Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி எல்லை: கூடுதல் இயக்குநர் ஆலோசனை

Print PDF

தினமணி 07.04.2010.

மாநகராட்சி எல்லை: கூடுதல் இயக்குநர் ஆலோசனை

வேலூர், ஏப்.6:வேலூர் மாநகராட்சி எல்லை வரையறை மற்றும் வார்டுகள் பிரிப்பது குறித்து, வேலூரில் செவ்வாய்க்கிழமை நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் ஆலோசனை நடத்தினார்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், வேலூர் மாநகராட்சிப் பகுதியை 72 வார்டுகளாக பிரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 3 மூன்றாம் நிலை நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 ஊராட்சிகள் ஆகியவை மாநகராட்சி எல்லைக்குள் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை 4 மண்டலங்களாகப் பிரித்து 72 வார்டுகள் உருவாக்கப்பட உள்ளன.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் செல்வராஜ், செயல் அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், வரும் மே மாதம் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், வார்டுகளைப் பிரிக்கும் பணி, தகன மேடை, மக்கள் தொகை, நகரில் உள்ள பரப்பளவு உள்ளிட்டவைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:58
 

மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் நடவடிக்கை

Print PDF

தினமணி 07.04.2010

மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் நடவடிக்கை

மதுரை, ஏப். 6: மதுரை மாநகராட்சியில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாநகராட்சி வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு, சாலை ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்களிடம்இருந்து 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க ஆணையர் எஸ்.செபாஸ்டின் உத்தரவிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெறப் பணியாளர்களுக்கும், தர முத்திரை இல்லாமல் தண்ணீர் பாக்கெட்டுகள் கடைகளில் விற்கப்பட்டால் பறிமுதல் செய்வதற்கு சுகாதார ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வீடு, கடைகளில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னதாக கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்கெட் புதிய கட்டடம், கோரிப்பாளையம் மாநகராட்சிப் பள்ளிக் கட்டடம் ஆகிய கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார்.

பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது எனப் பொதுமக்கள் புகார் செய்தனர். அதை சரிசெய்ய பொறியாளர்களுக்கு மேயர் மற்றும் ஆணையர் உத்தரவிட்டனர்.

குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் கே.இசக்கிமுத்து, துணை ஆணையர் கற்பகராஜ், தலைமைப் பொறியாளர் சக்திவேல், கவுன்சிலர் ஜெகநாதன், உமா, உதவி ஆணையர் இரா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கட்டட வரைபட அனுமதிக்கு எளிய முறை

Print PDF

தினமணி 07.04.2010

கட்டட வரைபட அனுமதிக்கு எளிய முறை

புதுச்சேரி, ஏப். 6: கட்டட வரைபட அனுமதி வழங்க இனிமேல் எளிமையான முறை பின்பற்றப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் கூறினார்.

÷சட்டப்பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:

÷கட்டட வரைபட அனுமதி வழங்க நகர அமைப்புக் குழுமங்களால் பின்பற்றப்படும் முறை எளிமையாக்கப்படும். அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் அமைந்துள்ள மனைகளில் இரண்டு அடுக்கு வீடு கட்ட ஒரு வாரத்துக்குள் அனுமதி வழங்கப்படும்.

அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இது குறித்து அரசு ஆணை 19.03.2010 அன்று ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

÷புதுச்சேரி கட்டட விதிமுறைகள் மற்றும் மண்டல கட்டுப்பாடுகள் 1972 விதிமுறை, கட்டட அளவுகோல் அதிகப்படுத்தி திருத்தம் செய்து விரைவில் அறிவிக்கை செய்யப்படும்.

÷புதுவை தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள கனரக வாகன நிறுத்தம் பொது-தனியார் கூட்டு முறையில் இயக்கப்படும். புதுச்சேரி அரசு நலத்திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானியம் பெறும் வீடுகளுக்கு நகர அமைப்புக் குழுமத்தின் கட்டட அனுமதி இனி வற்புறுத்தபட மாட்டாது.

÷தேசிய நெடுங்சாலை 45-ஏ-ல் இந்திரா காந்தி சதுக்கம் முதல் வில்லியனூர் வரை பஸ் நிறுத்தங்கள் கட்டப்படும். நில உபயோக மாற்றம் செய்வதற்கு தற்போதுள்ள நடைமுறையை எளிமைப்படுத்துதல், புதிய மனைப்பிரிவுகளில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மனைகள் வரையறை செய்தல் போன்ற அம்சங்களையும் உள்ளடக்கி புதுச்சேரி நகர மற்றும் கிராம அமைப்புச் சட்டம் 1969 திருத்தம் செய்யப்படும்.

÷வரும் ஆண்டில் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளின் வளர்ச்சித் திட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்றார் அமைச்சர் நமச்சிவாயம்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:26
 


Page 446 of 506