Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

தரைக்கடை முறைப்படுத்தும் விதிமுறை ஜன.,1 முதல் திருச்சி மாநகராட்சி அமல்

Print PDF

தினமலர்        31.10.2013

தரைக்கடை முறைப்படுத்தும் விதிமுறை ஜன.,1 முதல் திருச்சி மாநகராட்சி அமல்

திருச்சி: "சாலையோர தரைக்கடைகளை முறைப்படுத்தும் விதிமுறைகள் வரும் ஜனவரி, 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்' என, திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்சி மாநகராட்சியில் உள்ள பஸ் ஸ்டாண்டுகள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகள் மற்றும் சாலையோர கடைகள் மூலம் வியாபாரம் செய்பவர்களை முறைப்படுத்த வேண்டியுள்ளது.

இந்த வியாபாரம் செய்பவர்களின் ஜீவாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசின் தேசிய நகர்வு நடைபாதை கொள்கை அடிப்படையிலும் மக்ககள் மற்றும் போக்குவரத்து நலன் கருதியும், வணிக பகுதிகளுக்கு அருகில் உள்ள முக்கிய சாலைகளை தேர்வு செய்து மக்கள் பயன்பெறும் வகையில் அங்கு தரைக்கடை வியாபாரம் நடத்த சாலையோர வியாபார பகுதிகளாக மாநகராட்சியின் நான்கு கோட்டங்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர, இதர பகுதிகளில் சாலையோர வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலையோர தரைக்கடை வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் நேரிடையாகவோ அல்லது சங்கங்கள் மூலமாகவோ இது தொடர்பான ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் வரும் நவம்பர், 30ம் தேதிக்குள், திருச்சி மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் அல்லது ஸ்ரீரங்கம், கோ.அபிஷேகபுரம், பொன்மலை, அரியமங்கலம் ஆகிய கோட்ட உதவி கமிஷனர்களிடம் தெரிவித்துக் கொள்ளலாம்.

தற்போது சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்கள் முகவரி, மொபைல் நம்பர், வியாபாரம் செய்யும் இடம், நேரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

தேசிய நகர்புற சாலையோர வியாபாரக் கொள்கை அடிப்படையில் திருச்சி மாநகரில் சாலையோர வியாபாரிகள் குழு அமைக்க, சாலையோர நடைபாதை சங்கங்களில் இருந்து பொறுப்பாளர்களின், பெயர் விபரங்களை வரும் நவம்பர், 13ம் தேதிக்குள் மாநகராட்சிக்கு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

மாநகர சாலையோர நடைப்பாதை வியாபாரிகள் பிரதிநிதிகள் அடங்கிய குழு மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ், போக்குவரத்து துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலை துறை பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளுடன் இணைந்து சாலையோர நடைபாதை வியாபார பகுதிகள் குறித்து விவாதித்து அதன் அடிப்படையில் சாலையோர வியாபாரிகளுக்கான நலன்கள் பாதிக்காத வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

பூவராகசுவாமி கோவிலில் சிமென்ட் தளம் பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் பார்வை

Print PDF

தினமலர்        31.10.2013

பூவராகசுவாமி கோவிலில் சிமென்ட் தளம் பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் பார்வை

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் முன்புறம் சிமென்ட் தளம் அமைக்கும் பணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலுக்கு தமிழக புராதான கோவில்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 10 லட்சம் ரூபாய் செலவில் 50 எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது.

தற்போது கோவில் முன்புறம் உள்ள வளாகம் முழுவதும் 30 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் கற்களால் புதிதாக தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணியை பேரூராட்சிகள் துறை உதவி இயக்குநர் ராமநாதன் பார்வையிட்டார்.

அப்போது, கோவில் வளாகத்தின் முன்புறம் வாகனங்கள் வந்து திரும்ப முடியாத நிலையில் குறுகலாக இருந்த பகுதிகளிலும் சிமென்ட் தளம் அமைக்கவும், பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். உதவி செயற்பொறியாளர் குமரகுரு, பொறியாளர் சீனுவாசன், செயல் அலுவலர் அருள்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் சின்னப்பன், வார்டு கவுன்சிலர் சதீஷ்குமார் உடனிருந்தனர்.

 

மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

Print PDF

தினமணி         31.10.2013

மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

மோட்டார் பொருத்தி குடிநீர் திருடுவோரின் மோட்டர்கள் பறிமுதல் செய்வதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என பரமக்குடி நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

பரமக்குடி நகராட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தலைவர் கீர்த்திகாமுனியசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார்.  ஆணையர் தங்கப்பாண்டி வரவேற்றார்.

கூட்டத்தில் நகர்மன்று உறுப்பினர்கள் பேசியதாவது:

நூர்ஜஹான்பீவி:-அண்ணாநகர் பகுதியில் கடந்த 15 நாள்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. அதனை உடனே சரிசெய்ய வேண்டும்.

சங்கீதா (அதிமுக):-கிருஷ்ணா தியேட்டர், பங்களா ரோடு பகுதியில் கொசு மருந்து அடிக்காததால், சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதிகளில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

செல்வி (திமுக): பொன்னையாபுரம் பகுதியில் 27,28 வது வார்டு மக்கள் கால்வாய் பகுதியில் பயன்படுத்தும் மயானத்தில் அடிப்படை வசதியில்லை. ரேஷன் கடை  கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 விஜயா (திமுக): குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனை அனைவரும் பயன்பெறும் வகையில் செய்ய வேண்டும்.

மலர்கொடி(திமுக): காட்டுப்பரமக்குடி சேதுபதி நகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்: நகராட்சிக்கு சொந்தமான பகுதியை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.கே.கண்ணன் (அதிமுக): தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக குடிநீர் வழங்க வேண்டும்.

தலைவர்: வழக்கமாக அனைத்து பண்டிகைக்களுக்கும் கூடுதலாக குடிநீர் வழங்கப்படுகிறது.

மணிவாசகம் (அதிமுக): வீடுகளில் மின்மோட்டார் பொறுத்தி குடிநீர் திருடுவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும்.

ஆணையாளர்: நகரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் திருடுவோரின் மின்மோட்டர் பறிமுதல் செய்வதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்.

முருகேசன் (அதிமுக): எமனேசுவரம் காவல் நிலையத்தின் முன்பு தெருவிளக்கு பொறுத்த வேண்டும்.

வி.எம்.பாக்கியம் (மதிமுக): திரெüபதையம்மன் கோவில் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி நெடுஞ்சாலையிóல கழிவுநீரை கொட்டுகின்றனர்.

தலைவர்: அப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டத்தில் நகராட்சித் தலைவர் கீர்த்திகா முனியசாமி பேசும்போது. பரமக்குடி நகராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டப்பணிகள் மேற்கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் வகையில் சிறந்த நகராட்சியாக விளங்கிட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

 


Page 78 of 506