Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மாநகராட்சி பகுதிகளில் தொழில் வரி25 சதவீதம் உயர்த்த திட்டம்

Print PDF

தினகரன்             01.10.2013

மாநகராட்சி பகுதிகளில் தொழில் வரி25 சதவீதம் உயர்த்த திட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் 25 சதவீதம் தொழில் வரியை உயர்த்த திட்டமிடப்பட்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை கவுன்சிலர் ராதாமணி பாரதி வெளிநடப்பு செய்தார்.

ஈரோடு மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. இதில் 15வது தீர்மானமாக தொழில் வரியை உயர்த்துவது குறித்து தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அதில் மாநகராட்சியில் கடந்த 1.10.2008ல் தொழில்வரி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி சட்டத்தின்படி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்வரியை திருத்தியமைக்க வேண்டும் என்று உள்ளது. தற்போது 5 ஆண்டு முடிவடைந்த நிலையில் தொழில்வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அரையாண்டிற்கு 21 ஆயிரம் ரூபாய் வரை தொழில் வரி இல்லை. 21,001 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை 94 ரூபாயும், 30 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை 235 ரூபாயும், 45 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை 469 ரூபாயும், 60 ஆயிரத்து ஒரு ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை 704 ரூபாயும், 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் 938 ரூபாயும் தொழில் வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விதிக்கப்பட்ட தொழில் வரியில் இருந்து குறைந்த பட்சம் 25 சதவீதத்திற்கு குறையாமலும், அதிகபட்சம் 35 சதவீதத்திற்கு மிகாமலும் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டு மாமன்ற ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில், 201314ம்ஆண்டில் மாநகராட்சிக்கு தொழில் வரி மூலமாக 1.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

25 சதவீதம் உயர்த்துவதால் ஆண்டுக்கு 46 லட்ச ரூபாய் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்தபட்சம் 25 சதவீதம் வரியை உயர்த்த வேண்டும் என்று மாநகராட்சி சட்டத்தில் உள்ளது என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி 27வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் ராதாமணி பாரதி பேசும்போது, ஈரோட்டில் ஜவுளி மற்றும் அதனை சார்ந்த தொழில் நலிவடைந்துள்ள நிலையில் தற்போது தொழில்வரி உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும். வணிக பகுதியான எனது வார்டில் கடந்த 2 ஆண்டுகளில் எவ்விதமான வளர்ச்சி திட்டப்பணியும் செய்யவில்லை. எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காத நிலையில் தொழில் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன் என்றார்.

மாநகராட்சி கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்த கவுன்சிலர் ராதாமணிபாரதி சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்து விவாதத்தில் கலந்து கொண்டார். மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறுகையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் 10 சதவீதம் வரை வரியை உயர்த்தலாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

விதிமுறை மீறி கட்டப்பட்ட 190 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

Print PDF

தினகரன்             01.10.2013

விதிமுறை மீறி கட்டப்பட்ட 190 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

சேலம்: சேலத்தில் விதிமுறை மீறி கட்டியுள்ள 190 கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சாலைபாதுகாப்பு குறித்த ஆலோ சனைக் கூட்டம் கலெக்டர் மகரபூஷணம் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், கோட்டாட்சியர் சதீஷ், எஸ்பி சக்திவேல், போலீஸ் துணை கமிஷனர் பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சேலம் 4 ரோட்டில் இருந்து தம்மண்ணசெட்டிரோடு செல்லும் பாதையில் பஸ்கள் செல்ல தடைவிதிக்கப்படுமா? என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அதிகாரிகள், அவ்வாறு தடை விதிக்க முடியாது. ஆனால் சாலையோரம் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்று பதில் அளித்தனர்.

சேலம் மாநகரில் ஒரு மாடிக்கு மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு பல மாடிகள் கொண்ட வீடு கட்டுகின்றனர். ஆனால் பார்க்கிங் வசதி இல்லை. குடியிருப்பு பகுதிகளில் வணிக கட்டடங்கள் கட்ட தடை விதிக்கப்படுமா? கோவையை போல சீல் வைக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், Ôசேலம் மாநகரில் 190 கட்டடங்கள் அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களுக்கு 30 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளதுÕ என்றனர்.

துணை கமிஷனர் பாபு கூறுகையில், ‘மாநகரில் விபத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரை விட மாவட்டத்தின் பிற பகுதிகளில் தான் விபத்துக்கள் அதிகமாக நடக்கிறது. அப்பகுதி குறைகளையும் உறுப்பினர்கள் தெரிவிக்க வேண்டும்Õ என்றார்.மாவட்ட எஸ்பி சக்தி வேல் பேசுகையில், Ôஓமலூர், ஆத்தூர், சங்ககிரி பைபாஸ் சாலைகளில் விபத்து அதிகமாக நடக்கிறது. டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி விபத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுÕ என்றார். சேலம் மாநகரில் ஹெல் மெட் அணியாமல் டூவீலர் ஓட்டிச்சென்றதாக 29,978 வழக்குகளும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிச்சென்றதாக 649 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் அரசு செயலாளர் ஆய்வு

Print PDF
தினகரன்             01.10.2013

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் அரசு செயலாளர் ஆய்வு


கோவை: நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர் பனீந்திரரெட்டி கோவை மாநகர வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் வேலுச்சாமி, ஆணையாளர் லதா மற்றும் அலுவலர்களுடன் கோவை மாநகராட்சி கருத்தரங்க கூட்ட அரங்கில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், கட்டிட கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதை தடுக்கவும், குப்பைகள் குப்பைத் தொட்டியிலிருந்து கீழே விழுவதற்குள் எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு திட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வுக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் லதா, துணை ஆணையர் சிவராசு, மாநகரப் பொறியாளர் சுகுமார், நகர்நல அலுவலர் அருணா மற்றும் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் கலந்துகொண்டு மாநகர வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து தெரிவித்தார்கள்.
 


Page 99 of 506