Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

குடிநீரில் சாக்கடை கலந்திருந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை: மேயர் எச்சரிக்கை

Print PDF

தினமணி        09.11.2013

குடிநீரில் சாக்கடை கலந்திருந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை:  மேயர் எச்சரிக்கை

மாநகராட்சிப் பகுதியில் எங்காவது குடிநீரில் சாக்கடை கலந்து விநியோகம் செய்யப்பட்டால், அப்பகுதி பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா எச்சரித்துள்ளார்.

  மதுரை மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், வெள்ளிக்கிழமை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்து, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா பேசியது: மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிநீர் விநியோகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் குடிநீர் விநியோகம் தொடர்பான அலுவலர்கள், பொறியாளர்கள் தொலைபேசி எண்களையும், குடிநீர் விநியோகம் செய்யும் கால அட்டவணைகளையும் பொதுமக்கள் பார்வையில்  படுமாறு, தகவல் பலகையில் ஒட்டி வைக்கவேண்டும்.

  மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மயானங்களில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும். சில பகுதிகளில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார்கள் வருகின்றன. இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, குடிநீரில் சாக்கடை கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, உடனடியாக சரிசெய்ய வேண்டும்.  இனிவரும் காலங்களில் குடிநீரில் சாக்கடை கலப்பதாக புகார்கள் வந்தால், சம்பந்தப்பட்ட பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

  இதில், ஆணையர் (பொறுப்பு) லீலா, நகரப் பொறியாளர் அ. மதுரம், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர்கள் ஆ. தேவதாஸ், ரெகோபெயாம், சின்னம்மாள், கல்வி அலுவலர் மதியழகராஜ், பிஆர்ஓ சித்திரவேல் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

 

பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு

Print PDF

தினமணி        09.11.2013

பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தா.ஜான்சிராணி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய அலுவலகம் கட்டும் பணி மற்றும் பேரூராட்சியில் நடைபெறும் பிற திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தா.ஜான்சிராணி நேரில் ஆய்வு செய்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிடத்தை கட்டி முடிப்பது குறித்த பணி ஆலோசனைகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பராமரிக்கப்படும் சுகாதார வளாக கழிப்பிடம், மாற்றுத் திறனாளிகள் கழிப்பிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

 பின்னர், மேட்டுக் காலனி பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட உரக்கிடங்கில் மக்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசனா வழங்கினார்.

பேரூராட்சி தலைவர் வெ.முத்துகுமரன், செயல் அலுவலர் மணிவேல் மற்றும் பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Saturday, 09 November 2013 11:17
 

குடிநீரில் கழிவுநீர் கலந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்          09.11.2013

குடிநீரில் கழிவுநீர் கலந்தால் பொறியாளர் மீது நடவடிக்கை மேயர் எச்சரிக்கை

மதுரை, : மாநகராட்சி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மேயர் ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். ஆணையாளர் (பொறுப்பு) லீலா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மேயர் பேசுகையில், “அனைத்து அலுவலர்களும் கோப்புகளை முறையாக கையாள வேண்டும். வார்டு அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களின் தொலைபேசி எண்ணையும், குடிநீர் விநியோகிக்கும் கால அட்டவணை ஆகியவற்றை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். மழைக்காலம் என்பதால் முன்னேற்பாடாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், மயானங்களில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சில பகுதியில் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதாக புகார் வருகிறது. அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி குடிநீரில் கழிவு நீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டும். இனி வரும் காலத்தில் இது போன்ற புகார் வந்தால் சம்பந்தப்பட்ட பொறியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார பணியாளர்கள் துப்புரவு பணிகளையும், கொசு ஒழிப்பு பணிகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், நகர பொறியாளர் மதுரம், உதவி ஆணையாளர்கள் தேவதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 72 of 506