Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமணி 14.11.2009

புதிய கட்டடங்கள்: அமைச்சர் ஆய்வு

காரியாபட்டி, நவ.13: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மல்லாங்கிணறில் ரூ. 54 லட்சம் செலவில் முன்மாதிரி நூலகம், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.5 லட்சம் செலவில் மெயின் பஜாரில் பேருந்து நிறுத்தக் கட்டடம், ரூ. 4 லட்சத்தில் நவீனக் கழிப்பறை போன்ற கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இவற்றை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தெனóனரசு, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் முத்துவிடம் கட்டடப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் பள்ளி மாணவர்களிடம் பாடங்கள் குறித்த விவரங்களைக் கேட்டார்.

மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் நாகையா, துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலர் எஸ்.எம். போஸ், ஒன்றியக்குழு தலைவர் சம்பத், ஒன்றியச் செயலர் சண்முகச்சாமி,மாவட்ட கவுன்சிலர் போஸ், நகரச் செயலர்கள் மா. முருகேசன், செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:27
 

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் ஆணையர் ஆய்வு

Print PDF

தினமணி 14.11.2009

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் ஆணையர் ஆய்வு

மதுரை, நவ. 13: மதுரை மாநகராட்சி லேடி வெல்லிங்டன் மற்றும் செல்லூர் மகப்பேறு மருத்துவமனைகளில் ஆணையர் எஸ். செபாஸ்டின் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் வருகைப் பதிவேடுகளைப் பார்வையிட்டார். பின்னர், அங்கிருந்த தாய்மார்களிடம் சிகிச்சை மற்றும் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை சரியாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, தேவையான உபகரணங்கள் உள்ளனவா? என்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செல்லூர் பகுதிகளில், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக பயனாளிகளின் புகைப்படம் எடுக்கும் பணியைப் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, நகர் நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், உதவி நகர் நல அலுவலர் டாக்டர் யசோதாமணி ஆகியோர் உடனிருந்தனர்.

Last Updated on Saturday, 14 November 2009 06:15
 

பொதுப் பணிகள் நாள் உறுதிமொழியேற்பு

Print PDF

தினமணி 12.11.2009

பொதுப் பணிகள் நாள் உறுதிமொழியேற்பு

திருச்சி, நவ. 12: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுப் பணிகள் நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மேயர் எஸ். சுஜாதா தலைமை வகித்தார். ஆணையர் த.தி. பால்சாமி, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், உதவி ஆணையர்கள் சே. சொக்கலிங்கம், கு. மானோஜி, நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி. சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"துறைகளில் நேர்மையும், ஒளிவுமறைவற்ற தன்மையும் இடம்பெற தொடர்ந்து அயராது பாடுபடுவோம். ஊழலை அறவே ஒழித்திட இடையராது முயல்வோம். நாட்டு மக்களுக்கு உயர் நெறிகளின் அடிப்படையிலான சேவைகள் புரிவோம். எவ்வித அச்சமும், தயவுமின்றி நம் மனசாட்சி காட்டும் நெறியின்படி கடமையாற்றுவோம்' என அனைவரும் உறுதிமொழியேற்றனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:13
 


Page 485 of 506