Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சேலம் தோப்புக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஒடை ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி           04.10.2013

சேலம் தோப்புக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஒடை ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சேலம் தோப்புக்காட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

ஓடை பகுதியில் ஆக்கிரமிப்பு

ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து மழை நீர் சாரதா கல்லூரியை ஒட்டி உள்ள ஓடை வழியாக பள்ளப்பட்டி ஏரியிலும், திருமணி முத்தாற்றிலும் கலக்கிறது. ஆனால் ஓடையில் பல இடங்களில் அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் மழை நீர் அருகில் உள்ள வீடுகளுக்கு புகுந்தது.

சமீபத்தில் ஏற்காட்டில் பெய்த பலத்த மழையின் போது மழைநீர் கரைப்புரண்டு வந்தது. அப்போது ஓடை பகுதியில் ஏற்பட்ட அடைப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணங்களால் தோப்புக்காடு பகுதியில் வசிக்கும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர்.

வீட்டுமனைகளாக

இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் அசோகன், தோப்புக்காடு பகுதியில் உள்ள கிளை ஒடையை தூர்வாரி ஆழப்படுத்தி தங்கு தடையின்றி மழை நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தூர்வாரும் பணியில் ஈடுபடும் போது, அந்த பகுதியில் இரண்டாக பிரிந்து செல்லும் ஓடையில், ஒரு கால்வாய் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனையாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பொறியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து நிலத்தை அளவீடு செய்து அறிக்கை தாக்க செய்ய உத்தரவிட்டார். அந்த குழுவினர் நிலத்தை அளவீடு செய்யும் போது, 60 அடி அகலமும், 341 அடி நீளமும் கொண்ட ஓடை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு, மண்ணால் மூடப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்து உறுதி செய்யப்பட்டது.

ரூ.5 கோடி மதிப்பில்

இதையடுத்து ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை ஆக்கிரமிப்பு நிலம் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் அந்த பகுதியில், ஓடை பகுதியில் உள்ள மண் அகற்றப்பட்டு மாநகராட்சி மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுவதற்கும், வாய்க்காளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பணிகளை மேயர் சவுண்டப்பன், ஆணையாளர் அசோகன், துணை மேயர் நடேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

 

திருவேற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினத்தந்தி           04.10.2013

திருவேற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களை உபயோகிக்கக் கூடாது. இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்று முடித்து விட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் முடிவடைந்தநிலையில் நேற்று திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 9–வது வார்டில் உள்ள கடைகள், ஓட்டல்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பணி நகராட்சி கமிஷனர் சங்கர்(பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.

அப்போது நகரமன்றத்தலைவர் மகேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை நிலம் மீட்பு சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர்             04.10.2013 

ரூ.5 கோடி மதிப்பிலான ஓடை நிலம் மீட்பு சேலம் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சேலம்: சேலம் தோப்புக்காட்டில், ஆக்கிரமிக்கப்பட்ட, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஓடை நிலத்தை, மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

ஏற்காடு மலைப்பகுதியில், கனமழை பெய்யும்போது, மழை நீர் முழுவதும் சாரதா கல்லூரியை ஒட்டியுள்ள ஓடையின் வழியாக சென்று, பள்ளப்பட்டி ஏரியிலும், திருமணிமுத்தாற்றிலும் கலக்கும். சமீபகாலமாக தோப்புக்காடு பகுதியில், கிளை ஓடையில் தண்ணீர் செல்லும் பாதையை சிலர் முற்றிலும் ஆக்கிரமித்து, அங்கு மண்ணை கொட்டி நிலம் போல் மாற்றிவிட்டனர். மழை நீர் செல்லாமல், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அந்த ஆக்கிரமிப்பு ஓடையில் உள்ள மண்ணை அகற்றுமாறு, கமிஷனர் அசோகன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, ஓடையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இன்ஜினியர்கள் ஆய்வு செய்து, 60 அடி அகலமும், 341 அடி நீளமும் கொண்ட நீரோடை முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மண்ணால் மூடப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது உறுதியானது. கமிஷனர் உத்தரவின் படி, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஓடை நிலம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கு கால்வாய் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி நடவடிக்கையால், தோப்புக்காடு பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

 


Page 96 of 506