Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பேனர்களை உடனடியாக அகற்ற நகராட்சி உத்தரவு

Print PDF

தினமலர்          15.10.2013

பேனர்களை உடனடியாக அகற்ற நகராட்சி உத்தரவு

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்றைக்குள் (15ம் தேதி) அகற்ற வேண்டும் என, நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட வில்லை. எனவே, அவர்கள் இன்று (15ம் தேதி) மாலைக்குள் பேனர், கட் அவுட்களை அகற்றிக்கொள்ள வேண்டும்.அப்படி அகற்றாவிட்டால், சீனியர் எஸ்.பி., தலைமையில் அகற்றப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 15 October 2013 06:45
 

அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை : 5 டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல்

Print PDF

தினமலர்          15.10.2013

அனுமதியின்றி செயல்பட்ட தொழிற்சாலையில் சோதனை : 5 டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில் எவ்வித உரிமமும் பெறாமல் செயல்பட்ட, பிளாஸ்டிக் கேரி பேக் தொழிற்சாலையில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான,40 மைக்ரானுக்கு உட்பட்ட ஐந்து டன் பாலிதீன் கேரி பேக் பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முற்றிலும் ஒழிக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, கமிஷனர் செல்வராஜ் உத்தரவுப்படி, நகர் நல அலுவலர் செல்வக்குமார், உதவி கமிஷனர் கண்ணன், ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய குழு, 35வது வார்டு பகுதியில் திடீர் ஆய்வு நடத்தியது.

விஜயாபுரத்தை அடுத்துள்ள புதுப்பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கட்டப்பட்டிருந்த பெரிய கட்டடத்தில், "மருதர் பாலிமெர்ஸ்' என்ற பெயரில், பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. "நாப்தா' என்ற பாலிதீன் கவர் தயாரிப்புக்கான மூலப்பொருள், "பாலிதீன்' ரோல் தயாரிக்கும் மெஷின், பாலிதீன் ரோலில் இருந்து, பாலிதீன் கவர்களை வடிவமைக்கும் இரண்டு மெஷின்கள் பயன்படுத்துவது தெரியவந்தது.

இங்கு, மாநகராட்சியில் எவ்வித உரிமமும் பெறாமல், 40 மைக்ரானுக்கும் குறைவான பாலிதீன் கவர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆய்வு நடத்திய அதிகாரிகள், விற்பனைக்கு அனுப்ப வைத்திருந்த, ஐந்து டன் பாலிதீன் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

நகர்நல அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது:

வணிக வரித்துறையில் மட்டும், பர்பத்சிங் என்ற பெயரில் உரிமம் பெறப்பட்டு, பிளாஸ்டிக் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. விதிமுறைக்கு மாறாக, 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 19 மைக்ரான் அளவில், ஏழு விதமான அளவுகளில் பாலிதீன் கவர் தயாரிக்கப்படுகிறது.

அவற்றில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் நான்கு வகையான சாம்பிள் சேகரிக்கப்பட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பயன்படுத்தும் மெஷின்கள் குறித்த விவரங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரியப்படுத்தி, மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிமம் பெறாமல் இயங்குவதாலும், தடை செய்யப்பட்ட பாலிதீன் கவர்களை உற்பத்தி செய்ததாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி வக்கீலிடம் ஆலோசனை பெறப்படும். 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஐந்து டன் பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் செய்யப்பட்டு, மண்டல அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கை உறுதி செய்யப்பட்டதும், பிளாஸ்டிக் ரோடு அமைக்க பயன்படுத்தப்படும். சம்பந்தப்பட்டவர்களுக்கு, கோர்ட் மூலமாக தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

விரி­வாக்க பகு­தி­க­ளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடி­கால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாந­க­ராட்சி திட்ட அறிக்கை

Print PDF

தினமலர்          15.10.2013

விரி­வாக்க பகு­தி­க­ளுக்கு 1,133 கி.மீ., மழைநீர் வடி­கால்வாய் :ரூ.4,000 கோடிக்கு மாந­க­ராட்சி திட்ட அறிக்கை

சென்னை : விரி­வாக்க பகு­தி­களில், 1,133 கி.மீ., துாரத்­திற்கு, மழைநீர் வடி­கால்வாய் கட்ட திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதற்­காக, 4,000 கோடி ரூபாய் மதிப்பில், மாந­க­ராட்சி, விரி­வான திட்ட அறிக்­கையை தயா­ரித்து உள்­ளது. 67 சதவீதம்சென்­னையில், பழைய மண்­டல பகு­தி­களில், மத்­திய அரசின் ஜவ­ஹர்லால் நேரு தேசிய நகர்ப்­புற புன­ர­மைப்பு திட்­டத்தில், 747 கோடி ரூபாயில், மழைநீர் வடி­கால்வாய் பணிகள் நடந்து வரு­கின்­றன. அவற்றில், 67 சத­வீத பணிகள் முடிந்­துள்­ளன.

மீத­முள்ள பணி­களை, அடுத்த ஆண்டு மே மாதத்­திற்குள் முடிக்க திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது. அதை­ய­டுத்து, மாந­க­ராட்சி நடத்­திய ஆய்வில், விரி­வாக்க பகு­தி­களில், 1,133 கி.மீ., துாரத்­திற்கு மழைநீர் வடி­கால்வாய் அமைக்­கப்­பட வேண்டும் என, கணக்­கி­டப்­பட்­டு ள்­ளது.

இதில், மணலி, மாத­வரம், திரு­வொற்­றியூர் மண்­ட­லங்­களில் கொசஸ்­தலை ஆறு நீர்­பி­டிப்பு பகு­தி­களில், 435 கி.மீ., துாரத்­திற்கும், வள­ச­ர­வாக்கம், அம்­பத்துார் மண்­ட­லங்­களில் கூவம் ஆறு நீர்­பி­டிப்பு பகு­தி­களில், 190 கி.மீ., துாரத்­திற்கும், அடை­யாறு நீர்­பி­டிப்பு பகு­தி­க­ளான, ஆலந்துார், வள­ச­ர­வாக்கம் மண்­ட­லங்­களில், 85 கி.மீ., துாரத்­திற்கும், கோவளம் கால்வாய் நீர்­பி­டிப்பு பகு­தி­க­ளான பெருங்­குடி, சோழிங்­க­நல்லுார் மண்­ட­லங்­களில், 373 கி.மீ., துாரத்­திற்கும் மழைநீர் வடி­கால்வாய் அமைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

இதற்கு, 4,000 கோடி ரூபாய் வரை செல­வாகும் என்று கணக்­கி­டப்­பட்­டு உள்­ளது.

இந்த கால்வாய் பணி­க­ளுக்கு மாந­க­ராட்சி விரி­வான திட்ட அறிக்கை தயா­ரித்­துள்­ளது. நிதி ஒதுக்­கீடு கிடைத்த பின், விரி­வாக்க பகு­தி­களில் பணிகள் துவங்கும் என, அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

ஒத்திவைப்பு

இதற்­கி­டையே, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லையை ஒட்டி சில முக்­கிய சாலை­களில் போக்­கு­வ­ரத்து மாற்­றங்கள் அம­லாக இருப்­பதால், தற்­போது சென்­னையில் நடந்து வரும் மழைநீர் வடி­கால்வாய் பணி­களில், சில பணி­களை ஒத்தி வைக்க மாந­க­ராட்சி முடிவு செய்­து உள்­ளது.

எந்­தெந்த சாலை­களில் பணிகள் தாம­த­மாகும் என்­பது இறுதி முடிவு செய்­யப்­ப­ட­வில்லை என்றும் அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 


Page 92 of 506