Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீர் குழாயை உடைத்தால் 'கிரிமினல்' வழக்கு : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 30.04.2010

குடிநீர் குழாயை உடைத்தால் 'கிரிமினல்' வழக்கு : மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல்: ''குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை உடைத்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் சகாயம் எச்சரித்துள்ளார். ராசிபுரம் தாலுகா மோளப்பாளையம் கிராமத்தில் 'கிராமத்தை நோக்கி மாவட்ட நிர்வாகம்' நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சகாயம் தலைமை வகித்து பேசியதாவது: கடைகோடி கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கிராமத்தில் தங்கி மனுக்கள் பெற்றதில், மாதாந்திர உதவித்தொகை கேட்டு 26 பேர் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உதவித்தொகை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், நிலப்பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து தீர்வு காணப்படும். ரேஷன் கார்டு கேட்டு பெறப்படும் மனுக்களுக்கு 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். சின்னப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரியா என்பவரது கணவர் இறந்து விட்டதால், அரசு உதவித்தொகை கேட்டு மனு அளித்தார். மனுவை பரிசீலனை செய்து, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளதாக மக்கள் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட பி.டி..,க்கள் ஆழ்துளை கிணறு அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கொண்டு செல்லும் குழாய்களை யாராவது உடைத்தால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு டாப்செட்கோ மூலம் கடனுதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். முத்துக்காளிப்பட்டியை சேர்ந்த பெருமாயி (75) என்பவருக்கு, மகனிடம் இருந்து பராமரிப்பு நிதி பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழனியப்பனூர் கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு மயானத்திற்கு செல்லும் பாதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, நள்ளிரவு 12 மணியளவில் ராசிபுரம் - ஆத்தூர் சாலையில் கலெக்டர் சகாயம் வாகன தணிக்கை செய்தார், அப்போது, ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள், குடி போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் உட்பட 11 பேர் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நாமக்கல் ஆர்.டி.., ராஜன், தாசில்தார் கந்தசாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 30 April 2010 06:11
 

மாற்று இடம் தேர்வானதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்: கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு

Print PDF

தினமலர் 30.04.2010

மாற்று இடம் தேர்வானதும் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்: கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு

கோவை:'மாற்று இடம் தேர்வானதும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவது' என்று, கோவை மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை மாவட்ட ஆக்கிரமிப்பு அகற்றும் குழு கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், துறை வாரியாக ஆக்கிரமிப்பு விபரங்களும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக, சிறிய ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றவும், அதன்பின் பெரிய ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. கோவை மாநகராட்சி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புக் குடிசைகள் பற்றி அதிகாரிகள் விளக்கினர்.அவற்றில் எத்தனை பேருக்கு புதிதாக மாற்று குடியிருப்புகள் தரப்படுகிறது, மீதம் எவ்வளவு பேருக்கு புதிய திட்டத்தில் மாற்று வீடுகள் வழங்குவது என்ற விபரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் கேட்டறிந்தார். நத்தம் புறம்போக்கு, நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த தகவல்களையும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாகை-கூடலூர்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக சூலூர் பகுதியில் அகற்றப்பட வேண்டிய ஆக்கிரமிப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைக்குத் தேவையான இடங்களை விரைவாக அளந்து கொடுத்து, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க டி.ஆர்.., உத்தரவிட்டார்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் அகற்றப்பட வேண்டிய ஆக்கிரமிப்பு வீடுகளின் பட்டியலை டி.ஆர்.., கேட்டார். ஆனால், ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் யாரும் வராததால், அது குறித்து தகவலை கேட்டுப் பெறுமாறு வனத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்டத்தில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருப்பதாக பொதுப்பணித்துறை உதவி கோட்ட அலுவலர் திருச்செந்தில்வேலவன் தெரிவித்தார்.நொய்யல் பாயும் வெள்ளலூர் ராஜவாய்க்கால் குளம் கணிசமான அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் வெள்ளலூர் குளம் நிரம்பாமல், விவசாயிகள் தொடர்ந்து புகார் கூறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.அங்கு மொத்தம் 462 வீடுகள் இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்தார். அவர்களுக்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த இடத்தை சமப்படுத்திக் கொடுத்தால் மேலும் பலரை அங்கு குடியமர்த்தலாம் என்று கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அது குறித்த விபரங்களைக் கேட்ட டி.ஆர்.., ''நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியே தீர வேண்டும்; அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அதற்கு முன்பாக அவர்களுக்கான மாற்று இடத்தை நாம் உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். அதன் பின், இந்த ஆக்கிரமிப்பு அனைத்தையும் அகற்றலாம்,'' என்றார்.கரும்புக்கடையில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் நடந்திருப்பதாக வந்த புகார் பற்றி அதிகாரிகள் விவாதித்தனர்.

உக்கடத்திலிருந்து போத்தனூர் பிரிவு வரை, எவ்வளவு இடம் தேவை என தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் முறைப்படி கடிதம் கொடுத்தால், உடனே அளவீடு செய்வதாக தெற்கு தாசில்தார் தெரிவித்தார்.'நொய்யல் வாய்க்கால்களை அளந்த பின்னும், அங்கு கற்கள் நடாததால் மீண்டும் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது' என்று பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர் தெரிவித்தார். அதற்கு 51 லட்ச ரூபாய் செலவாகும் என்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டி.ஆர்.., 'அவ்வளவு செலவாகுமா' என்று கேட்டார்.பொதுப்பணித்துறை அதிகாரி, 'பொதுப்பணித்துறைக்கு குறிப்பிட்ட மாதிரி வடிவில் தான் கல் வைக்க வேண்டும். அத்துடன், கொஞ்சம் ஆக்கிரமிப்பும் அகற்ற வேண்டியுள்ளது,'' என்றார். அந்தத் தொகையை விரைவாகப் பெற நடவடிக்கை எடுப்பதாக டி.ஆர்.., சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Last Updated on Friday, 30 April 2010 06:04
 

ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு 5-ம் கட்ட ஏலம்

Print PDF

தினமணி 29.04.2010

ஒசூர் புதிய பஸ் நிலைய கடைகளுக்கு 5-ம் கட்ட ஏலம்

ஒசூர், ஏப்.28: ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கான 5-ம் கட்ட ஏலம் ஒசூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 7-ஆம் எண் கடை ரூ.35,500-க்கு ஏலம் போனது. 2-ம் எண் கடை ரூ.19,000, 2-வது ஓட்டல் ரூ.34,000 ஏலம் போனது.

பின்னர் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது: மே 15-ம் தேதிக்குள் புதிய பஸ் நிலையப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும். பிறகு முதல்வர், துணை முதல்வர் தேதி கிடைத்தவுடன் திறப்பு விழா நடைபெறும் என்றார்.

 


Page 431 of 506