Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

எழும்பூரில் விநாயகர் கோவில் முகவரியில் போலி ரேஷன் கார்டு: மாநகராட்சி அதிகாரி விசாரணை

Print PDF

மாலை மலர் 27.08.2009

எழும்பூரில் விநாயகர் கோவில் முகவரியில் போலி ரேஷன் கார்டு: மாநகராட்சி அதிகாரி விசாரணை

சென்னை, ஆக. 27-

சென்னையில் போலி ரேசன் கார்டுகளை கண்டுபிடிக்க வீடு வீடாக அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் எழும்பூர் விநாயகர் கோவில் முகவரியை பயன்படுத்தி முஸ்லிம் வாலிபர் ஒருவர் போலியாக ரேஷன் கார்டு பெற்றுள்ளதாக மாநகராட்சி அதிகாரிக்கு புகார்கள் குவிந்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

எழும்பூரை சேர்ந்த சபீக்பேக் என்பவர் எண்.1, சுந்தரம் தெரு, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு மாற்றம் செய்து ரேசன் கார்டு பெற்றுள்ளார்.

அவர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் வீடு ஏதும் கிடையாது. அந்த முகவரியில் கடந்த 40 வருடத்திற்கும் மேலாக விநாயகர் கோவில் மட்டுமே உள்ளது. எந்த அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் விநாயகர் கோவில் முகவரிக்கு முஸ்லிம் வாலிபருக்கு ரேசன் கார்டு வழங்கினர் என்பது தெரியவில்லை. இதையறிந்த அப்பகுதி மக்கள் கொந்தளித்தனர்.

இது குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் மனோகரனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதி மக்கள் கூறும்போது, சாதாரண மக்கள் உண்மையான முகவரி கொடுத்து ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் இழுத்தடித்து 1 வருடம் கழித்துதான் ரேசன் கார்டு வழங்குகிறார்கள். ஆனால் முஸ்லிம் வாலிபருக்கு விநாயகர் கோவில் முகவரியில் போலி ரேசன் கார்டு வழங்கி இருப்பதற்கு பின்னணியில் ஏதோ சதி நடந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மாநகராட்சி உதவி ஆணையர் மனோகரன் கூறும்போது:-

கடந்த 1 1/2 மாதங்களாக இது பற்றிய புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. ஊழியர்களை அனுப்பி ஆய்வு செய்தேன். இது போல்தான் நடந்துள்ளது. பிரச்சினைக்குரியது என்பதால் நானே நேரடியாக சென்று விசாரிக்கலாம் என்று இருக்கிறேன். நேரம் கிடைக்காததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றார்.

 

ராமநாதபுரத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னேற்பாடு

Print PDF

தினமணி 27.08.2009

ராமநாதபுரத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னேற்பாடு

ராமநாதபுரம், ஆக. 26: ராமநாதபுரம் நகரில் மழைநீர் தேங்காமல் இருக்கத் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் த.. ஹரிஹரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கேணிக்கரை, கிடாவெட்டி ஊரணி, சின்னக்கடை, குமரய்யா கோயில் தெரு, பாம்பூரணி, நாகநாதபுரம், சக்கரக்கோட்டை, சிவஞானபுரம், நேரு நகர் ஆகிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் அவர், இப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை விரைந்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் ஜே.கே. ரித்தீஷ், வருவாய் கோட்டாட்சியர் து. இளங்கோ, வட்டாட்சியர் இந்திரஜித், நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

சிந்தாதிரிப்பேட்டையில் நாளை மறுநாள் "மக்களைத் தேடி'

Print PDF

தினமணி 27.08.2009

சிந்தாதிரிப்பேட்டையில் நாளை மறுநாள் "மக்களைத் தேடி'

சென்னை, ஆக. 26: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மக்களின் குறை தீர்க்கும் "மக்களைத் தேடி' நிகழ்ச்சி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மேயர் மா. சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். சிந்தாதிரிப்பேட்டை, 53, மேற்கு கூவம் ஆறு சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து அளிக்கும் மனுக்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு காணப்படும்.

இதில், மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்கின்றனர். 79 முதல் 84 வரையிலான வார்டுகளில் உள்ள பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

 


Page 496 of 506