Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

டிசம்பர் 15–ந் தேதிக்குள் குடிநீர் குழாயில் வால்வு பொருத்த அறிவுறுத்தல்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

டிசம்பர் 15–ந் தேதிக்குள் குடிநீர் குழாயில் வால்வு பொருத்த அறிவுறுத்தல்

மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 19, 26, 27 ஆகிய பகுதிகளுக்கான புதிய குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்து, முதல்–அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் பயன்பெறும் பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய குடிநீர் குழாய் இணைப்புகளில் “ப்ளோ கண்ட்ரோல்“ எனப்படும் குடிநீர் கட்டுப்படுத்தும் கருவியை குடிநீர் குழாயில் இணைக்க வேண்டும். பெரும்பாலான வீடுகளில் இது பொருத்தப்படாமல் உள்ளது.

அடுத்த மாதம் (டிசம்பர்) 15–ந் தேதிக்குள் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி வால்வு பெற்று இளநிலை பொறியாளர் முன்னிலையில் பொருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் எவ்வித அறிவிப்பும் இன்றி குடிநீர் குழாய் இணைப்புகள் துண்டிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்–9442201305, இளநிலை பொறியாளர்– 9442201334 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவல் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) த.மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை, மீறினால் உடனடி அபராதம் ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி           21.11.2013

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை, மீறினால் உடனடி அபராதம் ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை

திருச்சி மத்திய பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தண்டபாணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாநகராட்சி மேயர் ஜெயா, ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள். அப்போது ரூ.13½ லட்சம் மதிப்பீட்டில் நம்ம கழிவறை கட்டப்பட உள்ள இடத்தை பார்வையிட்டனர். மேலும் 11 லட்சம் செலவில் கண்காணிப்பு கோபுரம் கட்டுமான கட்டிட வேலைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆணையர் தண்டபாணி கூறியதாவது:–

சிறுநீர் கழிக்க தடை

மத்திய பஸ் நிலையத்தில் ஏற்கனவே 2 இடங்களில் ஆண்களுக்காகவும், ஒரு இடத்தில் பெண்களுக்காகவும் இலவச கழிவறைகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் 3 இடங்களில் கட்டண கழிவறைகளும் உள்ளன. இவை அனைத்தும் மைக்ரோ ஆர்கனிசம் என்னும் தண்ணீர் கலந்த மருந்து தெளிப்பின் மூலம் துர்நாற்றம் இல்லாத வகையில் பராமரிக்கப்பட உள்ளன. எனவே மத்திய பஸ் நிலையத்தில் சுற்றுப்புற சுகாதாரத்தை காத்திட திறந்த வெளியில் சிறுநீர் கழிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மீறி தொடர்ந்து மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அந்த இடத்திலேயே ரசீதும் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவ.25ம்தேதி முதல் டிச.4 வரை விரைவு பட்டா மாறுதல் முகாம்

Print PDF

தினகரன்          20.11.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நவ.25ம்தேதி முதல் டிச.4 வரை விரைவு பட்டா மாறுதல் முகாம்

தூத்துக்குடி, : தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதியில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை விரைவு பட்டா மாறு தல் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா வாரியாக கடந்த மாதம் முழுவதும் விரைவு பட்டா மாறுதல் முகாம் நடத்தப்பட்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பட்டா கிடைக்காமால் உள்ள மனுக்களுக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது நகர நிலவரித் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இந்த முகாம்களை நடத்த வேண்டும். மனுக்கள் அளிக்கும் மக்களிடம், தங்களுடைய ஆவணங்களை தொடர் ஆவணங்களாக முறையாக அளிக்க வேண் டும் என அறிவுறுத்த வேண் டும்.  அதிகமான மக்கள் வரும் இடங்களில் விரைவில் மனுக்களைப் பெற்று அவர்களிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட ரசீதுகளை வழங்க வேண்டும்.

வருவாய்த் துறை பணியாளர்கள் முழுமையாக இந்த பட்டா மாறுதல் முகாம்களில் பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வா கம் மூலம் நடைபெ றும் இந்த பணிகளுக்கு அனைத் துத் துறை அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

 


Page 67 of 506