Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 44 வீடுகளுக்கு அனுமதி ரத்து

Print PDF

தினமலர் 06.04.2010

குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 44 வீடுகளுக்கு அனுமதி ரத்து

தேனி : குடிசை மேம்பாட்டு திட்டத்தில் பணிகளை துவக்காதவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதில் வேறு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேனி அல்லிநகரம் நகராட்சியில் 180 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதிகளான விஸ்வநாததாஸ் காலனி, கக்கன்ஜி காலனி, ஒண்டிவீரன் நகர் பகுதிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். 2009 மார்ச் 18 ல் இருந்து வீடுகள் கட்டுவதற்கான வேலை அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.இதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் கக்கன்ஜி காலனியில் 14 பேரும், ஒண்டிவீரன் நகரில் 30 பேரும் இது வரை வீடு கட்டும் பணியை துவக்கவில்லை. அவர்கள் உடனடியாக பணியை துவங்க வேண்டும் என அறிவித்தும் இது வரை துவங்கவில்லை. இதனால் வேறு பயனாளிகளை தேர்வு செய்ய சென்னை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஏற்கனவே 44 பேருக்கு வழங்கப்பட்ட அனுமதியை நகராட்சி ரத்து செய்துள்ளது. புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:16
 

'ஸ்பாட்'டில் ரசீது: மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர் 06.04.2010

'ஸ்பாட்'டில் ரசீது: மாநகராட்சி ஆலோசனை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு ஆய்வாளர் கள், ரெய்டின் போது வசூ லிக்கும் அபராதத் தொகைக்கு, அதே இடத் தில் ரசீது வழங்குவது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஆய்வு நடத்திய சுகாதார ஆய் வாளர்கள், அபராத தொகை யாக நிர்ணயித்துள்ள தொகையை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நேற்று வெளி யான 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத் திலேயே அபராத தொகைக் கான ரசீது வழங்குவது குறித்து மாநகராட்சி நிர் வா கம் ஆலோசித்து வருகிறது. மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜவஹர்லால் கூறியதாவது: அபராதம் வசூலிக்கும் போது முறைகேடு நடக்கா மல் தடுக்க ஆலோசித்து வருகிறோம். கமிஷனர் ஜெயலட்சுமி, சென்னை யில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்குச் சென்றுள் ளார். அவருடன் ஆலோ சித்து, அபராதம் வசூலிக் கும் இடத்திலேயே ரசீது வழங்க தேவையான நட வடிக்கை எடுக்கப்படும். மேயர், கமிஷனர் பரிந் துரைப்படி, நடைமுறை சிக்கல் எதுவும் இன்றி, ரசீது வழங்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:07
 

பொது சுகாதாரம், குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

Print PDF

தினமணி 05.05.2010

பொது சுகாதாரம், குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது

சேலம், ஏப். 4: சேலம் மாநகராட்சியில் பொது சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று சேலம் மாநகராட்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

÷இந்த சங்கத்தின் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் க.பாலு கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சிவசாமி, நாகரத்தினம், செயலர் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

÷தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.குழந்தைவேலு, நகராட்சி அலுவலர் சங்க சேலம் மண்டலத் தலைவர் கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

÷மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியர் என்று அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், சேலம் மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பிற துறை பணிகளையும், பிற துறை அலுவலர்களையும் மாநகராட்சியில் திணிக்கக் கூடாது.

÷காலமுறைக்கேற்ப புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும், புதிதாக பணியில் சேர்ந்த அலுவலர்களுக்கு ஏற்கெனவே உள்ள ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொது சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் போன்ற பிரிவுகளின் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.

÷மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் காசாளராக பணியாற்றுவோர் வங்கிகளுக்கு பணம் செலுத்தச் செல்லும்போதும் மாநகராட்சி வாகனத்தை வழங்கவும், பாதுகாப்பு வழங்கவும் வழி செய்ய வேண்டும். மாநகராட்சி ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Monday, 05 April 2010 10:22
 


Page 448 of 506