Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ஆம்பூர் பாலாற்றில் குப்பைகள் அகற்றும் பணி

Print PDF

தினத்தந்தி             24.10.2013

ஆம்பூர் பாலாற்றில் குப்பைகள் அகற்றும் பணி

ஆம்பூர் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதும், கழிவுகளை பாலாற்றில் கொண்டு போடுவதும் என தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பாலாறு முழுவதும் குப்பை மேடாக காட்சி அளித்து வருகிறது. பாலாற்றில் உள்ள குப்பைகளை அகற்றி, பாலாற்றை பாதுகாக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து நகராட்சி சார்பில் பாலாற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகளை நகரசபை தலைவர் சங்கீதாபாலசுப்பிரமணி, ஆணையாளர் (பொறுப்பு) குமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது துப்புரவு அலுவலர் பாஸ்கர், ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

சென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்

Print PDF

மாலை மலர்            24.10.2013

சென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
 
சென்னையை போல் மாநகராட்சிகளில் தானியங்கி மின்கட்டண வசூல் எந்திரம்: சட்டசபையில் அமைச்சர் தகவல்

சென்னை, அக். 24: சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ‘‘தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் அமைப்பது குறித்து வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக் கேட்ட கேள்விக்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில் வருமாறு:–

வேளச்சேரி பகுதி திருவான்மியூர், வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் எந்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த இடங்களில் இந்த எந்திரங்கள் செயல்பட தொடங்கும். முதல்–அமைச்சரின் ஒப்புதல் படி 100 மையங்களில் இந்த எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 24 இடங்களில் மின்கட்டண எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 ஆயிரம் நுகர்வோர் பயன்பட்டு வருகிறார்கள். 76 எந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை தவிர வேலூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகரங்களிலும் இதுபோன்ற எந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர ‘ஆன் லைன்’ மூலமும் வங்கிகள் மூலமும் தபால் அலுவலகங்களிலும், செல்போன் மூலமும் மின்கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 18 வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மின்சாரம் நுகர்வோர் 14 சதவீதம் பேர் பயன்பட்டு வருகிறார்கள். 50 சதவீதம் பேர் பயன்பெற நடவடிக்கை எடுக்கும்படி முதல்–அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னையில் தில்லைகங்கா நகர், பெசன்ட்நகர் ஆகிய இடங்களிலும் விரைவில் தானியங்கி வசூல் எந்திரம் செயல்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

Print PDF

தினமலர்            24.10.2013

கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

பொள்ளாச்சி : 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனையில் நேற்று ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு விதி மீறி பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதனை தடுக்கும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடைகளில் சோதனையிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து, பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் உத்தரவின்பேரில், கமிஷனரின் நேர்முக உதவியார் சரஸ்வதி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சத்யன், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, தனபால், சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், பொள்ளாச்சியில் கடைவீதி, தெப்பக்குளம் வீதி, காந்தி மண்டபம் வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடக்கும் கடைகளில் அதிரடி சோதனை நேற்று நடத்தினர்.

இதில், ஒன்றரை டன் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 


Page 86 of 506