Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு 3-ம் கட்ட ஏலம்

Print PDF

தினமணி 12.11.2009

ஒசூர் பஸ் நிலைய கடைகளுக்கு 3-ம் கட்ட ஏலம்

ஒசூர், நவ.11: ஒசூர் புதிய நவீன பஸ் நிலைய கடைகளுக்கான 3-ம் கட்ட முன் ஏலம் மற்றும் முன் ஒப்பந்தப்பள்ளி புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு சென்னை நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன், சேலம் மாநகராட்சி ஆணையரும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருமான (பொ) பழனிச்சாமி, ஒசூர் நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கடை எண் 1,4,6,7,39,40,42,53,73 மற்றும் உணவு விடுதிகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் குறிப்பாக 4-ம் எண் கடை ரூ.21,700, 39-ம் எண் கடை ரூ.24,250, உணவு விடுதி ரூ.45 ஆயிரம் ஏலம் போனது.

இது குறித்து சென்னை நகராட்சி கூடுதல் இயக்குநர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியது:

ஒசூர் புதிய பஸ் நிலையப் பணிகளை முடிக்க மேலும் ரூ.3 கோடி தேவைப்படுவதால் முன்ஏலம் மற்றும் முன் ஒப்பந்தப்புள்ளி ஆகியவை நடைபெற்று வருகிறது. தற்பொழுது ஒரு சில கடைகள் மட்டும் முன் ஏலம் நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள கடைகளும் விரைவில் முன்ஏலம் நடத்தப்படும்.

தற்பொழுது பழைய பஸ் நிலைய கடை சங்கத்தினர் தொடர்ந்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் ஏலம் எடுத்தவர்களுக்கு கடையை உறுதி செய்து, ஏலத்தில் கடை கிடைக்காதவர்களுக்கு அவர்கள் செலுத்திய டெப்பாசிட் தொகை ரூ.4 லட்சம் உடனடியாக திருப்பித் தரப்படும் என்றார்.

Last Updated on Thursday, 12 November 2009 07:49
 

ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கு ஏலம் நடத்தி நகராட்சி உறுதி செய்யலாம்

Print PDF

தினமணி 11.11.2009

ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கு ஏலம் நடத்தி நகராட்சி உறுதி செய்யலாம்

ஒசூர், நவ. 10: ஒசூர் புதிய பஸ் நிலையக் கடைகளுக்கு ஏலம் நடத்தி, இதனை நகராட்சி உறுதி செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

ஒசூர் புதிய நவீன பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 76 கடைகள் மற்றும் 2 உணவு விடுதிகளுக்கான முன் ஏலம் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் பெறுவதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய பஸ் நிலையக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில் (வழக்கு எண் டபிள்யூ.பி.எண் 21351/2009) ஏலம் நடைபெற்ற பின் உறுதி செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவை பெற்றிருந்தனர்.

இவ்வழக்கை நவ.5-ல் விசாரணைக்கு வரப்பெற்றபோது, வழக்கினை தள்ளுபடி செய்து நகராட்சிக்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.முரளி ஆஜராகி வாதாடினார். இன்று ஏலம் எனவே, ஒசூர் புதிய நவீன பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகளுக்கான நவ.11-ல் நடைபெறும் மறுமுன் ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

Last Updated on Wednesday, 11 November 2009 09:34
 

மழைநீர் உடைப்பு, கழிவுநீர் அடைப்பு: 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

Print PDF

தினமணி 10.11.2009

மழைநீர் உடைப்பு, கழிவுநீர் அடைப்பு: 24 மணி நேரமும் புகார் செய்யலாம்

கோவை, நவ. 9: மழை நீரால் சாக்கடை அடைப்பு, வீடுகளுக்குள் வெள்ளம் போன்ற தொந்தரவுகள் இருந்தால் 24 மணி நேரமும் உதவி பெறலாம் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

தொடர் மழை பெய்து வருவதால் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா முன்னிலை வகித்தார். இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

மாநகராட்சியின் பல பகுதிகளில் சாக்கடை நீர் அடைப்புகளை சரிசெய்ய ரூ.2 கோடியில் ஏற்கெனவே பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை நீரால் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்ய மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தயார் நிலையில் அலுவலர்கள் பணியில் உள்ளனர். எனவே, 0422-3234071, 3234072 என்ற தொலைபேசி எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம்.

மழைநீர் வடிகால் வசதி இன்றி நீர் தேங்கும் இடங்களில் மழைநீர்த் தொட்டி அமைத்து நிலத்தடி நீரை சேமிக்கலாம்.

தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஒவ்வொரு மண்டலங்களிலும் 10-க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வாலாங்குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குளத்துக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் 21 முதல் 25 வார்டுகள், 12 மற்றும் 13-வது வார்டுகள் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதை சரிசெய்யும் வகையில் தண்ணீர் வரும் பகுதியை பொதுப்பணித்துறை மூலம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காய்ச்சல் மாத்திரை தர ஏற்பாடு: சிக்குன் குன்யா, டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலைகளை குணப்படுத்தும் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகத்திற்கு தயாராக உள்ளன.

துணை மேயர் நா.கார்த்திக், மண்டல தலைவர்கள் பைந்தமிழ் பாரி, வி.பி.செல்வராஜ், எஸ்.எம்.சாமி, சி.பத்மநாபன், எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார், ஆளும்கட்சித் தலைவர் ஆர்.எஸ்.திருமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Tuesday, 10 November 2009 07:29
 


Page 486 of 506