Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை

Print PDF

தினமணி 23.03.2010

வரி செலுத்தாதவர்கள் மீது ஜப்தி நடவடிக்கை

அரக்கோணம், மார்ச் 22: அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாதோர் மீது ஜப்தி உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அரக்கோணம் நகரில் பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆய்வு நடத்திய பின்னர் இதை தெரிவித்தார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் விமலா உடன் இருந்தார்.

Last Updated on Tuesday, 23 March 2010 11:01
 

ஏப்.1 ல் சென்ட்ரல் மார்க்கெட்டை மூட மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர் 22.03.2010

ஏப்.1 ல் சென்ட்ரல் மார்க்கெட்டை மூட மாநகராட்சி ஆலோசனை

மதுரை : மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டை இடம் மாற்றுவதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. டெபாசிட் தொகையை செலுத்த வியாபாரிகள் மறுத்தால், தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டை ஏப்.1 முதல் மூடிவிடலாமா என மாநகராட்சி ஆலோசிக்கிறது.
மாட்டுத்தாவணிக்கு சென்ட்ரல் மார்க்கெட், இடம் மாற்றப்பட உள்ளது. நிரந்தர கடைகள் கட்டப்படுவ தற்கு முன், தற்காலிக கடைகள் கட்டப்படுகின்றன. தற்போது, சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளின் ஏல காலம், ஏப்ரல் 1ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு, சென்ட்ரல் மார்க்கெட்டை, மாட்டுத்தாவணி தற்காலிக கடைகளுக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இப்போது சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு, அளவைப் பொறுத்து, மாதம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. புதிய இடத்திற்கு டெபாசிட் மற்றும் மாத வாடகை தொகையை மாநகராட்சி மாற்றி அமைத்துள்ளது.

ஆனால் டெபாசிட் தொகையை செலுத்த வியாபாரிகள் தயாராக இல்லை. சில கவுன்சிலர்களே வியாபாரிகளை தூண்டிவிட்டு, 'டெபாசிட்டே செலுத்த வேண்டாம்' என்று கூறுகின்றனர். இவர்களில் சிலர் பினாமி பெயர்களில் சென்ட்ரல் மார்க்கெட்டில் 50 கடைகள் வைத்துள்ளனர். இவர்கள் தான் 'வியாபாரிகளை காப்பாற்றுவதாக கூறி, வசூலிலும் இறங்கி உள்ளனர். மார்ச் இறுதிக்குப் பிறகு, புதிய இடத்திற்கு மாறவில்லை என்றால், தற்போதுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டை மூடிவிடலாமா என மாநகராட்சி ஆலோசிக்கிறது.

Last Updated on Monday, 22 March 2010 10:21
 

கோயம்பேடு வணிக வளாகத்தில் 6 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி 19.03.2010

கோயம்பேடு வணிக வளாகத்தில் 6 கடைகளுக்கு சீல்

சென்னை, மார்ச் 18: சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திய 6 கடைகளுக்கு, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

தொடர் புகார்களைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்டு வந்த 2 பிரியாணி கடைகள், 2 துரித உணவகங்கள், ஒரு தேனீர் கடை மற்றும் ஒரு சிப்ஸ் கடை ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.

அந்தக் கடைகளிலிருந்து 450 கிலோ தரமற்ற உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Last Updated on Friday, 19 March 2010 10:01
 


Page 455 of 506