Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினமலர் 25.03.2010

மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு

அனகாபுத்தூர்:அனகாபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.அனகாபுத்தூர் நகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4.87 கோடி ரூபாய் மதிப்பில் 189 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 58 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளது.

இத்திட்டப் பணிகள் உட்பட தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் நகர்புற வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆராய திட்ட இயக்குனர் விவேக் நாங்கியா மற்றும் அதிகாரிகள் நேற்று பல்வேறு இடங்களில் பார்வையிட்டனர்.அனகாபுத்தூர் எம்.ஜி.ஆர்., நகரில் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளை பார்வையிட்ட அதிகாரிகள், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டனர். தொடர்ந்து பம்மல், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகள் சென்றனர்.

Last Updated on Thursday, 25 March 2010 07:56
 

இறைச்சி கடைகளை 28ம் தேதி மூட உத்தரவு

Print PDF

தினமலர் 25.03.2010

இறைச்சி கடைகளை 28ம் தேதி மூட உத்தரவு

சென்னை:மகாவீர் ஜெயந்தியையொட்டி, வரும் 28ம் தேதி நகரில் இறைச்சிக் கடைகளை மூட, மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.மகாவீர் ஜெயந்தியையொட்டி, வரும் 28ம் தேதி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும். மேலும், ஆடு, மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்கள், அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Last Updated on Thursday, 25 March 2010 07:47
 

குடிநீர் சிக்கனம் : நகராட்சி அறிவுரை

Print PDF

தினமலர் 24.03.2010

குடிநீர் சிக்கனம் : நகராட்சி அறிவுரை

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் சிவபிரகாசம் அறிக்கை: அருப்புக் கோட்டைக்கு வரும் வைகை மற்றும் தாமிரபரணி குடிநீர் அளவு குறைந்துள்ளது. தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இனிமேல் ஆறு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். பம்ப்செட் வைத்து குடிநீரை உறிஞ்சி அதை விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பம்ப்செட் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Last Updated on Wednesday, 24 March 2010 08:51
 


Page 454 of 506