடில், தாமரைக்குளம் அமைத்து அன்னப்பறவை விடுதல் போன்ற பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல் தாவரவியல் பூங்காவில் 85 லட்சம் ரூபாய் மதிப்பில் புல்தரை அமைத்தல், நடைபாதை, சிலைகள், ரோஜா தோட்டம் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது, மாவட்ட வன அலுவலர் ஆஷிஸ் வஸ்தவா, ஆர்.டி.., ராஜன், செயற்பொறியாளர் அறிவழகன், உதவி செயற்பொறியாளர் நம்பிராஜன், பி.டி..,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 05 May 2010 06:23
 

அனுமதியற்ற குடிநீர் இணைப்பு? அபராதம் இரு மடங்காக உயர்வு

Print PDF

தினமலர் 04.05.2010

அனுமதியற்ற குடிநீர் இணைப்பு? அபராதம் இரு மடங்காக உயர்வு

கோவை: மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அனுமதியற்ற குடிநீர் இணைப்பு வைத்திருப்போருக்கு இரு மடங்கு அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனுமதியற்ற வகையில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடி கட்டடங்கள், அலுவலகங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுவரை அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு 3,000 ரூபாயும், மற்ற இணைப்புகளுக்கு 5,000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது. 'இது போதுமானதாக இல்லை' என்று உள்ளாட்சி நிர்வாகங்கள் கருத்து தெரிவித்தன. இதையடுத்து, அனுமதியற்ற குடிநீர் இணைப்புக்கு இரண்டு மடங்கு கட்டணம் விதிக்க, நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புக்கு 6,000 ரூபாயும், மற்ற குடிநீர் இணைப்புகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். உத்தரவு பெற்ற நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளும், பேரூராட்சிகளும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவின் நகல் மக்களின் பார்வைக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

Last Updated on Tuesday, 04 May 2010 06:06
 


Page 428 of 506