Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

உடுமலை கடைகளில் 326 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

Print PDF

தினகரன்          25.10.2013

உடுமலை கடைகளில் 326 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

உடுமலை,:கடைகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார்,சுகாதார ஆய்வாளர்கள்  செல்வம்,சிவகுமார், ஆர்.செல்வம் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் இந்த சோதனை நடந்தது. அதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ் டிக் டம்ளர்கள் சுமார் 326 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. அதை வைத்திருந்த வியாபாரிகளுக்கு ரூ.5300 அபராதம் விதிக்கப்பட்டது.

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்களை விற்பனை செய்யக்கூடாது என்றும்,இலவசமாக பிளாஸ்டிக் பைகளை வழங்க கூடாது என்றும் தவறும் பட்சத்தில் அபராதமும், கடும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Last Updated on Friday, 25 October 2013 11:48
 

மாநகரில் அதிகாரிகள் ரெய்டு 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்

Print PDF

தினகரன்          25.10.2013

மாநகரில் அதிகாரிகள் ரெய்டு 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல்

திருப்பூர், : திருப்பூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் அதிரடி சோதனையிட்டு தடை செய்யப்பட்ட 2 டன் பாலித்தீன் பை களை பறிமுதல் செய்தனர்.

ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து ள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், இத்தகைய பாலித்தீன் பைகள், ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர். ஏற்கனவே கடந்த 22ம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மாவட்டம் முழுவதும் 24ம் தேதி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை தொடர்பாக சோதனையிடுமாறு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, திருப்பூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மலையாண்டி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மணிவேல், வனஜா, மாநகராட்சி நகர் நல அலுவலர் செல்வக்குமார், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் அடங்கிய குழுவினர் மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர் திருப்பூர் அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு, மரக்கடை வீதி, பழைய பஸ் நிலைய பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள், ஓட்டல்கள், பேக்கிரி கடைகளில் நடைபெற்ற சோதனையில் மொத்தம் 2 டன் பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் 2 கடைகளுக்கு முறையே ரூ.3000, ரூ.2000 என அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த விற்பனை கடையில் இருந்து பரிசோதனைக்காக சாம்பிள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இக்கடை மீது வழக்கு தொடர இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்தனர்.

 

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கடைகளில் அதிகாரிகள் குழு ரெய்டு

Print PDF

தினகரன்          25.10.2013

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கடைகளில் அதிகாரிகள் குழு ரெய்டு

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினார்கள். ரெய்டு குறித்து முன்கூட்டியே தகவல் வெளியானதால் பிளாஸ்டிக் கடைக்காரர்கள் கடைகளை அவசர, அவசரமாக பூட்டி விட்டுச் சென்று விட்டனர்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் 40 மைக்ரான் அளவிற்கும் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், கலர் பூசப்பட்ட பைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள், பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடைகளில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி சார்பில் நேற்று கடைகளில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.

  கொங்காளம்மன் கோவில் வீதி, மார்க்கெட் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் கடைக்காரர்களுக்கு உடனடியாக தகவல்களை அளித்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் பெரும்பாலான பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகள் அடைக்கப்பட்டன.

இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ், உதவி பொறியாளர்கள் குணசீலன், முரளி, மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் தங்கராஜ், இஸ்மாயில், நல்லசாமி, நாச்சிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்த கடைகளை தேடினார்கள். கந்தசாமி வீதியில் திறந்திருந்த ஒரு பிளாஸ்டிக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர் 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் கலர் பைகளை பறிமுதல் செய்தனர்.

 


Page 83 of 506