Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு

Print PDF

தினமணி             29.10.2013

துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு

செங்கல்பட்டு நகராட்சி காந்தி சாலையில் ஒரு மாதமாக துண்டிக்கப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய் இணைப்பு சனிக்கிழமை நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் மீண்டும் கொடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு காந்தி சாலை, மேட்டுத் தெரு, வேதப்பர் தெரு, பஜார் தெரு இணைப்பில் உள்ள நகராட்சி குடிநீர் குழாய் இணைப்பு நகர்மன்ற உறுப்பினர்கள் தலையீட்டால் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தக் குழாயை நம்பி இருந்த ஏழை எளியமக்கள் மற்றும் சிறுவியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இது குறித்து தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதை அறிந்த ஆட்சியர் பாஸ்கரன், அதே நாளில் அப்பகுதிக்கு குடிநீர் குழாய் இணைப்பு தர நடவடிக்கை மேற்கொள்ளும்படி செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பாஸ்கருக்கு, உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் பாஸ்கர் நேரடி பார்வையில் துண்டிக்கப்பட்ட குழாய் இணைப்பை இளநிலைப் பொறியாளர் சாய்ராம், பிட்டர் ஆல்பர்ட், குழாய் ஆய்வாளர் சிவலிங்கம், கவுன்சிலர் ஜி.சேட் ஆகியோர் சரிசெய்யப்பட்டு குழாய்களும் புதிதாக மாற்றப்படடன.

குழாய்களில் தண்ணீர் வருவதை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

விளம்பர பலகை: கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர்             29.10.2013

விளம்பர பலகை: கலெக்டர் உத்தரவு

மதுரை : மதுரையில் அரசு உத்தரவை மீறி, பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறான 957 விளம்பர பலகைகளை அக்., 21, 22ல் துணை கலெக்டர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள் அகற்றினர். இதுபோல், மாதந்தோறும் இப்பணி நடைபெறும். இடையூறான விளம்பர பலகைகளை வைத்தவர்கள், தாங்களே முன்வந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

 

கோவில்பட்டியில் 2–வது பைப் லைன் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கல்

Print PDF

தினத்தந்தி            29.10.2013

கோவில்பட்டியில் 2–வது பைப் லைன் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கல்

கோவில்பட்டியில் 2–வது பைப் லைன் குடிநீர் திட்டத்துக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

குடிநீர் திட்டம்

கோவில்பட்டியில் ரூ.81 கோடியே 82 லட்சத்தில் சீவலப்பேரி 2–வது பைப் லைன் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக கோவில்பட்டி நகரசபை சார்பில் ரூ.12 கோடியே 28 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இதுவரை 2 தவணைகளாக ரூ.1 கோடியே 90 லட்சம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது 3–வது தவணையாக நகரசபை தலைவி ஜான்சிராணி சங்கர பாண்டியன் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதியினை குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் சேகரிடம் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நகரசபை ஆணையாளர் சுல்தானா, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற் பொறியாளர் லட்சுமணன், நகரசபை துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் சங்கர பாண்டியன், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன், பத்மாவதி, முத்துராஜ், இருளப்பசாமி, ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில் சீவலப்பேரி 2–வது பைப் லைன் குடிநீர் திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே வருகிற ஜூலை மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படும் என்று நகரசபை தலைவி ஜான்சிராணி சங்கர பாண்டியன் தெரிவித்தார்.

 


Page 82 of 506