Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி திட்ட பணிகள் மேயர், கமிஷனர் ஆய்வு

Print PDF

தினமலர் 02.02.2010

மாநகராட்சி திட்ட பணிகள் மேயர், கமிஷனர் ஆய்வு

திருச்சி: திருச்சி மாகநராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்படும், குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசிக்கும், மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் பொருட்டு, தமிழ்நாடு நகர்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனம் மூலம் ஜப்பான் நாட்டு நிதியுதவி, மாநில அரசின் மானியத் தொகை மற்றும் மாநகராட்சி பங்களிப்பு ஆகியவை சேர்த்து, 169 கோடி ரூபாய் மதிப்பில் எட்டு தொகுப்புகளாக பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மேலூர் அருகே கொள்ளிடம் ஆற்றில், மூன்று இடங்களில் பிரதான நீர் சேகரிக்கும் கிணறு மற்றும் பிரதான குடிநீர் உந்து குழாயினை தாங்கும் பாலத்திற்கான கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இரண்டாவது தொகுப்பில், பாரதிநகர், ஆனந்தம் நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், சிவா நகர், உறையூர், பாத்திமா நகர், மங்களம் நகர் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

சிவா நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை, மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அவர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கூறினர். ராமலிங்க நகர் முதல் மெயின்ரோடு பகுதியில் குடிநீர் உந்துகுழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர். ராமலிங்க நகர் மூன்றாவது குறுக்குத்தெரு, எழில்நகர் பகுதியில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, சாலை செப்பனிடும் பணி, ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில், போக்குவரத்து துறை அமைச்சர் நேருவின், திருச்சி-2வது சட்டசபைத் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ஒதுக்கீடு பெற்று, மூன்று லட்ச ரூபாய் செலவில், ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Last Updated on Tuesday, 02 February 2010 06:33
 

செம்மொழி மாநாட்டு பணிகள் துரிதப்படுத்த ஸ்டாலின் உத்தரவு

Print PDF
தினமலர் 01.02.2010

செம்மொழி மாநாட்டு பணிகள் துரிதப்படுத்த ஸ்டாலின் உத்தரவு

கோவை: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுப் பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.புதிய பஸ் போக்குவரத்தை துவக்கி வைப்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று கோவை வந்தார்.

முன்னதாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி நடக்கும் ஊர்வலப்பாதையை பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார். ஹோப் காலேஜ் பகுதியில், ஊர்வலத்தை பார்வையிடும் மேடை அமைக்கும் இடத் தை ஆய்வு செய்தார். பின், ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் நேரு, சாமிநாதன், ராமச்சந்திரன், பழனிசாமி, கலெக்டர் உமாநாத், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, ஐ.ஜி., பிரமோத்குமார், போலீஸ் கமிஷனர் சிவனாண்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாநாட்டு ஊர்வலம் நடக்கும் போது, கோவை வரும் வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு, பீளமேடு அருகே நடந்து வரும் ரயில்வே பாலம் அகலப்படுத்தும் பணி, மேட்டுப்பாளையம் ரோடு ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ""மாநாட்டை ஒட்டி நடக்கவுள்ள ஊர்வலம் பற்றியும், வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு மாற்றுப் பாதை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. மாநாட்டு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இதை துரிதப்படுத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.

Last Updated on Monday, 01 February 2010 06:22
 

நகராட்சி பகுதிகளுக்கு இணையாக ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது

Print PDF

தினமலர் 27.01.2010

நகராட்சி பகுதிகளுக்கு இணையாக ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகிறது

விழுப்புரம் : நகராட்சி பகுதிகளுக்கு இணையாக ஊராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என கலெக்டர் பழனிசாமி பேசினார். கோலியனூர் ஒன்றியம், சோழகனூர் ஊராட் சியில் கிராம சபா கூட்டம் நேற்று காலை நடந்தது. இதில் கலெக்டர் பழனிசாமி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, பேசியதாவது: கிராம சபா கூட்டங்கள் கிராம வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. ஒவ் வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக விளங்க வேண்டும் என்பதற்காக அரசு மூலம் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து நூலகம், சாலை, மின் விளக்கு, சுடுகாடு செப்பனிடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 1ம் தேதி முதல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத் தில் 80 ரூபாயாக வழங்கப்பட்ட கூலித் தொகை 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள் ளது. நகர்ப் புறங்களுக்கு இணையாக கிராமப் புறங் கள் அனைத்து வசதிகளையும் பெற்று உயர்கிறது என்றார்.

ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜோசப் சவுந்தரராஜன், துணை கலெக்டர் சுப்பு லட்சுமி, தாசில்தார் மனோகர் பி.டி..,க்கள் துரைக்கண்ணு, ஏகாம் பரம், பஞ்., தலைவர் பாண் டுரங்கன் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 28 January 2010 06:10
 


Page 468 of 506