Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கோபியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி          30.10.2013

கோபியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோபியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த கடைகளை அகற்றி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

போக்குவரத்து நெரிசல்

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட அரசு ஆஸ்பத்திரி ரோடு, தினசரி மார்க்கெட் பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதைத்தொடர்ந்து, அரசு ஆஸ்பத்திரி ரோடு, தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு கடந்த 10 நாட்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாங்களாகவே முன்வந்து சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கிருஷ்ணக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரி ரோடு, தினசரி மார்க்கெட் பகுதிகளில் நேற்றுக் காலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருந்த பால் கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட கடைகளை அதிகாரிகள் அகற்றினார்கள்.

அதிகாரிகள் எச்சரிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கோபி நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நகராட்சி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால், அந்த கடைகள் அகற்றப்படும். மேலும், சம்பந்தப்பட்ட கடைகளில் உள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்“ என்றனர்.

 

விளம்பர பலகைகள் அகற்றம்

Print PDF

தினகரன்           29.10.2013

விளம்பர பலகைகள் அகற்றம்

மதுரை, :  மதுரை மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் வகையில் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளையும் அகற்ற கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து 957 விளம்பர பலகைகளை வருவாய்த்துறை துணை கலெக்டர்கள் தலைமையி லும், மாநகராட்சி உதவி ஆணையாளர் சேர்ந்து அகற்றினர். பொதுமக்களுக்கு இடையூ றாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பல கைகளை வைத்தவர்களே தானாக முன்வந்து அகற்ற வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம் ஒத்திவைப்பு

Print PDF

தினமணி             29.10.2013

நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம் ஒத்திவைப்பு

தாராபுரம் நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக நகர்மன்றத் தலைவர் ஞா. கலாவதி திங்கள்கிழமை அறிவித்தார்.

தாராபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஞா. கலாவதி தலைமையில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. ஆணையாளர் க. சரவணக்குமார், பொறியாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு, அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே வந்திருந்தனர். கூட்டம் துவங்கியதும் பேசிய நகர்மன்றத் தலைவர் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் கூட்டத்தை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றது.

இரண்டாவது கூட்டம்:

முதற் கூட்டம் நிறைவுற்றபின் 10 நிமிடத்தில் மீண்டும் கூட்டம் நடைபெற உள்ளதாக பத்திரிக்கையாளர்களுக்கு நகர்மன்றத் தலைவர் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 10.45க்கு இரண்டாவது கூட்டம் துவங்கியது. நகர்மன்றத் துணைத் தலைவர் எஸ். கோவிந்தராஜ் உள்பட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர், தாராபுரம் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அமராவதி ஆற்றின் நடுவே தடுப்பணை கட்ட தமிழக அரசு 6.73 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதற்காக தமிழக முதல்வருக்கும், பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் நகர்மன்றம் சார்பில் நன்றி தெரிவித்தார்.

மேலும், மொத்தமுள்ள 46 தீர்மானங்களில் நகராட்சிக் கடைகளை மறுஏலம் விடும் தீர்மானம் மட்டும் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாகவும், பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.

 


Page 81 of 506