Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விண்ணப்பித்த 30 நாட்களில் கட்டட ஒப்புதல் : கருத்தரங்கில் தகவல்

Print PDF

தினமலர் 19.03.2010

விண்ணப்பித்த 30 நாட்களில் கட்டட ஒப்புதல் : கருத்தரங்கில் தகவல்

மதுரை: ''விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கட்டட ஒப்புதல் நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,'' என திருநெல்வேலி பாலா கன்சல்டன்ஸ் பொறியாளர் பழனிவேல் பேசினார்.இந்திய மதிப்பீட்டாளர்கள் சங்கம் சார்பில், மதுரையில் நடந்த நகரமைப்பு விதிகள் பற்றிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கட்டட ஒப்புதல் நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பத்திரம், வில்லங்கச்சான்று, ஒப்புதல் மனைப்பிரிவு, சர்வே வரைபடம், தீயணைப்புத்துறை சான்று, உறுதிச்சான்று, 100 மீட்டர் சுற்று சார்பு வரைபடம் உட்பட 19 வகை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் இதை சரிபார்த்து வாங்க வேண்டும். இதற்காக தமிழக அரசு <http://http:// www.tn.gov.in/ dtcp >என்ற இன்டர்நெட் முகவரியை துவக்கியுள்ளது. இதில் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என அறியலாம். மேலும், 2004 க்கு பின் ஒப்புதல் அளித்த லே-அவுட், மனைப்பிரிவு வரைபடம் இதில் உள்ளது. புகார்களை அதில் அனுப்பலாம் என்றார். தலைவர் பாலாஜி, செயலாளர் அசோக், இணைச் செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 19 March 2010 06:27
 

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு 'சீல்': ஆக்கிரமிப்பாளர்கள் ஓட்டம்

Print PDF

தினமலர் 19.03.2010

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு 'சீல்': ஆக்கிரமிப்பாளர்கள் ஓட்டம்

ஆர்.கே., நகர்: கொருக்குப்பேட்டையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 17 வீடுகளை பூட்டி நேற்று அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். முன்கூட்டியே தகவல் அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள், வீடுகளை காலி செய்து ஓட்டம் பிடித்தனர்.சென்னை கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் அருகில் குடிசை மாற்று வாரியத்தால் 2004ம் ஆண்டு, 434 குடியிருப்புகள் கொண்ட பாரதி நகர் அடுக்குமாடி திட்டப்பகுதி உருவாக்கப் பட்டது.அருகில் உள்ள ரயில் நிலையத்தை ஒட்டிய ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டு அங்கிருந்த 417 குடும்பங்களுக்கு பாரதி நகர் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.அங்கு மீதமிருந்த 17 வீடுகளை துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதால், அவை யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படாமல் பூட்டி இருந்தன.

நாளடைவில், அப்பகுதியில் அரசியல்வாதிகள் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிலரின் ஆசியுடன், அந்த வீடுகளை ஆக்கிரமித்து சிலர் குடியேறினர். இதற்காக ஆயிரக் கணக்கான ரூபாய் பணத்தை அவர்களுக்கு ஆக்கிரமிப் பாளர்கள் கப்பம் கட்டியுள்ளனர்.பல ஆண்டுகள் ஆன நிலையில் தாமதமாக விழித்துக் கொண்ட குடிசைமாற்று வாரியம், ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அகற்ற முடிவு செய்தது.

குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் டேனியல் ஏசு அடியான், உதவி நிர்வாக பொறியாளர் மகேந்திரன், நிர்வாக அலுவலர் ராமராஜன் மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நேற்று காலை அங்கு வந்தனர்.அப்போது, வண்ணாரபேட்டை உதவி கமிஷனர் குமார், ஆர்.கே.,நகர் இன்ஸ் பெக்டர் சரவண பிரபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

குடிசை மாற்று வாரிய கட்டத்தில் அதிகாரிகள் நுழைந்தபோது ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 17 வீடுகளும் ஆட்கள் யாருமின்றி வெறிச்சோடி திறந்து கிடந்தன.குடிசை மாற்று வாரியத்தினர் மற்றும் போலீசார் மூலம் முன்கூட்டியே தகவல் அறிந்த ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை காலி செய்து ஓட்டம் பிடித்திருந்தனர்.அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அந்த வீடுகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.இதேபோல இக்குடியிருப்புகளுக்கு வெளியே காலியாக இருந்த இடத்தை ஆக்கிரமித்து நான்கு குடிசை வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்து.அவற்றை பல குடியிருப்புகளாக பிரித்து 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பெற்று மாதம் 1,000 ரூபாய் வாடகையில் அதை சிலர் வாடகைக்கு விட்டிருந்தனர். அருகில் உள்ள வீட்டில் இருந்து அந்த வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.சிமென்ட் சாலை வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அந்த குடிசை வீடுகளை பொக்லைன் வாகனம் மூலம், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.இது குறித்து குடிசை மாற்றுவாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தற்போது 'சீல்' வைக்கப் பட்ட 17 வீடுகள், ஐகோர்ட் வழிகாட்டுதல்படி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதுவரை குடிசை மாற்று வாரிய கட்டுப் பாட்டில் இருக்கும். அங்கு, அத்துமீறி நுழைபவர்கள் மீது போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்' என்றார்.

Last Updated on Friday, 19 March 2010 06:17
 

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மூன்று கடைகளுக்கு 'சீல்'

Print PDF

தினமலர் 19.03.2010

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மூன்று கடைகளுக்கு 'சீல்'

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் தொடர்ந்து அகற்றப்படுகின்றன.நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை , மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் அகற்றினர். அவர்களுடன் இணைந்து, மாநகராட்சியினரும் களத்தில் இறங்கினர்.

மார்க்கெட் வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்ட கடைகள் மற்றும் மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் நடத்தப்பட்ட மூன்று கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.இந்த நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது. மார்க்கெட் நிர்வாக தலைமை அதிகாரி ராஜேந் திரன் தலைமையில் சென்ற அதிகாரிகள், நூற் றுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதி ரோசலாண்ட் தலைமையில் சென்ற அதிகாரிகள், காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மூன்று கடைகளுக்கு 'சீல்' வைத்தனர்.

இது குறித்து மாநகராட்சி உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ரேவதி கூறியதாவது:காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்ய மார்க்கெட் கமிட்டியிடம் அனுமதி பெற்ற வியாபாரிகள், அக்கடையை வேறு சிலருக்கு லீசுக்கு விடுகின்றனர்.அவர்கள், காய்கறி வியாபாரம் செய்யாமல், ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்துகின்றனர். ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்த மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெற வேண்டும்.அவ்வாறு லைசென்ஸ் பெறாமல் செயல்பட்ட மூன்று கடைகளுக்கு முதல் நாள் சோதனையில் 'சீல்' வைத்தோம். இரண்டாம் நாள் சோதனையில் மீண்டும் மூன்று கடைகளுக்கு 'சீல்' வைத்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடரும்.இது தவிர 11 கடைக்காரர்கள் ஓட்டல் மற்றும் டீக்கடை நடத்த, மார்க்கெட் கமிட்டி அதிகாரியிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர்.ஆனால், அவர்கள் மாநகராட்சி லைசென்ஸ் பெறவில்லை. 'லைசென்ஸ் பெறாமல் கடை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 11 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள் ளோம்.இவ்வாறு ரேவதி கூறினார்.

Last Updated on Friday, 19 March 2010 06:15
 


Page 456 of 506