Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பல்லடத்தில் 400 டயர்கள் அழிப்பு

Print PDF

தினகரன்             04.12.2013

பல்லடத்தில் 400 டயர்கள் அழிப்பு

பல்லடம்,  திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்குகாய்ச்சல் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட துணை இயக்குனர் ரகுபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலையில் வட்டார மேற்பார்வையாளர் சண்முகநாதன், துப்பு ரவுஆய்வாளர் சரவணன், சுகாதாரஆய்வாளர்கள் முத்துபையன், தமிழ்ச்செல்வி, ரகுநாதன், ஜெயராமன். துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பனப்பாளையம், நால்ரோடு, அண்ணாசிலை, செட்டிபாளையம்ரோடு உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை செய்து சுமார் 400க்கும் மேற்பட்ட டயர்களை அழித்தனர்.

 

சத்தி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினகரன்             04.12.2013

சத்தி பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சத்தியமங்கலம், : சத்தியமங்கலம் பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கோபி சப்கலெக்டர் சந்திரசேகர் சாகமுரியின் உத்தரவின்பேரில் கோபி, பவானி பஸ்நிலையங்களில் கடைக்காரர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன.

இதைத்தொடந்து சத்தியமங்கலம் பஸ்நிலையத்திலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனால் ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமித்த பகுதிகளை தானாகவே முன்வந்து அகற்றினர். இதற்கிடையே நேற்று நகராட்சி அலுவலக ஊழியர்கள் பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Last Updated on Wednesday, 04 December 2013 09:15
 

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி             04.12.2013

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அரசு அனுமதி இன்றி அமைக்கப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மு.கருணாகரன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

அகற்ற வேண்டும்

நெல்லை மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு உத்தரவுக்கு முரணாகவும், அரசு அனுமதி இன்றியும் தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகளை நிறுவி உள்ளனர். அரசு அனுமதி இன்றி நிறுவப்பட்டு இருக்கும் விளம்பரப் பலகைகளை நாளை 5–ந் தேதி வியாழக்கிழமைக்குள் தாங்களே முன்வந்து அகற்ற வேண்டும்.

இல்லை என்றால் மறுநாள் அதாவது 6–ந் தேதி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விளம்பர பலகைகள் அகற்றப்படும். அதற்குரிய செலவுத் தொகையை அந்தந்த நிறுவனத்திடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேதங்களுக்கு..

விளம்பரப் பலகைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், விளம்பரப் பலகைகளின் பொருட்சேதங்களுக்கு அரசு பொறுப்பேற்காது. எனவே தனியார் நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

 


Page 58 of 506