Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நந்தம்பாக்கத்தில் மாநகராட்சி சார்பில்...மாட்டு தொழுவம் !மாடு வளர்ப்போர் கோரிக்கை ஏற்பு

Print PDF

தினமலர்              19.12.2013

நந்தம்பாக்கத்தில் மாநகராட்சி சார்பில்...மாட்டு தொழுவம் !மாடு வளர்ப்போர் கோரிக்கை ஏற்பு

ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தில் பகுதிவாசிகளுக்கு இடையூறின்றி மாடு வளர்க்க வசதியாக, பொது தொழுவம் அமைத்துத் தருவதாக மாநகராட்சி உறுதியளித்து உள்ளது.அதே நேரத்தில், கால்நடை வளர்ப்போர், தங்கள் மாடுகள் தெருவில் சுற்றித்திரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, எச்சரித்து உள்ளது.

புகார்நந்தம்பாக்கம், மேற்கு மாடவீதியில் வசித்து வரும் 25 குடும்?பத்தினர், ஏறத்தாழ 200 மாடுகளை வளர்த்து வருகின்றனர்.அந்த மாடுகள், தெருவில் சுற்றித்திரிவதால், பள்ளி செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக அந்த பகுதிவாசிகள், மாநகராட்சிக்கு, புகார் அளித்தனர்.இதை தொடர்ந்து, ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில், நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மாடு வளர்ப்போர், அந்த பகுதி காவல் ஆய்வாளர், வார்டு கவுன்சிலர், மண்டல குழு தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.'பாரம்பரிய தொழில்'கூட்டத்தில், மாடு வளர்ப்போர் பேசியதாவது:கடந்த, ஐந்து தலைமுறையாக, மேற்கு மாடவீதியில் மாடு வளர்த்து வருகிறோம்.

நாங்கள், 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பால் வழங்கி வருகிறோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. பாக்கெட் பால் வருவதற்கு முன், எங்களை நம்பி தானே இருந்தீர்கள். தற்போது, எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்குவது எந்த விதத்தில் நியாயம்.மாடு வளர்க்கும் அனைவரும், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாட்டை விற்றுவிட்டு வேறு எங்கு செல்வது. அடுத்த தலைமுறை, இந்த தொழிலுக்கு வராது. அதுவரை, எங்கள் தலைமுறையை காப்பாற்ற உதவுங்கள். மாடுகள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவற்றை அடித்து, விரட்டும் போது தான் பாய்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.பழைய தீர்மானம்கடந்த 1996ம் ஆண்டு நந்தம்பாக்கம் பேரூராட்சியாக இருந்த போது, பொது தொழுவம் அமைக்க ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், பின் அது கிடப்பில் போடப்பட்டதாகவும், மாடு வளர்ப்போர் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் மாநகராட்சி தற்போது இடம் ஒதுக்கி, தொழுவம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

பகராக மாட்டு சாணத்தை, எரிவாயு தயாரிப்பு உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக, மாநகராட்சிக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.கருத்துக்கள் பதிவுஆலோசனை கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர், அண்ணாதுரை பேசியதாவது:காலி இடம் கிடைத்தவுடன், மாட்டு தொழுவம் கட்டி தரப்படும். அதுவரை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மாடு வளர்க்க வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுப்போம். மாநகராட்சிக்கு இலவசமாக சாணம் கொடுப்பது குறித்து, உயர் அதிகாரிகளின்கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

 

வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்

Print PDF

தினகரன்            18.12.2013

வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார்

ஒரு வணிக வளாகத்திற்கு வரி பாக்கி ரூ.44 லட்சம் இருந்தது. இதற்காக மாநகராட்சி நோட்டீஸ் அளித்தும் பயனில்லை. இதனால் அந்த வணிக வளாகத்திற்கு சீல் வைக்க ஆணையர் கிரண்குராலா அதிரடியாக உத்தரவிட்டார். மேற்கு மண்டல உதவி ஆணையர் ரெகோபயாம் தலைமையில் அதிகாரிகள் வணிக வளாகத்தை இழுத்து மூடி சீல் வைக்க சென்றனர். இதனால் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது. இதன் பிறகு ரூ. 11 லட்சத்திற்கு செக் அளித்து, மீத தொகையை ஒரு மாத வாய்தா வாங்கியதின்பேரில் சீல் வைப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

 

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி              18.12.2013

பவானியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பவானி நகராட்சிக்குச் சொந்தமான சாலைகள், சாக்கடைகள் மீதான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

27 வார்டுகள் கொண்ட பவானி நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரத்தில் நிரந்தர மற்றும் தாற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிமாகக் காணப்பட்டன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றன. இந்நிலையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முதல்கட்டமாக, காமராஜர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டன. படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.

நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில், துப்புரவு அலுவலர் சிவகுமார், கட்டமைப்பு ஆய்வாளர் பி.முருகேசன், நகர அளவையாளர் சம்பத் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 


Page 45 of 506