Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பெரம்பலூருக்கு நவீன குப்பை அள்ளும் இயந்திரம்

Print PDF

தினமலர் 31.03.2010

பெரம்பலூருக்கு நவீன குப்பை அள்ளும் இயந்திரம்

பெரம்பலூர்:பெரம்பலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றுவதற்காக ரூ. 16 லட்சம் மதிப்பிலான நவீன குப்பை அள்ளும் இயந்திரம், ரூ. 8 லட்சம் மதிப்பில் 15 குப்பை சேகரிக்கும் பாக்ஸ்சுகள், மற்றும் ரூ. 18 லட்சம் மதிப்பில் கழிவு நீர் அகற்றும் இயந்திரம் ஆகியவை வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் முதல் கட்டமாக 15 வார்டுகளில் குப்பை அள்ளும் பாக்ஸ் கள் வைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும். துப்புரவு பணியாளர்களுக்கு இந்த இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.நிகழ்ச்சியின்போது நகராட்சி தலைவர் ராஜா, பொறியாளர் மணிமாறன், கவுன் சிலர்கள் ஜெய்குமார், கண்ணகி மற்றும் சுகதார ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், முருகன், துப்புரவு பணி மேற் பார்வையாளர் பன்னீர் ஆகியோர் இருந்தனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:27
 

மின் சிக்கனத்திற்கு முன் மாதிரி திட்டம் புதிய தெருவிளக்குகளில் சிஎப்எல் மின் விளக்குகள்

Print PDF

தினமணி 30.03.2010

மின் சிக்கனத்திற்கு முன் மாதிரி திட்டம் புதிய தெருவிளக்குகளில் சிஎப்எல் மின் விளக்குகள்

களியக்காவிளை, மார்ச் 29: மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் நோக்கத்தில் களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் புதிதாக பொருத்தப்படும் தெருவிளக்குகளில் சி.எப்.எல். மின் விளக்குகளை பொருத்த பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சி சாதாரணக் கூட்டம் மன்றத் தலைவி எஸ். இந்திரா தலைமையில் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. செயல் அலுவலர் இரா. சங்கர் முன்னிலை வகித்தார்.

இதில், பேரூராட்சி பராமரிப்பில் உள்ள கிராமச் சாலைகள், வழிப் பாதைகளில் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என 8-வது வார்டு உறுப்பினர் என். விஜயேந்திரன் தீர்மானம் கொண்டு வந்தார்.

அத் தீர்மானத்திற்கு பதிலளித்த செயல் அலுவலர், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் தலா 10 மின் விளக்குகள் புதிதாக போடவும், அவற்றில் குறைந்த அளவு மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் சி.எப்.எல். மின் விளக்குகளை பொருத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். இத் தீர்மானம் மன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து 2-வது வார்டு உறுப்பினர் என். விஜயானந்தராம், நெய்யாறு இடதுகரை கால்வாயை தூர்வாரினால் கேரளத்திலிருந்து கசிந்து வரும் நீரால் களியக்காவிளை பேரூராட்சி முழுவதும் பயனடையும். இதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா என்றார். இதற்கு பதிலளித்த செயல் அலுவலர், இதில் பொதுப்பணித் துறை மட்டுமே வேலை செய்ய முடியும் என்பதால் இது குறித்து தனித் தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம் என்றார்.

12-வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.. கமால், களியக்காவிளையில் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் பெரும்பாலான நாள்களில் அரை மணி நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்றார். இதற்கு பதிலளித்த செயல் அலுவலர், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகளின் பயன்பாட்டிற்கும் இந்த நீரையே பயன்படுத்துவதால் அதிக தேவை ஏற்படுகிறது. இதனால் குறைந்த நேரத்திலேயே தண்ணீர் தீரும் என்றார். தொடர்ந்து, உறுப்பினர் என். விஜயேந்திரன், அவசர கூட்டம் நடத்தி குடிநீர் பற்றாக்குறை சம்பந்தமாக விவாதித்து முடிவு காண வேண்டும் என்றார். இதையே பெரும்பாலான உறுப்பினர்களும் கோரினர். தேவையென்றால் அவசர கூட்டம் நடத்தலாம் என மன்றத் தலைவி இந்திரா கூறினார்.

இதைத் தொடர்ந்து, பேரூராட்சி 2-வது வார்டில் படிப்பகம் கட்ட வேண்டும். 8-வது வார்டில் திடக்கழிவு கொட்டகை சாலையில் குடியிருப்பு பகுதி மக்களின் சுகாதார வசதி கருதி மாவட்ட ஆட்சியரின் நிதி பெற்று வடிகால் ஏற்படுத்த வேண்டும். களியக்காவிளை பேருந்து நிலையத்தில் குடிதண்ணீர் வசதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மன்றக் கூட்டத்தில் துணைத் தலைவர் சலாவுதீன், வார்டு உறுப்பினர்கள் ஜெலின்பியூலா, பத்மினி, தேவராஜ், ராயப்பன், . ராஜு, சந்திரன், என். விஜயேந்திரன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 30 March 2010 11:23
 

ஆரணியில் வரி பாக்கி உள்ள கடைகளுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 30.03.2010

ஆரணியில் வரி பாக்கி உள்ள கடைகளுக்கு 'சீல்'

திருவண்ணாமலை: ஆரணியில் வரி பாக்கி உள்ள கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி பகுதியில் சொத்துவரி, குத்தகை, வாடகை வரி, குத்தகை, வாடகை இனபாக்கி, குடிநீர் வரி பாக்கி, தொழில்வரி நிலுவை பாக்கி 6 கோடியே 10 லட்ச ரூபாய் உள்ளது. மார்ச் 31ம் தேதிக்குள்ளாக அனைத்து வரி இன பாக்கிகளையும் வசூல் செய்ய முகாமிட்டு வருவதாக கமிஷனர் சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, ''கடந்த ஒரு வாரத்தில் 15 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 15 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. வரும்31ந் தேதிக்குள் வரி பாக்கியை முழுமையாக வசூலிக்கப்பட உள்ளது. தவறும் பட்சத்தில் குடிநீர் வரி பாக்கி உள்ளவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 30 March 2010 10:32
 


Page 450 of 506