Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

Print PDF

தினமணி             28.11.2013

வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்

கோவையில் வாடகை செலுத்த தவறிய ஐந்து கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரியில்லாத இனங்களின் கீழ் ஒதுக்கீடு பெற்ற மாநகராட்சி வணிக வளாக கடைகளுக்கு தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் க.லதா எச்சரித்திருந்தார்.

அதன்படி, மாநகராட்சிக்கு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வாடகை செலுத்தாத கடை உரிமைதாரர்களுக்கு அறிவிப்பு அனுப்பியும் வாடகை நிலுவை தொகையினை செலுத்தாத 5 கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்படும் கடைகளுக்குச் செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையினை உடனடியாகச் செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ளலாம் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

 

மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை

Print PDF

தினகரன்             27.11.2013

மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை

கோவை, : கோவை மாநகராட்சி வதை கூடத்தில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தேவாங்கபேட்டை, உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோடு, உப்பிலிபாளையம் பகுதியில் வண்டி மாடுகள் உள்ளன. காங்கயம் இனத்தை சேர்ந்த இந்த மாடுகள் குப்பை வாகனங்கள் இயக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கோமாரி நோய் வேகமாக பரவி வரும் நிலையில், மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் அசோகன் தலைமையில் நேற்று முன் தினம் 46 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

மாடுகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது. அசோகன் கூறுகையில், ‘‘சத்தி ரோட்டில் உள்ள மாடு வதை கூடத்தில் தினமும் 30 முதல் 50 மாடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மாடுகளை ஒரு நாளுக்கு முன்பே நோய் உள்ளதா என பரிசோதனை செய்து வருகிறோம். கோமாரி நோய் உள்ளிட்ட நோய்கள் இருந்தால் அந்த மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

 

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி           27.11.2013

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

செங்கோட்டை

செங்கோட்டை நகரசபை ஆணையாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

செங்கோட்டை நகரசபை பகுதியில் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி உள்பட பல்வேறு வரி இனங்களை செலுத்தாதவர்கள் உடனடியாக நகரசபை அலுவலக கணினி மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி போன்ற நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்த்து பொதுமக்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


Page 62 of 506