Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

திருச்சி மாநகரில் 4 பூங்கா சீரமைப்பு மேயர் ஆய்வு

Print PDF

தினகரன்           20.12.2013

திருச்சி மாநகரில் 4 பூங்கா சீரமைப்பு மேயர் ஆய்வு

திருச்சி, : திருச்சி மாநகராட்சியில் இ.பி. ரோட்டில் உள்ள லூர்துசாமி பூங்கா, கள்ளத்தெருவில் உள்ள திரவியம் பிள்ளை பூங்கா, பீரங்கி குளத்தெருவில் உள்ள டாக்டர் வீ.கே. ரங்கநாதன் பூங்கா, மேலப்புலிவார்டு சாலையில் அமைந்துள்ள இப்ராகிம் பூங்கா ஆகியவை புனரமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இருந்த பழுதான விளையாட்டு சாதனங்கள் மாற்றப்பட்டும், சேதமடைந்திருந்த பகுதிகள் செப்பனிடப்பட்டும் வருகின்றன. இந்த பணிகளை மேயர் ஜெயா நேற்று ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  விடுமாறு அறிவுறுத்தினார். மேலும் மைதானமாக உள்ள ரங்கநாதன் பூங்காவின் ஒரு பகுதியில் உடற்பயிற்சி நிலையம் அமைக்கவும் உத்தரவிட்டார்.ஆய்வின்போது நகர பொறியாளர் சந்திரன், செயற்பொறியாளர் அருணாச்சலம், உதவி ஆணையர் ரங்கராஜன், கவுன்சிலர்கள் சுதாகர், லாவண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

விதி மீறி கட்டிய கட்டிடத்திற்கு சீல் மாநகராட்சி அதிரடி

Print PDF

தினகரன்           20.12.2013

விதி மீறி கட்டிய கட்டிடத்திற்கு சீல் மாநகராட்சி அதிரடி

மதுரை, :  மதுரையில் தரைத் தளத்திற்கு அனுமதி வாங்கி, அடுக்கு மாடி வீடு கட்டியதால் கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கட்டிடம் கட்ட தரைதளத்தில் கூரை மாற்றம் செய்ய பாலன் மற்றும் திருமலை செல்வி பெயரில் வரைபட அனுமதியை மாநகராட்சி வழங்கியது. 

இந்த இடத்தில் கூரைமாற்றம் செய்ய கட்டிட அனுமதி பெற்ற வரைபடத்திற்கு மாறாக முதல் தளம் மற்றும் 2ம் தளம் கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அதிகாரிகள் ஆய்வின் போது கண்டுபிடித்தனர். இதற்காக கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அதன் பின்னரும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து இந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க ஆணையாளர் கிரண்குராலா உத்தரவிட்டார்.

நேற்று மாநகராட்சி செயற்பொறியாளர் ராக்கப்பன், உதவி ஆணையாளர் தேவதாஸ், உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி பொறியாளர் ஜெயா ஆகியோர் அங்கு சென்று கட்டுமான பணிகளை நிறுத்தினர். பணியாளர்களை வெளியேற்றி விட்டு கட்டிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

 

வரி செலுத்தாத 2 பேரின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினத்தந்தி              20.12.2013

வரி செலுத்தாத 2 பேரின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

குடிநீர் கட்டணம் செலுத்தாமலும், வீட்டு வரி கட்டாமலும் இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் மற்றும் மேயர் விசாலாட்சி ஆகியோர் உத்தரவிட்டு இருந்தனர்.

அதைத்தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி கடந்த 2 மாதமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 4 செட்டி பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் முத்துராமய்யா மகன் சுருளி ராமன் கடந்த 2 வருடங்களாக சொத்து வரியும், 3 வருடங்களாக குடிநீர் கட்டணமும் செலுத்தாமல் இருந்தார். அவரது வீட்டு குடிநீர் இணைப்பு நேற்று துண்டிக்கப்பட்டது. அதே போல ஏ.வி.பி. லே-அவுட்டில் குடியிருந்து வரும் ராமனின் மனைவி வேளாங்கன்னி (45) கடந்த 3 வருடங்களாக குடிநீர் கட்டணமும், வீட்டு வரியும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டு குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த பணியில் 1-வது மண்டல உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா, வருவாய் ஆய்வாளர் சக்திவேல், வருவாய் உதவியாளர் தங்கவேல் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டி ருந்தனர்.

வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 44 of 506