Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற 4 அதிவிரைவு குழுக்கள் அமைப்பு

Print PDF

தினமணி 17.12.2009

அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற 4 அதிவிரைவு குழுக்கள் அமைப்பு

கோவை, டிச.16: கோவையில் அனுமதியற்ற கட்டடங்களை அகற்ற 4 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கோவை மாநகராட்சி பகுதியில் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே பல இடங்களில் இதுபோன்ற கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில் இப் பணியை தீவிரப்படுத்தும் வகையில் 4 அதிவிரைவு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மண்டல உதவி ஆணையர் சுகுமார் தலைமையிóலான குழுவில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மேற்கு மண்டல உதவி ஆணையர் லோகநாதன் தலைமையிóலான மண்டல சுகாதார அலுவலர் மணிவண்ணன், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தெற்கு மண்டல உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையிலான குழுவில் மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வடக்கு மண்டல உதவி ஆணையர் பொன்முடி தலைமையிலான குழுவில் மண்டல சுகாதார அலுவலர் திருமால், இளம்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அனுமதியற்ற கட்டடங்கள் தொடர்பான புகார்கள் வந்தால் இக்குழுவில் விரைவாக செயல்படுவார்கள். வணிக கட்டடங்களில் வாகன நிறுத்துமிடத்தில் கட்டப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், போக்குவரத்து நெருக்கடி, விபத்துகள் தவிர்க்க விதிகளின்படி தேவையான வாகன நிறுத்துமிடம் சம்பந்தப்பட்ட வணிக கட்டடங்களில் ஏற்படுத்துதல், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் பிரதானமான விதிமீறல் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்துதல், பணியாட்களை வெளியேற்றும் பணி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

அனுமதியற்ற விளம்பரங்களை அகற்றுதல், பாதுகாப்பற்ற, வாகன நிறுத்த வசதியற்ற கட்டடங்களை உள்ளூர் திட்டக்குழுமத்தின் துணையுடன் சீல் வைக்கவும் இக்குழுவில் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Last Updated on Thursday, 17 December 2009 08:48
 

அனுமதியின்றி வைத்துள்ள நிழற்குடைகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற ஆணையர் உத்தரவு

Print PDF

தினமணி 16.12.2009

அனுமதியின்றி வைத்துள்ள நிழற்குடைகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற ஆணையர் உத்தரவு

மதுரை, டிச.15:மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளை ஒருவார காலத்துக்குள் அப்புறப்படுத்தவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு அப்புறப்படுத்தாவிடில் மாநகராட்சி மூலம் அந்த நிழற்குடைகள் அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரேமாதிரியாக நிழற்குடைகள் அமைக்கப்படவுள்ளன. நகரில் மாநகராட்சியின் அனுமதியைப் பெறாமல் பல தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பர போர்டுகளுடன் கூடிய நிழற்குடைகளை பல பேருந்து நிறுத்தங்களில் அமைத்துள்ளன. இவ்வாறு நகரில் மட்டும் அனுமதியின்றி 350 நிழற்குடைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிழற்குடைகள் அனைத்தும் இன்னும் ஒருவார காலத்துக்குள் அப்புறப்படுத்தப்படவேண்டும்.

அதேபோல, போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி சாலையோரங்களில் கம்பி மூலம் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளையும் அகற்றவேண்டும். அவ்வாறு அப்புறப்படுத்தப்படாவிடில், மாநகராட்சி மூலம் அவை அகற்றப்படும் என்றார் ஆணையர்.

 

பழனியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 16.12.2009

பழனியில் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பழனி, டிச.15: பழனி அடிவாரம் அய்யம்புள்ளி சாலையில் சாலைப் பணிக்குக் கொட்டப்பட்டிருந்த கட்டட இடிபாடுகளை அகற்றி தரமான ஜல்லிகளைக் கொட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

பழனியில் நகராட்சி, திருக்கோயில் மற்றும் வருவாய்த் துறையினரின் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலார் ஆய்வு செய்தார்.

பழனியில் புதிதாகக் கட்டப்பட்டுவரும் பஸ் நிலையப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், திருவிழா காலம் விரைவில் துவங்க உள்ளதால், 15 நாள்களுக்குள் விரைந்து கட்டுமாறு ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.

காலதாமதம் செய்தால் அபராதம் விதிக்கும் நிலை நேரிடும் என எச்சரித்தார். பின்னர் அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் இருந்து கிரி வீதி செல்லும் சாலையை ஆய்வு செய்த ஆட்சியர், சாலையைத் தோண்டி சமன் செய்ய, வீட்டுக் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டதை உடனடியாக அகற்றி, ஒப்பந்த விதிகளின்படி முறையான ஜல்லி கற்களை கொட்ட உத்தரவிட்டார்.

மேலும் சாலையில் தாழ்வான நிலையில் செல்லும் மின்சார வயர்களை சரிசெய்யவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து கிரி வீதி, தேவஸ்தான பார்க் ஆகியவற்ரை ஆய்வு செய்து பணிகளை விரைவு செய்யுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது, பழனி நகர்மன்றத் தலைவர் ராஜமாணிக்கம், கோட்டாட்சியர் நாராயணன், பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், நகராட்சி ஆணையர் சித்திக், வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 


Page 477 of 506