Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிப்பு 26–ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி         22.11.2013

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிப்பு 26–ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டுகோள்

தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களை நிரப்ப பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதால் வருகிற 26–ந்தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சரிபார்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தமிழ் செல்வி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இளநிலை உதவியாளர் பணியிடம்

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கான மாநில அளவில் அறிவிக்கப்பட்ட இளநிலை உதவியாளர் பணி காலியிடங்களுக்கு மாநில அளவிலான பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இப்பணிகாலியிடத்திற்கான கல்வி தகுதி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கம்ப்யூட்டர் ஆட்டோமேஷன் அரசு சான்று முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். 1–7–2013– நாளில் ஓ.சி பிரிவினர் 30 வயதும், பி.சி/எம்.பி.சி/ பி.சி முஸ்லிம் பிரிவினர் 32 வயதும் எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ பிரிவினர் 35 வயதும் மிகாமல் இருக்கவேண்டும்.

இணைய தளத்தில் சரிபார்ப்பு

எனவே மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருச்சியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ அல்லது அரசு ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றினை பட்டப்படிப்புடன் எஸ்.சி/பி.சி பொதுப்பிரிவினர் 18–7–2002 தேதி வரையும், எம்.பி.சி பிரிவினர் 8–10–2002 தேதி வரையும், பி.சி முஸ்லிம் 31–7–2003 வரையும், எஸ்.சி.ஏ பிரிவினர் 23–9–2003 தேதி வரையும், எஸ்.டி பிரிவினர் 25–11–2005 தேதி வரையும் பதிவு செய்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் பதிவுதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவை சரிபார்த்து இணைய தளத்தில் அடையாள அட்டை பிரதி எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

26–ந்தேதிக்குள்...

பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக அட்டை (இணையதளம்) பிரிண்ட் அவுட், அனைத்து அசல் கல்வி சான்றுகள், இவ்வலுவலகத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றின் ஜெராக்ஸ் பிரதிகளுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 26–11–2013க்குள் வருகை தந்து பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்று உள்ளதை தவறாமல் சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும்: மாநகராட்சி உறுதி

Print PDF

தினமலர்          22.11.2013

திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்படும்: மாநகராட்சி உறுதி

திருச்சி: திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டு பகுதிக்கு பல மாவட்டங்களில் இருந்து வெளிமாநில மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதனால் இந்த பகுதியை சுகாதாரமாக பராமரிக்கவும், தேவையான கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இங்கு ரூ.13.50 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பிடம் கட்டப்பட உள்ளது. மேலும் 11 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. கழிப்பிட இடத்தையும், கட்டுமான பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெயா, கமிஷனர் தண்டபாணி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறியதாவது: கண்காணிப்பு கோபுர கட்டடத்தில் கலை அம்சம் கொண்ட ஓவியங்கள் வடிவமைக்கவும், சுய உதவி குழு மூலம் திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல் மையமும் அமைக்கப்படவுள்ளது. பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே ஆண்களுக்கு இரு இலவசம், மூன்று கட்டண கழிப்பிடமும், பெண்களுக்கு ஒரு இலவசம், மூன்று கட்டண கழிப்பிடமும் உள்ளது. கழிப்பிடங்கள் மைக்ரோ ஆர்கனிஸம் எனும் தண்ணீர் கலந்த மருந்து தெளிக்கப்பட்டு துர்நாற்றம் இல்லாத வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்டில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் அனைத்து பகுதியிலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க, முக்கிய இடங்களில் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்            22.11.2013

மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

பவானி, :  பவானி நக ராட் சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் கருப் பணன் தலைமையில் நேற்று நடை பெற்றது. துணைத் தலைவர் ராஜேந் திரன், ஆணையாளர் ராஜேஸ்வரி, பொறியாளர் பேரின்பம், துப்புரவு அலுவலர் சிவக் குமார் மற்றும் அலு வ லர்கள் முன்னிலை வகித் தனர். கூட் டத்தில் பெரும் பாலான உறுப் பி னர்கள் நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யு றுத் தினர்.

முத்துசாமி (அதிமுக) : நக ராட்சிப் பகுதியில் அதிகளவு நாய்கள் பெரு கி யுள்ளது. அதே போன்று, ஒரு சில பகு தி களில் பன்றிகள் நட மாட் டமும், போக் கு வ ரத் துக்கு இடையூறாக குதி ரை களும் நின்று கொண் டுள்ளன.

