Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் சட்ட நடவடிக்கை

Print PDF

தினமணி 12.04.2010

மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சினால் சட்ட நடவடிக்கை

தஞ்சாவூர்
, ஏப். 11: தஞ்சாவூர் நகராட்சி குடிநீர் வழங்கல் பணியில் நகராட்சிப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தேவையான அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கி வருகிறது. நகரின் பல பகுதிகளில் குடிநீர் இணைப்புதாரர்கள், மின் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதாக நகராட்சிக்கு புகார்கள் வருகின்றன.

எனவே, மின் மோட்டார் வைத்து குடிநீர் குழாயில் நீர் உறிஞ்சுவது நகராட்சி அலுவலர்கள் மூலம் கண்டறியப்பட்டால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், ரூ. 10,000 அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு இணைப்பு துண்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் த. நடராஜன்.

Last Updated on Monday, 12 April 2010 09:43
 

முறையற்ற குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு : திண்டிவனம் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

Print PDF

தினமலர் 12.04.2010

முறையற்ற குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு : திண்டிவனம் நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

திண்டிவனம் : திண்டிவனம் நகரில் நகராட்சி அனுமதியின்றி போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு துண் டிக்கப்படும் என கமிஷனர் முருகேசன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தற்போது கோடை காலம் துவங்கி உள்ளது. நகரின் குடிநீர் ஆதாரங்க ளான ரெட்டணை, கண்டரக் கோட்டை திட்டங்களில் பெறப்படும் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் மே, ஜூன் மாதங்களில் தண்ணீரின் அளவு மேலும் குறையும். இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிரமம் ஏற்படும். திண்டிவனம் நகரில் அனுமதியின்றி குடிநீர் இணைப்புகள் பெற்றவர்கள், சட்டத்திற்கு புறம் பாக குடிநீர் எடுப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே அனுமதியின்றி குடிநீர் இணைப்பு போட் டவர்கள் இணைப்பை வரைமுறை படுத்திக் கொள்ள வேண்டும். இல் லையேல் குடிநீர் இணைப்பு துண்டித்து குற்ற நடவடிக்கை எடுக் கப்படும். சட்டத்திற்கு புறம்பாக மின் மோட்டாரில் குடிநீர் எடுப்பவர்கள், தங்கள் மோட்டார்களை அப்புறப்படுத்த வேண்டும். இல் லையேல் நகராட்சியால் அமைக்கும் குழுக் களால் மோட்டார்கள் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பு துண்டிக் கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

Last Updated on Monday, 12 April 2010 06:50
 

மாவட்டத்தில் பின்தங்கி வரும் நகராட்சிகள் தனிக்கவனம் செலுத்துவது எப்போது?

Print PDF

தினமலர் 12.04.2010

மாவட்டத்தில் பின்தங்கி வரும் நகராட்சிகள் தனிக்கவனம் செலுத்துவது எப்போது?

ராமநாதபுரம் : மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் பின்தங்கி வரும் நிலையில், அரசு தரப்பு அதன் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் என நான்கு நகராட்சிகள் உள்ளன. அதளபாதாளத் தில் போய்க் கொண்டிருந்த ராமநாதபுரம் நகராட்சியில் கூட இதோ அதோ என , சில பணிகள் தொடங்கிவிட்டது. மற்ற நகராட்சிகளின் நிலையை பார்த்தால் அந்தோ பரிதாபம். பரமக்குடியில் நகராட்சி என்ற பெயர் மட்டுமே நிலைத்துள்ளதே தவிர, வளர்ச்சி பணிகள் நிலை தடுமாறி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் அடிப்படை கடமையை கூட இன்று வரை முழுமையாக மேற்கொள்ளவில்லை.

பரமக்குடியின் நீண்ட தலைவலியாக கருதப்படும் ஆக்கிரமிப்பு விசயத்துக்கு ரோடு விரிவாக்கம் மட்டுமே இனி விடையளிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது. சுகாதார கேட்டில் கீழக்கரை, பரமக்குடி,ராமேஸ்வரம் என, மூன்றும் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது ஒரு புறமிருந்தாலும், மக்கள் பாதிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.டெண்டர், ஒப்பந்தகாரர் பேரம், போலி கணக்குகளில் காட்டும் கவனத்தை நகராட்சியின் வளர்ச்சியில் யாரும் காட்டுவதில்லை. அதிகாரிகள் தான் இப்படியென்றால், மக்கள் பிரதிநிதிகள் அதை விட இருக்கிறார்கள்.
கூட்டம் நடத்தி தீர்மானம் போடுவதற்கு பதிலாக, வளர்ச்சி திட்டத்தை செயலில் நிறைவேற்றும் தீர்மானத்தை இவர்கள் கையில் எடுப்பது எப்போதோ? மற்ற மாவட் டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இங்கு தான் நகராட்சிகள் ரோடு வசதி கூட இல்லாமல் திண்டாடி வருகின்றன.

சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு என தேவையின் பட்டியல் இன்னும் நீளும். தேர்தலில் முதலில் குறிவைக்கப்படும் இந்த முக்கிய நகராட்சிகள், அதன் பின் கண்டுகொள் ளாமல் போவதும் தொடர்ந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளையும், அரசு அதிகாரிகளையும் நம்பி இன்று நட்டாத்தில் தவித்துக்கொண்டிருக்கும் இந்த நகராட்சிகளின் வளர்ச்சிக்கு அரசு தரப்போகும் பதில் என்ன? அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றும் எண்ணமிருந்தால், அரசு இந்த நகராட்சிகளின் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

Last Updated on Monday, 12 April 2010 06:21
 


Page 444 of 506