Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விதிமீறி விற்பனை: இறைச்சி பறிமுதல்

Print PDF

தினமணி           03.10.2013

விதிமீறி விற்பனை: இறைச்சி பறிமுதல்

பழனியில் விதியை மீறி விற்பனை செய்த இறைச்சிகளை இறைச்சி கடைகளில் இருந்து நகராட்சியினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அக்.2ம் தேதி எந்தவித விலங்கினங்களையும் இறைச்சிக்காக வதை செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பழனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆணையர் சரவணக்குமார் உத்திரவின் பேரில், நகர்நல அலுவலர் பொற்கொடி, சுகாதார ஆய்வாளர்கள் நாட்ராயன், சேகர், மணிகண்டன், செந்தில்குமார், ராமசுப்ரமணியன் ஆகியோர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பல இடங்களிலும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், மார்க்கெட்டில் இருந்த மீன் மார்க்கெட் பகுதியில் மீன் விற்பனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டு, உரக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.

 

100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி           03.10.2013

100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட கடைகளில் 100 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பைகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
  • திருத்தணி நகராட்சியில் பிளாஸ்டிக் பைகள், கப்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் நகராட்சிக்குள்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
  • இதன்பேரில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், துப்புரவு ஆய்வாளர் லட்சுமி கணேசன் தலைமையிலான அலுவலர்கள் புதன்கிழமை அங்குள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • திருத்தணி - அரக்கோணம் சாலை, கந்தசாமி தெரு, சன்னதி தெரு, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • இதில் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • இனி இது போன்ற பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடைகளுக்கு சீல் வைப்பு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணையர் கடுமையாக எச்சரித்தார்.
 

திருவேற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினத்தந்தி           03.10.2013

திருவேற்காடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களை உபயோகிக்கக் கூடாது. இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்று முடித்து விட வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

கால அவகாசம் முடிவடைந்தநிலையில் நேற்று திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 9–வது வார்டில் உள்ள கடைகள், ஓட்டல்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யும் பணி நகராட்சி கமிஷனர் சங்கர்(பொறுப்பு) தலைமையில் நடைபெற்றது.

அப்போது நகரமன்றத்தலைவர் மகேந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்த 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 


Page 98 of 506