சரவணக்குமார் (திமுக) : நடந்து செல்வோரைக் கடிப் பதும், பைக்கில் துரத் து வதும் நாய்களின் வேலையாக உள்ளது.

சத்தியமூர்த்தி (திமுக) : எனது வார்டில் இரண்டு பேரை தெரு நாய்கள் கடித் துள்ளன. உட ன டியாக நாய்த் தொல் லையைப் போக்க நட வ டிக்கை எடுக்க வேண்டும். நாய்களைப் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் சென்று விட வேண்டும்.

கவிதா சந்திரன் (திமுக): தெரு வி ளக் குகள் இருந்தும் இரவு நேரங் களில் எரி வ தில்லை. இது கு றித்து, அதி காரிகளுக்கு தெரி வித்தும் எவ்வித நட வ டிக் கையும் எடுப்பதில்லை.

துப்புரவு அலுவலர் சிவக் குமார் : நகரில் பெரும் பாலான நாய் களுக்கு இனப் பெ ருக்கத் தடை அறுவை சிகிச்சை செய் யப் பட் டுள்ளது. விரைவில் அனைத்து நாய் க ளையும் பிடிக்க நட வ டிக்கை எடுக் கப் படும். தெருவில் குதிரைகள், மாடுகள் என கால் ந டைகள் இடை யூ றாகத் திரிந்தால் அவை நகராட்சி ஊழி யர் களால் பிடிக் கப் ப டு வதோடு, உரி மை யா ளர் களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

ராஜசேகர் (அதிமுக) : 1வது வார்டில் கடந்த 5 நாட்களாக தெரு வி ளக் குகள் எரி ய வில்லை. மின்சாரம் இருந் த போ திலும் இப்பகுதி இருளில் மூழ்கியுளளது.

ஆறுமுகம் (அதிமுக) : 16வது வார்டு முத் து மா ரி யம்மன் கோயில் பகுதியில் ஒரு வீட்டுக்கு குடிநீர் குழாயில் 3 குடம் மட்டுமே தண்ணீர் கிடைக் கிறது. மின்சாரம் இல்லாத நேரத்தில் குடிநீர் விநி யோ கிக் கப் பட்டால் அனைத்துப் வீடு களிலும் தண்ணீர் போதுமான அளவு கிடைக் கிறது. மின் மோட்டார் கொண்டு தண்ணீர் உறிஞ் சு வதால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.

தலைவர் கருப் பணன் : பொது மக் களுக்கு இடையூறாக உள்ள தெரு நாய் களைப் பிடிக்க நட வ டிக்கை எடுக் கப் படும்.

 நகரில் வீடு களுக்கு வழங் கப் பட் டுள்ள குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ் சு வதாக புகார் எழுந் துள்ளது. அனைத்து வீடு களுக்கும் சமமான அளவு தண்ணீர் விநி யோ கிக்க வேண்டும். விதி களுக்கு புறம்பாக மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ் சினால் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும், என்றார்.

பவானி நகராட்சி 27வது வார்டில் மெயின்ரோடு, செல் லி யாண் டி யம்மன் கோயில் ரோடு, முன்னாள் எம்எல்ஏ சவுந் தி ர ராஜன் வீடு முன்பாக சாக்கடை, அரிமா சங்க கட்டடம் முதல் ஐயப்பா மண்டபம் வரை காவேரி வீதியில் சாக்கடை அமைக்கக் கோரி திமுக கவுன் சிலர் ஜெயப் பிரகாஷ் மனு அளித்தார்.

இக் கூட் டத்தில், ஐயூடிஎம் திட் டத்தில் சொக் க ரா யன்காடு மற்றும் குரு நா த க வுண்டர் வீதி, மீனாட்சி கல்யாண மண்டப வீதி, வர் ண புரம் 1, 2, 3 மற்றும் 4வது வீதிகள், வார்டு 12, 15 மற்றும் 16ல் உள்ள மார்க்கெட் ரோடு, மண் தொழிலாளர் வீதி 2 மற்றும் 3வது வீதியில் தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.2 கோடிக்கு தார்ச்சாலை பரா ம ரித்தல் பணிகள் மேற் கொள்தல் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 65 of 506