Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி

Print PDF

தினகரன்            22.11.2013

பதிவு மூப்பு சரிபார்க்க அழைப்பு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணி

திருச்சி, : குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு தங்களது பதிவு மூப்பை சரிபார்த்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, ஆபீஸ் ஆட்டோமேஷன் பட்டப்படிப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்கள் தங்களின் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 01.07.13ம் தேதியுடன் ஓசி பிரிவினர் 30 வயதும், பிசி, எம்பிசி, பிசி முஸ்லீம் பிரிவினர் 32 வயதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் எஸ்சிஏ பிரிவினர் 35 வயதும் மிகாமல் இருக்க வேண்டும்.

இத்தகுதியை உடையோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அவர்கள் தங்களின் பதிவுகளை சரிபார்த்துக்கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும். எஸ்சி, பிசி மற்றும் பொதுப்பிரிவினர் 18.7.2002 வரையிலும், எம்பிசி பிரிவினர் 8.10.2002 வரையிலும், பிசி முஸ்லிம் பிரிவினர் 31.7.2002 வரையிலும், எஸ்சிஏ பிரிவினர் 23.9.2003, எஸ்டி பிரிவினர் 25.11.2005 தேதி வரையும் பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை சரிபார்த்து,

<லீttஜீ://tஸீஸ்மீறீணீவீஸ்ணீணீவீஜீஜீu.ரீஷீஸ்.வீஸீ> என்ற இணையதளத்தில் அடையாள அட்டை பிரதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் சான்று நகல்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரும் 26ம் தேதிக்குள் நேரில் சென்று பட்டியலில் பெயர் உள்ளதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் மாற்றம் மாநகராட்சி புதிய ஆணையர் நடவடிக்கை

Print PDF

தினகரன்            22.11.2013

மார்க்கெட் கண்காணிப்பாளர்கள்  மாற்றம் மாநகராட்சி புதிய ஆணையர் நடவடிக்கை

மதுரை, :  மாநகராட்சி புதிய ஆணையர் தனது முதல் நடவடிக்கையாக ரிங்ரோடு, பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட்டுகளை கவனித்து வந்த மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் 4 பேரையும் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சி புதிய ஆணையராக கிரண் குராலா நேற்று முன்தினம் பொறுப்பேற்றதும், “நேர்மையான நிர்வாகமாக இருக்கும்“ என்றார். இதனால் மாநகராட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதல் நடவடிக்கையாக 4 மண்டலங்களின் மார்க்கெட் கண்காணிப்பாளர்களையும் அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சியில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் என ஒரு பணியிடமே கிடையாது. இந்த பணியை இளநிலை உதவியாளர் கிரேடு ஊழியர்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் மார்க்கெட் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களிடம் வரியில்லா இனங்கள் என்று சொல்லப்படும் வருவாய் தரும் இனங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ரிங்ரோட்டிலுள்ள வாகன சுங்க சாவடி, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், சென்ட்ரல் மார்க்கெட் மற்றும் அனைத்து வகை மார்க்கெட், மாநகராட்சி கடைகளுக்கு வாடகை வசூலித்தல் போன்ற முக்கிய பொறுப்புகள் இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இது, மாநகராட்சிக்கு வருவாய் தேடித் தரும் பணிகளில் முக்கியமானதாகும். அனுமதி பெறாத கடையாக இருந்தாலும் இவர்களை மீறி எதுவும் செய்ய முடியாது.

இதுவரை மார்க்கெட் கண்காணிப்பாளர் பணியில் சையதுமைதீன் (மேற்கு மண்டலம்), தேவ தாஸ் (வடக்கு மண்டலம்), பாலசந்திரன் (கிழக்கு மண்டலம்), செல்வராஜ் (தெற்கு மண்டலம்) இருந்தனர். இவர்கள் தங்களது பொறுப்புகளை, அந்த மண்டலத்திலுள்ள உதவி வருவாய் அலுவலரிடம் (ஏஆர்ஓ) உடனடியாக ஒப்படைக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 4 பேரும் ஏற்கனவே பணியாற்றி வந்த இளநிலை உதவியாளராக மீண்டும் திரும்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட் கண்காணிப்பாளர் பணியை உருவாக்கி, அந்த பணி கீழ் நிலை ஊழியர்களிடம்  ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், உடனடியாக அதில் மாற்றம் செய்து புதிய ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளது மாநகராட்சி அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. மேலும் சிறப்பான நிர்வாக சீர்திருத்தங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க, மேயர் ராஜன்செல்லப்பாவும் பச்சைக் கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி மன்ற கூட்டம் முடிந்ததும் மாலையில் முதல் நிலை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆணையர் ஆய்வு நடத்தினார். தவறுகளை தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் அளவில் மேலும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது, இதனால் ஏற்கனவே புகாரில் சிக்கிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வசூல் வேட்டை

