Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சென்னை மாநகராட்சி 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கு தாக்கல் 89 பேருக்கு "நோட்டீஸ்"

Print PDF

மாலை மலர் 30.09.2009

சென்னை மாநகராட்சி 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கு தாக்கல் 89 பேருக்கு "நோட்டீஸ்"

சென்னை, செப்.30-

சென்னை மாநகராட்சி விதிமுறைப்படி கவுன்சிலர்கள் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய மாநகராட்சி கவுன்சிலர்கள் 2006 முதல் 2009 வரை 3 ஆண்டுகளுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு வரை 25 கவுன்சிலர்கள் மட்டுமே முறையாக சொத்துக் கணக்கை தாக்கல் செய்திருந்தனர். மேயர் மா.சுப்பிரமணியன் அனைத்து கவுன்சிலர்களிடமும் உடனே கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இதன் காரணமாக பல கவுன்சிலர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். மேயர் மா.சுப்பிரமணியன், ஆளுங் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல தலைவர்கள் டன்லப்ரவி, சண்முகசுந்திரம், .தனசேகரன் உள்பட 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 86 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மேயர் உத்தரவிட்டுள்ளார்.

கவுன்சிலர்களின் சொத்து விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிடப்படுமா? என்று கமிஷனர் ராஜேஷ்லக்கானியிடம் கேட்ட போது சட்டத்துறையின் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும் என்றார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கவுன்சிலர்களின் சொத்து விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

Last Updated on Thursday, 01 October 2009 05:48
 

புதுச்சேரி ஓட்டல்களில் உள்ளாட்சி இயக்குநர் சோதனை

Print PDF

தினமலர் 29.09.2009

Last Updated on Wednesday, 30 September 2009 12:54
 

கத்திவாக்கம், பெரிய சேமூர் நகராட்சித் தலைவர்கள் நீக்கம்: அரசாணை வெளியீடு

Print PDF

தினமணி 24.09.2009

கத்திவாக்கம், பெரிய சேமூர் நகராட்சித் தலைவர்கள் நீக்கம்: அரசாணை வெளியீடு

சென்னை, செப். 23: கத்திவாக்கம், பெரிய சேமூர் நகராட்சித் தலைவர்களை பதவியிலிருந்து நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ள ஆணை விவரம்:

திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் நகராட்சித் தலைவர் ஏ. முருகவேலுக்கு எதிராக நகராட்சிக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் 19 பேர் இந்தத் தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டிருந்தனர்.

இதையடுத்து ஏ முருகவேல் நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

ஈரோடு மாவட்டம் பெரிய சேமூர் நகராட்சித் தலைவர் எஸ்.டி. பிரபாகரனுக்கு நகராட்சியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 18 கவுன்சிலர்களில் 15 பேர் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளனர்.

எனவே, எஸ்.டி. பிரபாகரன் பெரிய சேமூர் நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

Last Updated on Thursday, 24 September 2009 06:54
 


Page 489 of 506