Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

இறுதி கட்­டத்தில் பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது பட்­டியல்

Print PDF

தினமலர்          15.10.2013

இறுதி கட்­டத்தில் பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது பட்­டியல்

ராய­புரம் ரயில் நிலையம் உள்­ளிட்ட, 66 பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது பட்­டி­யலை அர­சுக்கு அனுப்­பு­வ­தற்­கான பணிகள், இறுதி கட்­டத்தை அடைந்­துள்­ளன. இதுகுறித்து, வரும், 15ம் தேதி நடக்கும் குழும கூட்­டத்தில் முக்­கிய முடி­வுகள் எடுக்­கப்­பட உள்­ள­தாக தெரியவந்­துள்­ளது. சென்னை பெரு­நகர் வளர்ச்சி குழு­மத்தில் (சி.எம்.டி.ஏ.,) பாரம்­ப­ரிய கட்­ட­டங்கள் பாது­காப்பு குழு அமைக்­கப்­பட்­டது. கடந்த, 2010ம் ஆண்டு இந்த குழு­வினர் கணக்­கெ­டுப்பை துவக்­கினர்.

இதில் தெரி­ய­வந்த விவ­ரங்கள் அடிப்­ப­டையில், 350 கட்­ட­டங்கள் ஆய்வு செய்து, முதல் கட்­ட­மாக, 66 கட்­ட­டங்கள் அடங்­கிய வரைவு பட்­டியல் இறுதி செயப்­பட்­­டது.சி.எம்.டி.ஏ., இணை­ய­ த­ளத்தில் ஜூன் மாதம் இந்த பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டது. முதல் பட்­டி­யலில், ராய­புரம் ரயில் நிலையம், ஐகோர்ட், அண்ணா பல்­கலை பிர­தான கட்­டடம், திரு­வான்­மியூர் மருந்­தீஸ்­வரர் கோவில் உள்­ளிட்ட, 20 கட்­ட­டங்கள் முதல் நிலை கட்­ட­டங்­க­ளாக வகை­ப­டுத்தப் பட்­டுள்­ளன.
வரவில்லை இதன் மீது பொது மக்கள் தங்கள் கருத்­து­களை ஜூலை, 15ம் தேதிக்குள் தெரி­விக்க வேண்டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், எதிர்­பார்த்­த­தை­விட குறைந்த எண்­ணிக்­கை­யி­லேயே பொது மக்­க­ளிடம் இருந்து கருத்­துகள் வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இதை அடுத்து, பொது மக்கள், கட்­ட­டங்­களின் உரி­மை­யா­ளர்கள் தெரி­வித்த கருத்­துக்கள் அடிப்­ப­டையில், அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டு குழும கூட்­டத்தில் தாக்கல் செய்­யப்­பட வேண்டும். இதற்கு குழும கூட்­டத்தில் ஒப்­புதல் கிடைத்­தபின், அரசின் ஒப்­பு­த­லுக்கு அனுப்­பட்டு பாரம்­ப­ரிய கட்­ட­டங்­களின் முத­லா­வது இறுதி பட்­டியல் அர­சி­தழில் வெளியி­டப்­படும் என்­பது சி.எம்.டி.ஏ.,வின் நடை­மு­றை­யாக உள்­ளது.

இறுதி கட்­டத்தில்...இதுகுறித்து சி.எம்.டி.ஏ., உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: இந்த நடை­மு­றை­யின்­படி, முத­லா­வது வரைவு பட்­டியல் குறித்த கருத்­துக்கள் தொகுக்­கப்­பட்டு இறுதி அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இது வரும், 15ம் தேதி நடக்க உள்ள குழும கூட்­டத்தில் தாக்கல் செய்­யப்­பட்டு, இறுதி ஒப்­பு­த­லுக்­காக அர­சுக்கு விரைவில் அனுப்­பப்­படும். அதன் பின், 66 கட்­ட­டங்கள் பாரம்­ப­ரிய கட்­ட­டங்­க­ளாக அதி­கா­ரப்­பூர்­வ­மாக அர­சி­தழில் அறி­விக்­கப்­படும்.

சுமார், 50 பாரம்­ப­ரிய கட்­ட­டங்கள் அடங்­கிய இரண்­டா­வது வரைவு பட்­டியல் இறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதுகுறித்து கட்­ட­டங்­களின் உரி­மை­யா­ளர்கள், நிர்­வா­கிகள் ஆகி­யோ­ரிடம் தனித்­த­னி­யாக கருத்­து­களை பெறு­வ­தற்­கான கடி­தங்கள் அனுப்­பப்­பட உள்­ளன.பொது மக்கள் கருத்­துக்­களை பெறு­வ­தற்­காக இந்த வரைவு பட்­டி­யலும் விரைவில் வெளி­யி­டப்­படும். இவ்­வாறு, அவர் கூறினார்.

 

3 கடைகளில் ஒரு டன் கேரி பேக் பறிமுதல் : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

Print PDF

தினமலர்          12.10.2013

3 கடைகளில் ஒரு டன் கேரி பேக் பறிமுதல் : சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

திருப்பூர் : திருப்பூர் சிக்கண்ண செட்டியார் வீதியில் மூன்று கடைகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று ஆய்வு செய்து, ஒரு டன் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத் துறையினர், நேற்று காலை, சிக்கண்ண செட்டியார் வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர். பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை செய்யும் மூன்று கடைகளில் மட்டும், ஒரு டன் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில், பாதியளவு, மறு சுழற்சி செய்த கலர் கேரி பேக்குகளாவும், 17 மைக்ரானுக்கும் குறைவாகவும் இருந்தது.

அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறையினர், அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள் இருந்த, மருதம் பிளாஸ்டிக் நிறுவனத்துக்கு 3,000 ரூபாய், மற்ற இரு கடை உரிமையாளர்களுக்கு தலா 1,500 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், ஏழு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்ததோடு, பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர்.

கடும் நடவடிக்கை இல்லாததே காரணம்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினமும் 550 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 350 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளன. மண்ணுக்கும், சுற்றுஸ் சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை, திருப்பூர் நகர பகுதிகளில் அபரிமிதமாக பயன்படுத்தப்படுவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில், கடுமையான நடவடிக்கை இல்லாததே இதற்கு காரணம்.

அதிகாரிகள் ஆய்வு செய்தாலும், குறைந்த தொகையே அபராதமாக விதிக்கப்படுவதால், சில கடைக்காரர்கள் பொருட்படுத்துவதில்லை. எத்தனை முறை "ரெய்டு' நடத்தினாலும், மீண்டும், மீண்டும் அதே தவறுகளை தொடர்கின்றனர். கடைகளுக்கு "சீல்' வைத்தல், கிரிமினல் நடவடிக்கை, சிறை தண்டனை விதித்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள, மாநகராட்சியோ அல்லது மாவட்ட நிர்வாகமோ முயற்சிப்பதில்லை.

நகர் நல அலுவலர் செல்வகுமார் கூறுகையில்,""பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

40 மைக்ரானுக்கு குறைவானது என்பதை உறுதி செய்ய, கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

"தற்போது பறிமுதல் செய்யப்பட்டவையும் அனுப்பி வைக்கப்படும். குறைவான மைக்ரான் என உறுதி செய்ததும், பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு எதிராகவும், பொது சுகாதார சட்டத்தின் கீழும் வழக்கு தொடரலாம். அதற்கு, மன்ற அனுமதி பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கமிஷனர் செல்வராஜிடம் கேட்டபோது, ""எத்தனை முறை சோதனை நடத்தினாலும், மீண்டும் மீண்டும் விற்பனை செய்து, நகரை நாசம் செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை திருப்பூரில் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி வருகின்றனர். 40 மைக்ரானுக்கு உட்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துக் கூடாது என்பது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

விற்பனையாளர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளோம்,''என்றார்.

 

கீழக்கரையில் பாலிதீன் பைகளை ஒழிக்க மீண்டும் நடவடிக்கை: நகராட்சித் தலைவர்

Print PDF

தினமணி          08.10.2013

கீழக்கரையில் பாலிதீன் பைகளை ஒழிக்க மீண்டும் நடவடிக்கை: நகராட்சித் தலைவர்

கீழக்கரையில் பாலிதீன் பைகளைஒழிக்க மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹாஜாமைதீன்,நகராட்சி அலுவலர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் திண்ணாயிரமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் அறிவழகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

ஜெயபிரகாஷ்: நகராட்சியில் குறிப்பிட்ட 2 நபர்கள் மட்டுமே பெரும்பாலான டெண்டர் பணிகளை எடுக்கின்றனர். எடுத்த பணிகளை முடிக்கவே இல்லை. இந்த நிலையில் புதிய பணிகளும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது. இதுமிகவும் தவறானது.

தலைவர்: பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் சட்ட விதிமுறையின்படி டெண்டர் பணிகளை எடுக்கின்றனர். குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை நிறைவேற்ற வேண்டும். இன்னும் 2 மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னரும் முடிக்காவிட்டால் டெண்டர் பணியை ரத்துசெய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயபிரகாஷ்: ரூ.55 லட்சம் வரை பணிகளை எடுத்து முடிக்காத 2 ஒப்பந்ததாரர்கள் மீது தடைவிதிக்க வேண்டும். ரூ.1 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டப்பணிக்காக இதுவரை ரூ.95 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 50 சதவீதம் கூட பணிகள் முடிவடையவில்லை. நகராட்சியின் வரவுசெலவு அறிக்கையை கூட்டத்தில் தாக்கல் செய்யவேண்டும்.

துணைத்தலைவர்: நகராட்சி தலைவரின் சார்பில் நிர்வாகத்தில் வேறுயாரும் தலையிடக் கூடாது.

தலைவர்: மன்றத்தில் இல்லாதவர்களை பற்றி துணைத்தலைவர் பேசுவது கண்டிக்கத்தக்கது. ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கீழக்கரை நகர்முழுவதும் ரூ.5 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும். விநியோக குழாய்களும் மாற்றப்படும். இந்தப் பணிகள் முடிந்ததும் மேலும் நிதி ஒதுக்கீடு பெற்று தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படும். பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் செய்யது கருணைபாவா,சாகுல்ஹமீது, அஜ்மல்கான், ரபியுதீன், முகைதீன் காதர், சித்திக்அலி, அன்வர்அலி, ஹாஜாநஜ்முதீன், அரூஸியா, மீனாள், ஜரினா, மீராபானு, தாஜின்அலிமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 93 of 506