Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வடபழனி, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் சைதை துரைசாமி ஆய்வு தண்ணீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

Print PDF

தினத்தந்தி            18.11.2013

வடபழனி, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் சைதை துரைசாமி ஆய்வு தண்ணீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு

வடபழனி, சுதந்திர தின பூங்கா பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை மேயர் சைதை துரைசாமி நேற்று பார்வையிட்டார். தண்ணீரை விரைந்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேயர் சைதை துரைசாமி ஆய்வு

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் தண்ணீர் தேங்கி இருந்த மண்டலம் 10–க்குட்பட்ட ஆற்காடு சாலை, வடபழனி பேருந்து நிலையம், விஜயா மருத்துவமனை பகுதி மற்றும் மண்டலம் 9–க்குட்பட்ட சுதந்திர தின பூங்கா அருகில் உள்ள பள்ளி சாலை ஆகிய பகுதிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அப்போது, மழையினால் சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீரை விரைந்து அகற்றிடவும், மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் மழைநீர் வடிகால்வாய்கள் முழுமையாக அமைக்கப்படவில்லை என்பதால் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனுக்குடன் உறிஞ்சி வெளியேற்றிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்டார்.

போர்க்கால நடவடிக்கை...

மழையினால் தண்ணீர் தேங்கும் இடங்களில் அதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்றும், அடுத்த மழை பெய்யும்போது தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை மேயர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி தெற்கு மண்டல இணை ஆணையர் ஆர்.ஆனந்தகுமார், துணை ஆணையர் த.ஆனந்த், மண்டலக்குழு தலைவர் எல்.ஐ.சி.மாணிக்கம் உள்பட மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாநகராட்சி அறிக்கை

2011–ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழையினால் தண்ணீர் தேங்கும் இடங்களின் எண்ணிக்கை 291–ஆக இருந்ததாகவும், தற்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி, சென்னை மாநகராட்சி போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக 98 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இடப்பற்றாக்குறையை சமாளிக்க விறகு பேட்டை வளாகத்திற்கு மாறும் வாழைக்காய் மண்டி

Print PDF

தினகரன்        13.11.2013

இடப்பற்றாக்குறையை சமாளிக்க விறகு பேட்டை வளாகத்திற்கு மாறும் வாழைக்காய் மண்டி

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் காந்திசந்தை வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நவீன ஆட்டு இறைச்சி கூடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கூடத்தை மேயர் ஜெயா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், விறகுபேட்டை அம்மா உணவகம் அருகில் ரூ.20 லட்சம் மதிப்பில் 25 பேர் சமைக்க கூடிய அளவில் சமுதாய சமையல் கூடம், காய்கறிகள் கழிவில் இருந்து எரிவாயு மூலம் சமையல் கூடம் விரைவில் அமைக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மேயர், தற்போது இயங்கி வரும் வாழைக்காய் மண்டியின் இட பற்றாக்குறையின் காரணமாக விறகு பேட்டை வளாகத்தில் கட்டிடம் கட்ட உத்தரவு விட்டார்.

இபி ரோடு பகுதியில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருகின்ற லாரி ஓட்டுனர்கள் தங்குவதற்கு தங்கும் அறை, குளியல் அறை, கழிப்பறை மற்றும் லாரிக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் சிறிய அளவில் அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.

ஆய்வுக்கு பின் மேயர் ஜெயா கூறுகையில், மாநகரின் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் வகையில் காந்தி சந்தை பகுதியில் செயல்படும் வெங்காய மண்டியை பொன்மலை கோட்டம் செங்குளம் பகுதிக்கு மாற்றம் செய்யப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே 0.75 ஏக்கரில் தினசரி மார்க்கெட் இயங்கி வருகிறது.

மீதி உள்ள 1.75 ஏக்கரில் வெங்காய மண்டி மொத்த வியாபார சந்தையினை கொண்டு வரவும், இந்த இடத்தில் 3அடுக்கு வணிக வளாகங்கள் கட்டவும் அதில் தரை தளத்தில் வாகனம் நிறுத்தத்துடன் கூடிய தினசரி சந்தை ஆகியவை படிப்படியாக இப்பகுதிக்கு மாற்றம் செய்யப்படும் எனவும், இதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

ஆய்வின்போது நகல்நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகளை ரோடுகளில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை ஆணையாளர் மதுமதி எச்சரிக்கை

Print PDF

தினத்தந்தி           13.11.2013

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகளை ரோடுகளில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை ஆணையாளர் மதுமதி எச்சரிக்கை

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகளை ரோடுகளில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் சோ.மதுமதி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கால்நடைகள்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நாளை(வியாழக்கிழமை) முதல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, பாரத பிராணிகள் வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற விலங்கின அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்.

ரோடுகளில்.

அவ்வாறு பிடிபடும் மாடுகளை மீண்டும் பெறுவதற்கு கோர்ட்டில் மனு செய்து, அதன்மூலம் மட்டுமே மாட்டை பெற முடியும். ஆகையால் பொதுமக்கள் தங்கள் மாடு உள்ளிட்ட கால்நடைகளை ரோடுகளில் சுற்றித்திரியாத அளவுக்கு வளர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மதுமதி தெரிவித்து உள்ளார்.

 


Page 70 of 506