Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

கருவேல மரங்கள் வளர்க்க தடை

Print PDF

தினமலர்          22.10.2013

கருவேல மரங்கள் வளர்க்க தடை

மதுரை: மதுரை நகரில் தனியார் இடங்களில், நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட கருவேல மரங்களை வளர்க்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதற்கு முன் வளர்ந்திருந்தால், உடனே அகற்ற வேண்டும். இல்லையேல், மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டு, செலவுத் தொகையுடன் அபராதத் தொகையும் வசூலிக்கப்படும். குறைந்தபட்ச அபராத தொகையாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் இடங்களை தவிர, மாநகராட்சி மற்றும் அரசு சார்ந்த இடங்களில்தான், நிறைய கருவேல மரங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

மழை பாதிப்பை தவிர்க்க குழுக்கள் மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினமலர்          22.10.2013

மழை பாதிப்பை தவிர்க்க குழுக்கள் மாநகராட்சி கமிஷனர் தகவல்

கோவை :மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக மீட்பு பணி மேற்கொள்ளவும், நோய் பரவாமல் பாதுகாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் லதா தெரிவித்தார். மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது: மாநகராட்சி எல்லைக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்கும் ரோடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மழை காலம் முடியும் வரையிலும், பாதாள சாக்கடை, மழை நீர்வடிகால் பணிக்காக சாக்கடைகளை அடைப்பு ஏற்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் நிறைவு செய்யப்பட்ட பகுதிகளில், மழை நீர் வெளியேறுவதற்கு துவாரம் விடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் குப்பை கொட்டாமல் இருப்பதற்காக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வர்ணம் அடிக்கப்படுகிறது. சாக்கடைகளை தூர் வாருவதற்கு 665 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசரகால உடனடி மீட்பு பணிக்கு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ரோட்டில் மரம் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த தேவையான உபகரணங்களுடன் 24 மணி நேரமும் முன்னெச்சரிக்கையாக இருக்க குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.

 

கணினி பயிற்சி பெறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தேர்வு

Print PDF

தினமணி          21.10.2013

கணினி பயிற்சி பெறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தேர்வு

வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி பெறுபவர்களுக்கு நகராட்சி சார்பில் தேர்வு நடத்தப்பட்டது.

 போடி நகராட்சியில் தமிழக அரசின் பொன்விழா ஆண்டு சுவர்ணஜெயந்தி நகர்ப்புற வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் கணினி பயிற்சி, தனியார் கணினி பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்தப்படுகிறது. போடியில் கேட்கே, சி.எஸ்.சி. ஆகிய கணினி மையங்கள் மூலம் நடத்தப்படும் பயிற்சியில் 340 பெண்கள்  பயிற்சி பெற்றனர்.

 இவர்களுக்கு எம்.எஸ்.ஆபிஸ், டி.டி.பி, வெப் டிசைனிங், ஹார்டுவேர், 2டி, 3டி, டேலி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த பயிற்சி முறையாக நடைபெறுகிறதா என்பது குறித்து நகராட்சி சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 இதன்படி பயிற்சியில் பங்கேற்கும் பெண்களின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறது. பயிற்சி பெற்றபின் அவர்கள் முறையாக பயிற்சி பெற்றுள்ளனரா என்பதை அறிவதற்காக நகராட்சி சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான வினாத்தாள் நகராட்சி கணினி பிரிவு மூலம் தயாரிக்கப்பட்டது.

 இந்த தேர்வுகள் 6 பிரிவுகளாக நடத்தப்பட்டது. தேர்வுகளை போடி நகராட்சி ஆணையாளர் எஸ்.சசிகலா ஆய்வு செய்தார். அப்போது தினமணிக்கு அளித்த பேட்டி: அரசு சுய வேலைவாய்ப்புக்காக நிதி ஒதுக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை பெண்கள் முறையாக கற்று முழுமையான பலனடைய வேண்டும் என்பதற்காக நகராட்சி சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து பெண்களுக்கு ஃபேஷன் டெக்னாலஜி, தையல் வகுப்புகள் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

 தேர்வு ஏற்பாடுகளை போடி நகராட்சி சமுதாயத் திட்ட அலுவலர்கள் கே.தவமணி, ஏ.தணிக்கொடி, நகராட்சி கணினி பிரிவு அலுவலர்கள் மற்றும் கணினி பயிற்சி மைய நிர்வாகிகள் செயதிருந்தனர்.

 


Page 88 of 506