Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆக்கிரமிப்பு அகற்றம் ரோடு அமைக்க உத்தரவு

Print PDF

தினமலர்         18.11.2013 

ஆக்கிரமிப்பு அகற்றம் ரோடு அமைக்க உத்தரவு

மதுரை:மதுரை மூன்றுமாவடி- அய்யர்பங்களா ரோட்டின் வலதுபுறம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில், புதிதாக ரோடு அமைக்கும் வகையில், மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

வக்கீல் சுபாஷ்பாபு தாக்கல் செய்த பொதுநல மனு:

மூன்றுமாவடி- அய்யர்பங்களா ரோட்டின் இருபுறமும் சிலர், ஆக்கிரமித்திருந்தனர். பொதுப்பணித்துறை கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியிருந்தனர். இதனால் ரோட்டில் நெரிசல், விபத்து ஏற்படுகிறது; "ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்' என, ஏற்கனவே ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன்.

நீதிபதிகள் உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றினர். அங்கு கட்டட இடிபாடுகள், வெட்டப்பட்ட மரங்கள் குவிந்துகிடக்கின்றன. அவற்றை அகற்றி, நெரிசலை குறைக்க புதிதாக ரோடு அமைக்க வேண்டும்.

"கால்வாயை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்' என, மதுரை மாநகராட்சி கமிஷனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு (நீர்வள ஆதாரம்) மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஏ.செல்வம், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் நிஷாபானு ஆஜரானார். நீதிபதிகள்,"மனுவை, மாநகராட்சி கமிஷனர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என, உத்தரவிட்டனர். 

 

மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை

Print PDF

தினகரன்          18.11.2013 

மாநகராட்சி அறுவை மனையில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை

கோவை, : கோவை மாநகராட்சி வதை கூடத்தில் நோய் தாக்கிய மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தேவாங்கபேட்டை, உக்கடம் செல்வபுரம் பைபாஸ் ரோடு, உப்பிலிபாளையம் பகுதியில் வண்டி மாடுகள் உள்ளன. காங்கயம் இனத்தை சேர்ந்த இந்த மாடுகள் குப்பை வாகனங்கள் இயக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கோமாரி நோய் வேகமாக பரவி வரும் நிலையில், மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குநர் அசோகன் தலைமையில் நேற்று முன் தினம் 46 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மாடுகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டது. அசோகன் கூறுகையில், ‘‘சத்தி ரோட்டில் உள்ள மாடு வதை கூடத்தில் தினமும் 30 முதல் 50 மாடுகள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மாடுகளை ஒரு நாளுக்கு முன்பே நோய் உள்ளதா என பரிசோதனை செய்து வருகிறோம். கோமாரி நோய் உள்ளிட்ட நோய்கள் இருந்தால் அந்த மாடுகள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

 

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் மழை வெள்ள பாதிப்பு மேயர், ஆணையர் ஆய்வு

Print PDF

தினகரன்          18.11.2013 

தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலத்தில் மழை வெள்ள பாதிப்பு மேயர், ஆணையர் ஆய்வு

சென்னை, : மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் தண்ணீர் தேங்கியிருந்த ஆற்காடு சாலை (வடபழனி பஸ் நிலையம் எதிரில் மற்றும் விஜயா மருத்துவமனை எதிரில்) மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி சுதந்திர தின பூங்கா அருகில் உள்ள பள்ளி சாலை ஆகிய பகுதிகளை மேயர் சைதை துரைசாமி, ஆணையாளர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். 
 
சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றவும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனுக்குடன் உறிஞ்சி வெளியேற்றவும்,  தண்ணீர் தேங்கும் இடங்களில் அதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்றி, அடுத்து மழை பெய்யும் பொழுது தண்ணீர் தேங்கா வண்ணம் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், 2011ல் மாநகராட்சி பகுதியில் மழைக்காலத்தில் 291 இடங்களில் தண்ணீர் தேங்கியது. தற்பொழுது பெய்துள்ள கனமழைக்கு 98 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது என்று மேயர் கூறினார்.

மண்டல இணை ஆணையர் (தெற்கு) ஆனந்தகுமார், துணை ஆணையாளர் ஆனந்த், மண்டலக்குழு தலைவர் எல்.ஐ.சி. எம்.மாணிக்கம்  உடன் இருந்தனர்.

 


Page 69 of 506