Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் நடந்தது ஈரோடு மாநகராட்சி மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

Print PDF

தினத்தந்தி           15.10.2013

மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் நடந்தது ஈரோடு மாநகராட்சி மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகராட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மல்லிகா பரமசிவம் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் மு.விஜயலட்சமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் மாநகராட்சியை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது ஆகியவை உள்பட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் மண்டல தலைவர்கள் ஆர்.மனோகரன், பி.கேசவமூர்த்தி, காஞ்சனா பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.சிவநேசன், நகர்ப்புற மேலாண்மை தனியார் நிறுவன உதவி மேலாளர் விவேக் பிரவேஷ், பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவக்கப்படும்: நகர்மன்றக் கூட்டத்தில் அறிவிப்பு

Print PDF

தினமணி           15.10.2013

தேனியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவக்கப்படும்: நகர்மன்றக் கூட்டத்தில் அறிவிப்பு

தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விரைவில் துவங்கும் என்று, தேனி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 இந்தக் கூட்டத்துக்கு, துணைத் தலைவர் காசிமாயன், ஆணையர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திட்டச் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். புதிய பஸ் நிலையப் பகுதியில் திட்டச் சாலை வரைபடம் மாற்றம் குறித்து எழுந்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். திட்டச் சாலை மற்றும் அணுகு சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, புதிய பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும். பழைய ஸ்ரீராம் திரையரங்கு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 4 ஆவது வார்டு பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சுடுகாட்டு இடத்தை மாற்றுப் பயன்பாட்டுக்கு விடவேண்டும். மீறு சமுத்திரம் கண்மாயை சீரமைக்க வேண்டும் என்று நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

 நகரின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.

 நகர்மன்றத் தலைவரின் பதில்: திட்டச் சாலை ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாரபட்சம், தயவுதாட்சண்யமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.

 மீறு சமுத்திரம் கண்மாயை சீரமைக்கவும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் ரூ. 8 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கண்மாயை நகராட்சி நிர்வாகம் வசம் ஓப்படைக்க பொதுப் பணித்துறையிடம் அனுமதி பெறும் பணி நடைபெற்று வருகிறது.

 நகராட்சி சார்பில் புதிதாக எரிவாயு தகனமேடை திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆவது வார்டில் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சுடுகாட்டை மாற்றுப் பயன்பாட்டுக்கு விடுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படுóம்.

 புதிய பஸ் நிலையப் பகுதியில் திட்டச் சாலை வரைபடம் மாற்றப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பழைய வரைபடத்தை பெற்று, அதன் அடிப்படையில் இப்பிரச்னையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளும்போது, சில இடங்களில் குடிநீர் பகிர்மானக் குழாய்கள் சேதமடைந்து விடுகின்றன. சேதமடைந்த குழாய்களை உடனுக்குடன் பழுது நீக்கி குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

கொசுக்​கள் உற்​பத்​தி​யா​கும் வகை​யில் நீரைத் தேக்​கி​ய​வர்களுக்கு ரூ.​ 14 லட்​சம் அப​ரா​தம் ​

Print PDF

தினமணி           15.10.2013

கொசுக்​கள் உற்​பத்​தி​யா​கும் வகை​யில் நீரைத் தேக்​கி​ய​வர்களுக்கு ரூ.​ 14 லட்​சம் அப​ரா​தம் ​

சென்​னை​யில் கொசுக்​கள் உற்​பத்​தி​யா​கும் வகை​யில் நீரைத் தேக்​கி​கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொண்​ட​வர்​க​ளி​டம் இருந்து இது​வரை ரூ.14 லட்​சம் அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது என சென்னை மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் தெரி​வித்​த​னர்.​

இது குறித்து மாந​க​ராட்சி அதி​கா​ரி​கள் கூறி​யது:​ ​

சென்​னை​யில் மலே​ரியா,​​ டெங்கு போன்ற நோய்​களை கட்​டுப்​ப​டுத்​தும் வித​மாக,​​ கொசு ஒழிப்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.​ இதன் ஒரு பகு​தி​யாக கொசுக்​கள் உரு​வா​கும் வகை​யில் கட்​டு​மா​னப் பணி​களை மேற்​கொள்​ப​வர்​க​ளி​டம் இருந்து இது​வரை சுமார் ரூ.​ 14 லட்​சம் வரை அப​ரா​தம் வசூ​லிக்​கப்​பட்​டுள்​ளது.​

மேலும்,​​ குடி​நீர் வாரி​யம்,​​ குடிசை மாற்று வாரி​யம்,​​ வீட்டு வசதி வாரி​யம் ஆகி​ய​வற்​றின் மூலம் நிறு​வப்​பட்டு பரா​ம​ரிப்​பின்றி உள்ள பிளாஸ்​டிக் தண்​ணீர் தொட்​டி​கள் சுத்​தம் செய்​யப்​பட்​டன என்​ற​னர்.​

அடை​யாறு மண்​ட​லத்​தில் தொடர் கொசு ஒழிப்பு நட​வ​டிக்​கை​கள் குறித்து மாந​க​ராட்சி வெளி​யிட்ட செய்தி:​ அடை​யாறு மண்​ட​லத்​தில் உள்ள 170,​ 171,​ 172,​ 174,​ 180 வார்​டு​க​ளில் தீவிர கொசு ஒழிப்பு நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ அந்​தப் பகு​தி​க​ளில் உள்ள வீடு​க​ளின் கிணறு,​​ தொட்​டி​க​ளில் கொசுப்​புழு வள​ரா​த​வாறு மருந்​து​கள் தெளிக்​கப்​பட்​டன.​

டெங்கு பாதித்த பகு​தி​க​ளில் தீவிர நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன.​ இந்த வார்​டு​க​ளில் மட்​டும் 468 டயர்​கள் அப்​பு​றப்​ப​டுத்​தப்​பட்​டன.​ மேலும் 394 இடங்​க​ளில் கொசுப்​புழு இருப்​பது கண்​ட​றி​யப்​பட்டு,​​ அவை அழிக்​கப்​பட்​டன.​

மொத்​தம் 3,741 வீடு​க​ளில் கொசு ஒழிப்பு விழிப்​பு​ணர்வு துண்டு பிர​சு​ரங்​கள் விநி​யோ​கிக்​கப்​பட்​டன.​ வீடு வீடா​கச் சென்று காய்ச்​சல் உள்​ள​வர்​க​ளைக் கண்​ட​றிந்து,​​ 56 பேரின் ரத்த மாதிரி பெறப்​பட்டு பரி​சோ​த​னைக்கு அனுப்​பப்​பட்​டன.​ இந்​தப் பணி​யில் 164 பணி​யா​ளர்​கள் ஈடு​ப​டுத்​தப்​பட்​ட​னர் என்று அதில் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.
 


Page 91 of 506