Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

செஞ்சி பஸ் நிலைய கடைகள் ரூ.39 லட்சத்துக்கு ஏலம்

Print PDF

தினமணி 29.04.2010

செஞ்சி பஸ் நிலைய கடைகள் ரூ.39 லட்சத்துக்கு ஏலம்

செஞ்சி, ஏப். 28: செஞ்சி பஸ் நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகத்தில் 21 கடைகள் புதன்கிழமை ஏலம் விடப்பட்டன.

÷இக்கடைகள் மொத்தம் ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போயின. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பஸ் நிலைய கடைகளில் செஞ்சியில்தான் மிக அதிகமான அளவில் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

÷ இங்குள்ள வணிக வளாகத்தில் 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவை கடந்த மாதம் ஏலம் விட டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை பேரூராட்சி அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் 118 பேர் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக பஸ் நிலைய முதல் கடை ரூ.2.81 லட்சத்துக்கு ஏலம் போனது. குறைந்த பட்சமாக ரூ.1.54 லட்சத்துக்கு 13-ம் எண் கடை ஏலம் போனது.

÷செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் செஞ்சி மஸ்தான், செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் ஏலத்தை நடத்தினர்.

 

செஞ்சி பேரூராட்சி கடைகள் ரூ.38 லட்சத்திற்கு பொதுஏலம்

Print PDF

தினமலர் 29.04.2010

செஞ்சி பேரூராட்சி கடைகள் ரூ.38 லட்சத்திற்கு பொதுஏலம்

செஞ்சி : செஞ்சி பேரூராட்சி பஸ் நிலைய விரிவாக்க கடைகளுக்கு நடந்த ஏலத்தில் ஓராண்டு வாடகையாக 38.59 லட்சம் ரூபாய் ஏலம் போனது.செஞ்சி பஸ்நிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் 55 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக 21 கடைகளை கட்டியுள்ளனர். இந்த கடைகளில் ஒரு ஆண்டுக்கு கடை நடத்த நேற்று ஏலம் விடப் பட்டது. செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் மஸ்தான் ஏலத்தை நடத்தினார். ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக் கப்பட்ட 3 கடைகள் உட் பட நேற்று ஏலம் நடந்த 21 கடைகளுக்கும் ஏலம் கேட்க 118 பேர் 60.50 லட்சம் ரூபாயை டெபாசிட் தொகையாக கட்டியிருந்தனர். இதில் முதல் கடை அதிகபட்சமாக 2.81 லட்சம் ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 13ம் எண் கடை 1.54 லட்சத்திற்கும் ஏலம் போனது.மொத்தமுள்ள 21 கடைகளும் ஓராண்டு வாடகையாக 38.59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் முன்பு காய்கறி கடை நடத்தி வந்த 14 நபர்களுக்கு ஐகோர்ட் உத்தரவுப்படி டெபாசிட் தொகையில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருந்தது

Last Updated on Thursday, 29 April 2010 06:40
 

13 கட்டடங்களில் இணைப்பு 'கட்'நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினமலர் 29.04.2010

13 கட்டடங்களில் இணைப்பு 'கட்'நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கூடலூர்: உயர்நீதிமன்ற உத்தரவின் படி, கூடலூர் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட 13 கட்டடங்களுக்கான நீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றியும், விதிமீறியும் 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த கட்டடங்கள் தொடர்பான விசாரணையில், அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்ட கட்டடங்களில், வழக்கு நிலுவையில் உள்ளதை தவிர, மீதமுள்ள கட்டடங்களின் பட்டியலை தயாரித்து, இதற்கான மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. ஊட்டியில் பணிகள் நடந்து வரும் நிலையில், கூடலூர் பகுதியில் விதிமீறி கட்டப்பட்ட 13 கட்டடங்களுக்கு நீர் இணைப்பு துண்டிக்கும் பணியை, கூடலூர் நகராட்சி ஊழியர்கள், இரு நாட்களுக்கு முன் நடத்தினர்.

கூடலூர் நகராட்சி பொறியாளர் பாஸ்கரன் தலைமையில், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பணியை மேற்கொண்டனர். ராஜகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியின் நீர் இணைப்பை துண்டிக்கும் பணியை மேற்கொண்ட போது, உரிமையாளர்களுக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது; பின், இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Last Updated on Thursday, 29 April 2010 06:26
 


Page 432 of 506