Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின்பம்ப் மூலம் திருட்டு : வீட்டுகுடிநீர் சப்ளையில் பாதிப்பு

Print PDF

தினமலர் 22.04.2010

மின்பம்ப் மூலம் திருட்டு : வீட்டுகுடிநீர் சப்ளையில் பாதிப்பு

பழநி : பழநியில் மின்பம்ப் மூலம் குடிநீர் திருடுவதால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.பழநியில் 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. சப்ளை நேரத்தில் சில வீடுகளில் மின்பம்ப் மூலம் குடிநீர் திருடப்படுகிறது. இதனால் மற்ற வீடுகளுக்கு குடிநீர் வரும் அளவு குறைகிறது. சில வீடுகளில் முற்றிலும் குடிநீர் வருவதில்லை. குடிநீர் திருடும் வீடுகளில் மின்பம்ப்களை பறிமுதல் செய்து அனைத்து குழாய் இணைப்புகளுக்கும் முறையாக சப்ளை செய்ய நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் கூறுகையில், 'இது போன்ற புகார்கள் வந்துள்ளன. பழநியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை மின்தடையாகும். எனவே அந்த நேரத் தில் குடிநீர் சப்ளை செய்கிறோம். மின்பம்ப் பயன்படுத்துவது தடுக்கப்படுகிறது. குடிநீர்திருட்டு குறித்து தெரிய வந்தால் மின்பம்ப்கள் பறிமுதல் செய்யப்படும்,'என்றார்.

Last Updated on Thursday, 22 April 2010 06:54
 

குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 21.04.2010

குடிநீர் இணைப்பு துண்டிப்பு: மாநகராட்சி நடவடிக்கை

திருப்பூர்: குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து, திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் மற்றும் சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்தாண்டு 100 சதவீத வரி வசூல் செய்ய இயலவில்லை. இதனால், வரி செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. குமரன் ரோடு பகுதியில் மாநகராட்சி உதவி வருவாய் ஆணையர் தங்கவேல்ராஜ் தலைமையில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 8,000 ரூபாய் வரிபாக்கி வைத்திருந்த ஒரு வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டித்து நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதிகம் வரி பாக்கி வைத்திருப்போர் மீது, ஜப்தி நடவடிக்கை பாயும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 21 April 2010 06:52
 

அனுமதி இல்லாமல் குடிநீர் எடுத்த75 இணைப்புகள் துண்டிப்பு

Print PDF

தினமணி 19.04.2010

அனுமதி இல்லாமல் குடிநீர் எடுத்த75 இணைப்புகள் துண்டிப்பு

சங்ககிரி, ஏப். 18: சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட நாகிசெட்டிபட்டி, நாட்டாம்பாளையம், ஆகிய பகுதிகளில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்காக பூமி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

÷
இதில் வட்டாட்சியர் டி.சாந்தி தலைமை வகித்தார். 1வது வார்டு பேரூராட்சி கவுன்சிலர் பி.தங்கமுத்து வரேவற்றார். நாகிசெட்டிப்பட்டி, நாட்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் தலா 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பேசியது (படம்):

÷குடிநீர் குழாயில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராத தொகை வசூலிப்பது என அரசு புதிய சட்டம் நிறைவேற்றியுள்ளது. சங்ககிரி பேரூராட்சியில் கோடை காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை ஏற்கெனவே எடுக்கப்பட்டதன் விளைவாக 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தற்போது நகருக்கு சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் அனைத்து மக்களும் பயனடைந்து வருகின்றனர்

. ÷குடும்ப அட்டை புதுப்பிக்க கோரி வருவாய்த்துறையிடம் விண்ணப்பம் அளித்தவர்களில் சிலர் கூலி வேலைக்கு சென்று விடுகின்றனர். அப்போது ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் அந்த குடும்ப அட்டைகளை தள்ளுபடி செய்து விடுகின்றனர். அவ்வாறு தள்ளுபடி செய்யும் அட்டைதாரர்கள் மேல்முறையீட்டு மனு அளிக்கும்போது அதை அதிகாரிகள் பரீசிலித்து நடவடிக்கை எடுத்தால் ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.

÷மேலும், சங்ககிரி பேரூராட்சிக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

÷செயல் அலுவலர் எஸ்.வேதமணி, பேரூராட்சித் தலைவர் டி.என்.அத்தியண்ணன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.வரதராஜன், முன்னாள் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆசைதம்பி, நாட்டாம்பாளையம் முத்துசாமி, திமுக ஒன்றியச் செயலர் ஏ.ராமசாமி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ரத்தினம், கவுன்சிலர்கள் காசிலிங்கம், கே.ஜீ.ஆர்.ராஜவேல், கோகிலா சங்கர், கங்காதேவி வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.

Last Updated on Monday, 19 April 2010 10:39
 


Page 439 of 506