மதுரை நகர் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அகற்றப்படவில்லை. இதுபோன்ற பெட்டிக்கடைகள் பெருகியதற்கு, பணம் வசூலித்து கண்டுகொள்ளாமல் இருந்த 4 சந்தை கண்காணிப்பாளர்களே காரணம் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் சாலை ஓரங்களில் உள்ள இளநீர் கடை, கரும்பு ஜுஸ் கடை, வடை கடைகளிலும், அனுமதி இல்லாமல் வைத்திருந்ததாக கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக புகார் உள்ளது.

 

மத்திய பேருந்து நிலையத்தில் அசுத்தப்படுத்தினால் அபராதம்

Print PDF

தினகரன்          21.11.2013  

மத்திய பேருந்து நிலையத்தில் அசுத்தப்படுத்தினால் அபராதம்

திருச்சி, : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு  அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வா கம் அறிவித்துள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று மாநகராட்சி மேயர் ஜெயா, ஆணையர் தண்டபாணி ஆகியோர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மத்திய பேருந்து நிலையத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் நம்ம கழிவறை கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தனர். ரூ. 11 லட் சம் மதிப்பில் நடைபெற்று வரும்  கண்காணிப்பு கோபுர கட்டிட வேலை களையும் பார்வையிட்டனர். கண்காணிப்பு கோபுரம் கட்டிடத்தில் கலை அம்சங் கள் கொண்ட ஓவியங்கள் வடிவமைக்க வேண்டும். சுயஉதவி குழு மூலம் சுற் றுலா தகவல் மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மேயர் ஆலோசனை அளித்தார்.

மத்திய பேருந்து நிலையத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஆண்களுக்காகவும், ஒரு இடத்தில் பெண்களுக்காகவும் இலவச கழிவறை கள் பயன்பாட்டில் உள் ளது. மேலும் 3 இடங்களில் கட்டண கழிவறைகளும் உள்ளன. இந்த அனைத்து கழிவறைகளும் தற்பொழுது மைக்ரோ ஆர்கனிஸம் என் னும் தண்ணீர் கலந்து மருந்து தெளிக்கப்பட்டு துர்நாற்றம் இல்லாத வகை யில் பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகவே மத்திய பேருந்து நிலையத்தில் சுற்று ப்புற சுகாதாரத்தை காத் திட திறந்த வெளியில் சிறு நீர் கழித்திட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி தொடர்ந்து மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும். அந்த இடத்தி லேயேரசீதும் வழங்கப் படும். இதே போல் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளி லும் திறந்த வெளி யில் சிறு நீர் கழிப்பதை தடுத்திட முக்கிய இடங்க ளில் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

மாநகர மக்கள் சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக பராமரித்திட முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் தண்ட பாணி தெரிவித்தார். ஆய்வின்போது துணை மேயர் மரியம் ஆசிக், பொன்மலை கோட்டத்தலைவர் மனோகரன், செயற்பொறியாளர் நாகேஷ், உதவி செயற்பொறியாளர் லெட்சுமணமூர்த்தி ஆகி யோர் உடன் இருந்தனர்.திருச்சி,: சமயபுரம் அருகே இருங்களூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் டி.ஆர்.பி. பொறியியில் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

 சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார் பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி தனி அதிகாரி பாண்டியராஜன் துவக்கி வைத்தார். முகா மில் கல்லூரியில் நான்காம் ஆண்டு பி.இ.படிக்கும் எந்திர பொறியி யல், மின் னியல்- மின்னணு பொறியி யல் பிரிவு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் 7 பேர் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அவர்களுக்கு கல்லூரி முதல்வர் தமிழ ரசன் தனியார் நிறுவனத் தின் பணி நியமன ஆணை களை வழங்கினார். நிகழ்ச் சியில் தனியார் நிறுவன அதிகாரிகள் கார்த்திக், சிவ குமார், சார்லஸ், சரவணன், கல்லூரி துணை முதல்வர் பிரபாகர்,கல்லூரி பணி அமர்த்துதல் பிரிவு அதிகா ரியும், உதவி பேராசிரியரு மான விக்டர்சூசை இருதய ராஜ், துறைத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 66 of 506