Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

எரிவாயு தகன மேடைக்கு கட்டணம் நிர்ணயம்

Print PDF

தினமணி            16.12.2013

எரிவாயு தகன மேடைக்கு கட்டணம் நிர்ணயம்

தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி எரிவாயு தகன மேடை கட்டணம் நிர்ணயம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் எஸ். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ராஜாராம், நகர்மன்றத் துணைத் தலைவர் காசிமாயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவதற்கு நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்தும், பழனிசெட்டிபட்டியில் இருந்தும் கொண்டு வரும் பிரேதங்களுக்கு ஆம்புலன்ஸ் உள்பட சேவைக் கட்டணமாக ரூ.2,400-ம், இதை அடுத்துள்ள பகுதிகளில் இருந்து கொண்டு வரும் பிரதேங்களுக்கு கூடுதல் சேவை கட்டணமாக ரூ.500-ம் வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், பொம்மையகவுண்டன்பட்டி, கருவேல்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களுக்கு நகராட்சி எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எரிவாயு தகன மேடை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழைய பிரேத வண்டிகளை அப்புறப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் மேயர் ராஜன் செல்லப்பா அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி            16.12.2013

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் மேயர் ராஜன் செல்லப்பா அறிவிப்பு

வருகிற 18–ந் தேதி முதல் அனுப்பானடி, நெல்பேட்டையில் தான் ஆடுவதை செய்ய வேண்டும் என்று மேயர் ராஜன் செல்லப்பா அறிவித்துள்ளார்.

நீர்தேக்க தொட்டி

மதுரை மாநகராட்சி 50–வது வார்டு நெல்பேட்டை காயிதே மில்லத் நகரில் ஆடுவதை கூடம் பயன்பாடற்று கிடந்தது. எனவே இந்த கூடத்தை மாநகராட்சி சார்பில் சீரமைக்கும் பணி நடந்தது. அதற்காக டைல்ஸ் அமைத்து மேற்கூரை அமைக்கப்பட்டது. மேலும் ஆழ்துழாய் கிணறு, மேனிலை நீர்தேக்க தொட்டி, கழிப்பறைகள் மற்றும் பேவர் பிளாக் என ரூ.55 லட்சத்து 60 ஆயிரத்தில் பணிகள் நடந்தன.

இந்த சீரமைப்பு பணிகள் முடிந்ததால், திறப்பு விழா நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு ஆடுவதை கூடத்தை திறந்து வைத்தார்.

மாசில்லா நகரம்

பின்னர் அவர் பேசியதாவது:–

தமிழக முதல்–அமைச்சரின் ஆலோசனையின்படி மதுரை மாநகராட்சியை மாசில்லா நகரமாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன்படி இந்த ஆடுவதை செய்யும் இடம் சுகாதரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தினை சுத்தமாக பரமாரிக்க வேண்டும்.

அனுப்பானடி நவீன ஆடுவதை கூடமும் சீர்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோட்டை சுவர் உயர்த்தும் பணி, நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18–ந் தேதி முதல்...

மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட ஆடுவதை செய்பவர்கள் அனுப்பானடி அல்லது நெல்பேட்டை ஆடுவதை செய்யும் இடங்களில் தான் வருகிற 18–ந் தேதி முதல் ஆடுவதை செய்ய வேண்டும். வேறு இடங்களில் ஆடுவதை செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கமிஷனர் கிரண்குராலா, அண்ணாத்துரை எம்.எல்.ஏ., துணை மேயர் கோபாலகிருஷ்ணன், நகர் பொறியாளர் மதுரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு விலையில்லா பொருட்கள்: சம்பத் உறுதி

Print PDF

தினமலர்             16.12.2013

அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு விலையில்லா பொருட்கள்: சம்பத் உறுதி

நெல்லிக்குப்பம்:""கல்வியில் முன்னேறினால் தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது'' என அமைச்சர் சம்பத் பேசினார். நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா நடந்தது.டி.ஆர்.ஓ., மனோகரன் தலைமை தாங்கினார். ஆவின் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பாலூர் ஊராட்சித் தலைவர் சரவணன் வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மல்லிகா, ஒன்றிய தலைவர் சுந்தரி, துணைத் தலைவர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் லோகநாயகி, ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபன், பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன், தாசில்தார் குமுதம், பி.டி.ஓ., துரைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் சம்பத் பயனாளிகளுக்கு விலையில்லா பொருட்களை வழங்கிப் @ப”கையில், "இதுபோன்ற விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. நடப்பு ஆண்டில் 2,000 @காடி ரூபாய் மதிப்பில் 35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க உள்ளோம்.

இந்த ஆண்டு கிராமப் பகுதிகள் முழுவதும் கொடுத்து முடிக்கப்படும். அடுத்த ஆண்டு நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்படும். கல்வியில் முன்னேறினால் தான் ஒரு சமுதாயம் முன்னேற முடியும் என்பதால் இந்த ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இத்திட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் முன்னேற வேண்டும்' என்றார்.

 


Page 47 of 506