Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அபராதம்: ஆணையர்

Print PDF

தினமணி 17.11.2009

வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டினால் அபராதம்: ஆணையர்

மதுரை, நவ. 16: வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் எச்சரித்துள்ளார்.

வைகை ஆற்றின் குறுக்கே உள்ள கல்பாலம் மற்றும் ஆரப்பாளையம் தரைவழிப் பாலங்களை மேயர் கோ. தேன்மொழி, ஆணையர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வுசெய்தனர்.

கோச்சடையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.

பின்னர், ஆணையர் கூறியதாவது:

வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள் மற்றும் குப்பைகள் பொதுப்பணித் துறையினர் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

வைகை ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் குப்பைகளைக் கொட்டியும், மாடுகளைக் கட்டியும் அசுத்தம் செய்துவருகின்றனர். இதனால் வைகை ஆறு மாசுபடுகிறது. எனவே, வைகை ஆறு மாசுபடாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இனிவரும் காலங்களில் வைகை ஆற்றில் குப்பைகளைக் கொட்டுவோர் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரித்தார்.

முன்னதாக, 66-வது வார்டு பைகாரா பகுதியில் காலனி வீடுகள் மற்றும் பாதாளச் சாக்கடைப் பணிகளை ஆய்வுசெய்து, சாலையில் தேங்கியுள்ள தண்ணீரையும், பழுதடைந்துள்ள மின்கம்பங்களையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க மேயர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, துணை மேயர் பி.எம். மன்னன், மண்டலத் தலைவர் என். நாகராஜன், கவுன்சிலர் மா. கணேசன், உதவி ஆணையர் (மேற்கு) ரவீந்திரன், உதவிச் செயற்பொறியாளர் எம்.ஆர். சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Tuesday, 17 November 2009 07:20
 

பாதாளச் சாக்கடைத் திட்டம்: ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Print PDF

தினமணி 17.11.2009

பாதாளச் சாக்கடைத் திட்டம்: ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ராமநாதபுரம், நவ.16: ராமநாதபுரம் நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் தாமதமாவதற்கான காரணம் குறித்து ஒப்பந்ததாரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாக நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜி.லலிதகலா ரெத்தினம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

நகரின் மேம்பாட்டுக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் அ.தி.மு..ஆட்சியின் போது திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்கள் பங்களிப்பு கேட்டு அந்த நிதியும் பெறமுடியாத நிலையில் துணை முதல்வர் மு..ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரும் இத்திட்டத்தை மக்களின் வசதி கருதி நிறைவேற்றுவோம் என்றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இரு ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் 92 சதவீதப் பணிகள் முடிந்து 8 சதவீத பணிகள் மட்டுமே காலதாமதமாக நடந்து வருகின்றன. துணை முதல்வர், ஆட்சியர் ஆகியோரின் தொடர் ஆய்வின் காரணமாக 92 சதவீத பணிகள் நடந்திருக்கின்றன.

மீதமுள்ள பணியை துணை- ஒப்பந்ததாரர்கள் தான் செய்து முடிக்காமல் கால தாமதம் செய்து வருகின்றனர்.

இதனால் நகராட்சி பகுதிகளில் சாலைகளை சீர்செய்ய முடியவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்தும் குடிநீர் வடிகால் வாரியம் அப்பணிகளை முடித்து நகராட்சியிடம் ஒப்படைத்தால் மட்டுமே நகரில் சாலைகளை சீராக்க முடியும் என்ற அரசு விதி உள்ளது.

மழைக்காலம் தொடங்கி விட்டதால் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் துணை ஒப்பந்ததாரர்களால் தாமதம் ஏற்பட்டு விட்டது.

விதிமுறையை மீறி சாலைகள் அமைத்து இருந்தால் பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு சென்று பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு தடை பெற்று அதற்கான இழப்பீட்டு தொகையினை நகராட்சி நிர்வாகமே ஏற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடும்.

எனவே நகர் மக்களின் நலன் கருதி பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடித்துக் கொடுக்குமாறு சம்மபந்தப்பட்ட துணை ஒப்பந்ததாரர்கள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.பணிகளை விரைவாக முடித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், நகராட்சிக்கும் நற்பெயர் எடுத்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் மழைக்காலங்களால் ஏற்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்ளுமாறும் ஆர்.ஜி.லலதகலா ரெத்தினம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated on Tuesday, 17 November 2009 07:15
 

குமரி கடற்கரை தனியார் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 14.11.2009

குமரி கடற்கரை தனியார் பூங்காவில் ஆட்சியர் ஆய்வு

கன்னியாகுமரி, நவ. 13: கன்னியாகுமரி கடற்கரையில் தனியார் பூங்கா அமைந்துள்ள பகுதியை மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கடலோர மண்டல மேலாண்மை திட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபம் அருகே பேரூராட்சி அனுமதியுடன் ரூ. 15 கோடி செலவில் தனியார் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இப்பூங்கா அமைக்க பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் பூங்கா அமைக்கும் பணியை நிறுத்துமாறு அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜோதிநிர்மலா 9.3.2008 அன்று உத்தரவிட்டார். இதையடுத்து, பூங்கா அமைக்கும் பணி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது.

பூங்கா அமைப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றம் ஓர் உத்தரவினை பிறப்பித்தது. இந்த உத்தரவின் படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கடலோர மண்டல மேலாண்மை திட்டக்குழுவினர் வெள்ளிக்கிழமை பூங்காவை பார்வையிட்டு

ஆய்வு செய்தனர். இக்குழுவில் மாவட்ட வன அலுவலர் சுந்தர்ராஜு, நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் த.மோகன், நெல்லை நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் பாபு, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர்கள் சுயம்பு தங்கராணி, ஆல்பின், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பாலசந்திரன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா உள்ளிட்டோர் சென்றனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:43
 


Page 484 of 506